தினமும் லிட்டர் கணக்கில் பால் குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக அனைவருக்கும் பால் குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று தான் தெரியும். ஆனால் அந்த பாலை குடித்தால் ஏதாவது பிரச்சனைகள் உடலில் ஏற்படுமா என்று யாராவது யோசித்ததுண்டா? ஆம், எவ்வளவு தான் ஆரோக்கியமான உணவுப் பொருளாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக போனால், எந்த ஒரு உணவுப் பொருளும் உடலில் பிரச்சனைகளை வரவழைக்கும்.

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்!!!

அதேப்போல் தான் பாலை ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அது உடலில் பல உடல்நல உபாதைகளை ஏற்படுத்தும். அதிலும் தற்போதைய மாட்டுப்பால் மிகவும் மோசமானது என்றே சொல்லலாம். ஏனெனில் மாடுகள் நிறைய பாலைக் கொடுக்க வேண்டுமென்று, அதற்கு ஒருசில ஊசிகளைப் போடுகின்றனர். அப்படி மாடுகளுக்கு போடப்படும் ஊசியால் சுரக்கப்படும் பாலை பருகும் போது, அதனால் உடல்நலம் மோசமாக பாதிக்கப்படும்.

வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

சரி, இப்போது ஒரு நாளில் மாட்டுப் பாலை அளவுக்கு அதிகமாக பருகுவதால் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய்வுத் தொல்லை

வாய்வுத் தொல்லை

பாலை அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அவை குடலில் அல்லது வயிற்றில் வாய்வை அதிகரித்துவிடும். ஏனெனில் பாலில் உள்ள லாக்டோஸ், செரிமான மண்டலத்திற்கு எரிச்சலை ஏற்படுத்துவதால், அவை வயிற்றில் வாய்வை அதிகரித்துவிடுகிறது. இதனால் தான் சிலருக்கு பாலை அளவுக்கு அதிகமாக குடித்த பின்னர், வயிற்று உப்புசமாக இருப்பது போல் உணர்கிறார்கள்.

குமட்டல்

குமட்டல்

சிலர் அளவுக்கு அதிகமாக பால் குடிக்கும் போது, குமட்டல் வருவது போல் உணர்வார்கள். இதற்கு காரணமும் பாலில் உள்ள லாக்டோஸ் தான். அதிலும் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் இருப்பவர்கள் பால் அல்லது பால் பொருட்களை உட்கொண்ட பின்னர், உடனே அவர்களின் செரிமான மண்டலத்தில் பிரச்சனைகளானது ஆரம்பமாகிவிடும். சிலருக்கு குமட்டல், வாந்தி போன்றவையுடன், தலை மற்றும் நெஞ்சில் ஒருவித சொல்ல முடியாத தொந்தரவு கொடுப்பது போன்ற உணர்வு, தலை வலி, தலைச் சுற்றல் போன்றவையும் ஏற்படும்.

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய்

மாடுகள் அதிகமாக பால் சுரக்க வேண்டுமென்று போடப்படும் ஊசியால் உற்பத்தி செய்யப்படும் பாலை பெண்கள் அதிக அளவில் பருகும் போது, அவை பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

அடிவயிற்று உப்புசம்

அடிவயிற்று உப்புசம்

பொதுவாக பால் குடித்த பின்னர் வயிறு நிறைந்துவிட்டது போல் இருக்கும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாக குடிக்கும் போது, அதிகப்படியான லாக்டோஸ் எடுத்துக் கொள்வதால், அடிவயிற்று உப்புசம் ஏற்படும். எப்படியெனில் லாக்டோஸ் அதிக அளவில் இருந்தால், அது பெருங்குடலில் சரியாக செரிமானமாகாமல், அது அப்படியே சிறு குடலுக்குள் சென்றுவிடும். அப்படி செல்லும் லாக்டோஸ் நிச்சயம் சிறுகுடலில் உற்பத்தி செய்யப்படும் லாக்டேஸ் என்னும் நொதியால் செரிமானமாகும். ஆனால் லாக்டோஸ் அதிக அளவில் இருந்தால், சிறுகுடலால் லாக்டேஸ் என்னும் நொதியை உற்பத்தி செய்ய முடியாமல் போய்விடும். இதனால் அடிவயிற்றில் உப்புசம் ஏற்படுவதோடு, எடை குறைவு, கடுமையான வயிற்று வலி மற்றும் மலத்தில் இரத்தம் வரக்கூடும்.

குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்கும்

குழந்தைகளுக்கு இரத்த சோகையை உண்டாக்கும்

ஆம், பாலில் இரும்புச்சத்து குறைவாக உள்ளது. எனவே அத்தகைய பாலை குழந்தைகள் அதிக அளவில் குடித்தால், அவர்கள் வயிறு நிறைந்து, அவர்கள் மற்ற உணவுகளை எடுத்துக் கொள்ள மறுப்பார்கள். இதனால் அவர்களின் உடலில் இரத்தணுக்களின் அளவு குறைந்து, இரத்த சோகை வரக்கூடும். இப்படி அவர்களுக்கு இரத்த சோகை முற்றி இருந்தால், அவர்களின் சருமம் வெளிர் நிறமாகி, அதிகப்படியான சோர்வு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.

சுவாச பிரச்சனை

சுவாச பிரச்சனை

பாலை அளவுக்கு அதிகமாக குடித்தால், கபம் அதிகரித்து, இதனால் சுவாசப் பிரச்சனையை சந்திக்கக்கூடும். அதிலும் இது அனைத்து வகையானது பாலுக்கும் பொருந்ததாது. ஊசிகள் பயன்படுத்தப்படும் மாட்டுப்பாலை குடித்தால், அதில் உள்ள குறிப்பிட்ட புரோட்டீனானது கபத்தின் உற்பத்தியை தூண்டி, சுவாசப் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த சளியானது முற்றிய நிலையில் இருமல் மற்றும் சைனஸ் போன்றவை ஏற்படும்.

அலர்ஜி

அலர்ஜி

சிலருக்கு மாட்டுப்பால் அலர்ஜியை ஏற்படுத்தும். இதற்கு காரணம் அதில் உள்ள மோசமான புரோட்டீன் தான். இந்த கடுமையான புரோட்டீனுடன் நோயெதிர்ப்பு மண்டலமானது எதிர்த்துப் போராடும் போது, உடலில் அலர்ஜி ஏற்படுகிறது. அதிலும் மூச்சுத் திணறல், அரிப்பு, கண்களில் இருந்து நீர் மற்றும் சருமத்தில் ஆங்காங்கு சிவப்பு நிற புள்ளிகள் என எது வேண்டுமானால் ஏற்படலாம்.

என்ன நண்பர்களே! இனிமேல் ஒவ்வொரு நாளும் பாலை டம்ளர் டம்ளராக குடிக்கப் போகிறீர்களா?

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Severe Side Effects Of Milk

Are you interested in gulping down glasses of milk everyday? Then here are the milk side effects that one should beware of before its consumption!
Subscribe Newsletter