உடல் எடையை குறைக்க வேண்டுமானால் கைவிட வேண்டிய 7 பழக்கவழக்கங்கள்!!!

Posted By: Ashok CR
Subscribe to Boldsky

உடல் எடை குறைப்பு என்றாலே கடினமான வேலையே. அதனை அடைய நினைக்கும் அனைவரும் இதனை மறுப்பில்லாமல் ஒப்புக் கொள்வார்கள். உடல் எடையை குறைப்பதற்கு சில உணவுகளை கைவிட்டால் மட்டும் போதாது. மாறாக சில பழக்கவழக்கங்களை கைவிடுவதும் கூட முக்கியமானதாகும்.

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

தீவிர உடற்பயிற்சிகளை மேற்கொள்வதை தவிர, சில வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கைவிடுவதும் அதீத முக்கியமாகும். உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் கைவிட வேண்டிய பழக்கவழக்கங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். உடல் எடையை குறைக்கும் போராட்டத்தில் முக்கிய இடையூறாக இருக்கும் சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களின் மீது தான் நாம் கவனம் செலுத்த போகிறோம்.

உடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான இந்திய காலை உணவுகள்!!!

அதனால் உடல் எடையை குறைக்க மட்டுமே இந்த பழக்கவழக்கங்களை கைவிட வேண்டும் என்பது இல்லை. உடலில் பிற சிக்கல்களை தவிர்க்கவும் கூட இவைகளை கைவிட வேண்டியது அவசியமாகும். அதனால் இவைகளை படித்து தெரிந்து கொண்டு, இந்த பழக்கங்களை முதலில் கைவிடும் வழியைப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உணவை தவிர்ப்பது

உணவை தவிர்ப்பது

உடல் எடையை குறைக்க வேண்டுமானால் உணவு உண்ணாமல் தவிர்ப்பது கண்டிப்பாக சிறந்த தேர்வாக இருக்காது. இதன் அடிப்படையில், காலை உணவை தவிர்ப்பதை போன்ற சீரழிவு வேறு எதுவும் இல்லை. உடல் பருமனுக்கு எதிராக நீங்கள் போராடி கொண்டிருந்தால், காலை உணவை தவிர்ப்பது என்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

அதிகப்படியாக மது அருந்துவது

அதிகப்படியாக மது அருந்துவது

அதிகப்படியாக மது அருந்துவது உடல் எடையை குறைக்க எந்த விதத்திலும் உதவாது. அதிகப்படியாக குடிப்பதால் ஏற்படும் பிரச்சனை என்னவென்று தெரியுமா? மெட்டபாலிசம் பாதிப்படையும், கலோரிகள் அதிகரிக்கும். மேலும் அதிகப்படியாக குடிப்பதால் உடல் எடையை குறைப்பதற்கு பெரிய முட்டுக்கட்டையாய் இருப்பது என்னவென்று தெரியுமா? சர்க்கரை உட்கொள்ளளவு அதிகரிக்கும். இது உடல் எடை குறைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த உடல்நலத்தையும் பாதிக்கும்.

மிகவும் பிடித்த உணவுகளை தவிர்ப்பது

மிகவும் பிடித்த உணவுகளை தவிர்ப்பது

உடல் எடை குறைப்பிற்கான உளவியலுக்கும் இதற்கும் அதிக தொடர்பு உள்ளது. இப்படி உங்களுக்கு பிடித்த உணவிற்கு நீங்கள் தடை போட்டால் அதன் பிடியில் இருந்து நீங்கள் விடுபடலாம். ஏதோ ஒரு தருணத்தில் உங்களுக்கு பிடித்த உணவை நீங்கள் உட்கொண்டு தான் இருப்பீர்கள். ஆனால் அதனை நீண்ட காலமாக நீங்கள் தவிர்த்து வந்தால், உடல் எடை குறைப்பிற்கான போராட்டத்தில் அதிக இழப்பை அடையப் போவது நீங்கள் தான்.

அதிகமாக தூங்குதல்

அதிகமாக தூங்குதல்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருப்பவர்களுக்கு மிகப்பெரிய எமனாக இருப்பது அளவுக்கு அதிகமான தூக்கமாகும். இது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை குறைத்து சர்க்கரை நோய்க்கான இடர்பாட்டை அதிகரிக்கும்.

அதிகமான இரவு உணவு

அதிகமான இரவு உணவு

இரவின் போது அதிகமாக உண்ணும் போது, அந்த உணவுகள் அனைத்தும் கொழுப்பாக உங்கள் உடலில் தேங்கி விடும். இரவு உணவின் போது கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தவிர்க்கவும். அப்போது தான் உடல் எடை குறைப்பிற்கு நீங்கள் படும் கஷ்டங்கள் பலனை அளிக்கும்.

உப்பு

உப்பு

விரும்பத்தகாத தண்ணீர் தக்க வைக்கும் திறனை உப்பு கொண்டுள்ளது. அதனால் உடல் எடை குறைப்பிற்கான உங்கள் போராட்டத்தில் இது அதிக சவால்களையே ஏற்படுத்தும். மேலும் அதிக அளவில் உப்பை சேர்த்து கொள்கையில் உடல் எடையை அதிகரிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் இன்னும் பல ஆபத்துக்களை உடலுக்கு ஏற்படுத்தும். அதிக உப்பை சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் முக்கிய பிரச்சனை - இரத்த கொதிப்பு.

சர்க்கரை பொருட்கள்

சர்க்கரை பொருட்கள்

கடைசியாக, ஆனால் முக்கியத்துவமற்றது அல்லாத சர்க்கரை பொருட்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவுகளிலேயே மிகவும் மோசமானது சர்க்கரை சம்பந்தப்பட்ட உணவுகளே. இது புற்றுநோய் அணுக்களுக்கு உணவை அளித்து உடல் எடை குறைப்பிற்கான முயற்சியை பாழாக்கி விடும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Habits You Must Give Up If You Wish To Lose Weight

These are habits you must be giving up in order to keep several health complications at bay as well. So let us go ahead and look at these habits to give up for weight loss. Here are 7 things you should give up for weight loss. Read on...
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more