For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடற்பயிற்சி செய்வதால் உடலுக்கு கிடைக்கும் 20 நன்மைகள்!!!

By Super
|

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான். ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று.

ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல்நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற்பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் 20 நன்மைகளை பார்க்கலாமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மன ஆரோக்கியம்

மன ஆரோக்கியம்

தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும். மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மன நோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.

உடலுறவில் குதூகலம்

உடலுறவில் குதூகலம்

தினசரி உடற்பயிற்சி செய்தால், உடலின் வலிமையையும் ஆற்றலும் அதிகரிக்கும். அதனால் துணைவியின் முன், ஆண்மையுடன் காட்சி அளிப்பீர்கள். மேலும் உடலுறவும் இன்பம் மிக்கதாக அமையும். சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால் பெண்களை கவர்வது மட்டுமல்லாமல், ஆண்மை குறைவு போன்றவற்றையும் தடுக்கலாம்.

பதற்றம்

பதற்றம்

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.

இதயம்

இதயம்

சீராக உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.

உடல் எடை

உடல் எடை

ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.

நீரிழிவு

நீரிழிவு

உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தத்தை 'அமைதியான கொலைகாரன்' என்றும் அழைப்பர். உயர் இரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் இரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.

உடல் உறுதி

உடல் உறுதி

அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது, நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, அயர்ச்சியை குறைக்கும்.

நோய் தடுப்பாற்றல்

நோய் தடுப்பாற்றல்

தொடச்சியாக உடற்பயிற்சி செய்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம்

உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், இரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

கொழுப்பை குறைக்கும்

கொழுப்பை குறைக்கும்

உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பினி அளவை கூட்டி, கெட்ட கொழுப்பினி அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் இரத்தம் உறைதல் உருவாகுவதை தடுக்கும்.

தசைகளுக்கு வலிமை

தசைகளுக்கு வலிமை

உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலைநிறுத்த உதவும்.

மனநிலையை ஊக்குவிக்கும்

மனநிலையை ஊக்குவிக்கும்

உணவு முறையை நம்புவதற்கு, பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டுதலைக் கொடுப்பதால் மனநிலையை, சந்தோஷமாகவும், அமைதியாகவும் வைத்திருக்கும்.

ஆற்றல்

ஆற்றல்

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும், ஆற்றல் அதிகரிக்கும். மேலும் திசுக்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவி புரியும்.

தூக்கம்

தூக்கம்

சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால், கடுமையான வேலைக்கு பின் தூக்கம் வருவது போல, தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கண்டிப்பாக உடற்பயிற்சி செய்யக்கூடாது.

எலும்புகள் ஆரோக்கியமாக வைக்கும்

எலும்புகள் ஆரோக்கியமாக வைக்கும்

தினசரி உடற்பயிற்சி செய்தால், அது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

புற்றுநோய்

புற்றுநோய்

உடற்பயிற்சி குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது. அதனால் உடற்பயிற்சி செய்து, புற்றுநோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நீண்ட ஆயுள்

நீண்ட ஆயுள்

தினசரி உடற்பயிற்சி செய்வதால், ஆயுள் பல வருடம் கூடும். ஆயுளை கூட்டுவதோடு மட்டுமல்லாமல், வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம்.

முதுகு வலியை குறைக்கும்

முதுகு வலியை குறைக்கும்

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், வலியை குறைக்க உடலை சிறிது வளைத்து உடற்பயிற்சி செய்யலாம். முதுகு வலியை, மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட, உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சிறந்த வழி.

படிப்பாற்றல் அதிகரிக்கும்

படிப்பாற்றல் அதிகரிக்கும்

தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் இரசாயன அளவு அதிகரிக்கும். இது புதிய மூளை அணுக்களை உருவாக்கி, மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். அதனால் புதிய விஷயங்களை படிக்கவும், புரியவும் உதவும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற கடின பயிற்சியையும் மேற்கொண்டால், படிப்புத் திறன் மற்றும் மன ஒருமித்தல் திறன் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 20 health benefits of exercise

Fitness is a blend of right diet and exercise. While we are very particular about what we eat, we tend to ignore physical workouts. But like food, exercise should be done as a routine.
Desktop Bottom Promotion