For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த உணவுகளை மறந்தும் ஃப்ரீசர்ல வெச்சுடாதீங்க... இல்ல அது உங்க உயிருக்கே ஆபத்தை உண்டாக்கிடும்...

ப்ரீசரில் வைக்கப்படும் உணவுகள் அனைத்துமே கெட்டுப் போகாமல் இருக்கும் என்று நினைத்திட வேண்டாம். சில சமயங்களில், ப்ரீசரில் உறைய வைக்கப்படும் உணவுகள் சுவையின்றி, வெளியே தூக்கிப் போடும் வகையில் மாறிவிடும்.

|

குறிப்பிட்ட சில உணவுகள் உறைய வைப்பதால் நீண்ட காலம் நற்பதமாக இருக்கும் மற்றும் அவை உறைந்தநிலையில் இருக்கும் இருக்கும் போது, அவை எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்துவதில்லை. ஆனால் நாம் உண்ணும் சில உணவுகளை எக்காரணம் கொண்டும் ப்ரீசரில் வைத்து உறைய வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அவற்றில் உள்ள சுவை, அமைப்பு போவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பையும் ஏற்படுத்தும்.

7 Foods You Should Never Freeze

எனவே ப்ரீசரில் வைக்கப்படும் உணவுகள் அனைத்துமே கெட்டுப் போகாமல் இருக்கும் என்று நினைத்திட வேண்டாம். சில சமயங்களில், ப்ரீசரில் உறைய வைக்கப்படும் உணவுகள் சுவையின்றி, மோசமான ப்ளேவருடன், வெளியே தூக்கிப் போடும் வகையில் மாறிவிடும். ஆகவே நீங்கள் உணவுகளின் சுவையை சந்தோஷமாக அனுபவிக்க நினைத்தால், ப்ரீசரில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள். குறைவான வெப்பநிலையில் உணவுகளை சேகரித்து வைக்கும் போது, அந்த உணவுகளில் உள்ள பண்புகள் இழக்கப்பட்டு, அந்த உணவு ஆரோக்கியத்திற்கே எதிரியாக மாறிவிடும்.

இப்போது எந்த உணவுப் பொருட்களை எல்லாம் ப்ரிட்ஜில் உள்ள ப்ரீசரில் வைக்கக்கூடாது என்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவகேடோ

அவகேடோ

அவகேடோ என்னும் வெண்ணெய் பழம் என்று வரும் போது, கருத்துக்கள் பிரிக்கப்படுகின்றன. சிலர் அதை வெட்டிய பின்னரே உறைய வைக்க முடியும் என்று நினைக்கும் போது, சிலர் அதை உறைய வைத்தால், வெண்ணெய் பழத்தில் உள்ள மென்மைத்தன்மை இழந்து, சுவை முற்றிலும் மாறிவிடும் என்று கூறுகின்றனர்.

எதுவாக இருந்தாலும், இந்த பழத்தை வாங்கினால், அதை ஃப்ரிட்ஜில் வைக்காமல் உடனே வெட்டி மில்க் ஷேக் தயாரித்து குடித்துவிடுங்கள்.

பன்றி இறைச்சி, கடல் உணவு மற்றும் சிக்கன்

பன்றி இறைச்சி, கடல் உணவு மற்றும் சிக்கன்

கடைகளில் வாங்கிய பன்றி இறைச்சி, கடல் உணவு மற்றும் சிக்கன் போன்றவற்றை முழுமையாக உங்களால் பயன்படுத்த முடியாது என்று நினைத்து, சிலவற்றை ப்ரீசரில் உறைய வைக்கலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தால், உடனே அந்த எண்ணத்தை மாற்றுங்கள். ஏனெனில் இந்த உணவுகள் மிகவும் ஆபத்தான மற்றும் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

வேக வைத்த பாஸ்தா

வேக வைத்த பாஸ்தா

பாஸ்தாவை வேக வைக்கும் முன் ஃப்ரிட்ஜில் வைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வேக வைத்த பாஸ்தாவை ஃப்ரீசரில் வைத்து, பிறகு உட்கொள்ளக்கூடாது. அப்படி செய்யும் போது, அவை கரைந்து, அதிக நீரை குவித்து, சுவையை இழக்கச் செய்துவிடும். சொல்லப்போனால் இப்படி வைப்பது, உணலை கெட்டுப் போக வைக்கும் செயல் என்றே கூற வேண்டும். எனவே இந்த தவறை மறந்தும் செய்யாதீர்கள்.

மென்மையான சீஸ்

மென்மையான சீஸ்

மென்மையான சீஸ்களான கேமம்பெர்ட், ப்ரி சீஸ், கோட் சீஸ் மற்றும் ரிக்கோட்டா சீஸ் போன்றவற்றை எக்காரணம் கொண்டும் ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. இந்த வகை சீஸ்களை மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைத்து சேகரிக்கும் போது, அவை அவற்றின் அமைப்பை இழந்துவிடும்.

பால்

பால்

பாலை ஃப்ரிட்ஜின் ஃப்ரீசரில் வைக்கும் போது, அந்த பால் நீண்ட நேரம் குடிப்பதற்கு ஏற்றவாறு இருக்காது மற்றும் பாலைக் குடிக்க நினைத்தால், இந்த மாதிரி பாலை ஃப்ரீசரில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும் மறந்து ஃப்ரீசரில் வைத்த பால் நன்கு கரைந்த பின், சமையலுக்கு வேண்டுமானால் பயன்படுத்தலாம். எதுவானாலும் கவனமாக இருங்கள்.

சமைத்த உணவுகள்

சமைத்த உணவுகள்

நீங்கள் வேக வைத்து சமைத்த குறிப்பிட்ட உணவுகளை, எந்த காரணம் கொண்டும் ஃப்ரீசரில் வைக்கக்கூடாது. இப்படி செய்தால், அந்த உணவில் அதிக அளவிலான நீர் தேங்கிவிடும் மற்றும் அந்த உணவு தன் சுவையை இழந்துவிடும். எனவே நீங்கள் எவ்வளவு சாப்பிடுவீர்களோ, அந்த அளவில் மட்டும் சமைத்து சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

சில காய்கறிகள் ஃப்ரீசரில் வைப்பதற்கு தகுந்ததாக இருக்கும். ஆனால் வெள்ளரிக்காய் விஷயத்தில் அப்படி இல்லை. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை ஃப்ரீசரில் வைத்து உறைய வைக்கும் போது, அதன் அமைப்பு மற்றும் ப்ளேவர் போய்விடும். அதன் பின், இந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவதே வேஸ்ட்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Foods You Should Never Freeze

If you want to enjoy food taste, then avoid freezing these foods. Here are 7 foods you should never freeze.
Desktop Bottom Promotion