Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
ஹோமியோபதி மருந்துகளால் நல்ல பலன் கிடைக்க இந்த தவறுகளை செய்யாதீங்க...
இங்கு ஹோமியோபதி மருந்துகளை எடுக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தியாவில் பழங்காலம் முதலாக இருந்து வந்த மருத்துவ முறைகள் தான் ஹோமியோபதி, ஆயுர்வேதம் மற்றும் யுனானி போன்றவை. ஆசியாவில் உள்ள 80% மக்கள் இந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்றும் பின்பற்றி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் ஹோமியோபதி மருத்துவ முறை பொதுவானது.

இது முற்றிலும் இயற்கை மூலிகைகளை மருந்தாக கொண்டிருப்பதால், இதனால் பக்கவிளைவுகள் ஏற்படுவதும் குறைவு. ஆனால் ஹோமியோபதி சிகிச்சையை மேற்கொண்டு, மருந்துகளை உட்கொள்வதாக இருந்தால், ஒருசில விஷயங்களைக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் அவற்றைப் பின்பற்றினால் மட்டுமே, அந்த மருந்தின் முழு நன்மையையும் பெற முடியும்.

விஷயம் #1
ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்வதற்கு முன்போ அல்லது உட்கொண்ட பின்போ, 10 நிமிடங்களுக்கு எதுவும் சாப்பிடக்கூடாது.

விஷயம் #2
ஹோமியோபதி மருந்துகளை எடுப்பதற்கு முன்பு வாயை நீரால் நன்கு கழுவிக் கொள்வதோடு, நாக்கையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

விஷயம் #3
ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும் போதே, அல்லோபதி அல்லது ஆயுர்வேத மருந்துகளை எடுக்கக்கூடாது. இதனால் எந்த ஒரு மருந்தும் செயல்படாமல் போய்விடும்.

விஷயம் #4
ஹோமியோபதி மாத்திரைகளை உள்ளங்கையில் நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. இல்லாவிட்டால் அது காற்றில் கரைந்து, அந்த மாத்திரையின் சக்தி போய்விடும்.

விஷயம் #5
ஹோமியோபதி மருந்துகளை சூரிய வெளிச்சம் படும் இடத்திலோ அல்லது மருந்து பாட்டிலை திறந்தவாறோ வைத்திருக்கக்கூடாது. எப்போதும் இந்த மருந்து பாட்டிலை நன்கு இறுக்கமாக மூடுவதோடு, குளிர்ச்சியான இடத்தில் தான் வைத்திருக்க வேண்டும்.

விஷயம் #6
ஹோமியோபதி சிகிச்சை மேற்கொள்ளும் போது, காபி அல்லது டீ போன்றவற்றைக் குடிக்கக்கூடாது. இவைகள் மருந்தின் சக்தியைக் குறைத்துவிடும்.

விஷயம் #7
ஹோமியோபதி சிகிச்சையினால் நல்ல பலன் கிடைக்க வேண்டுமானால், சிட்ரஸ் பழங்கள் அல்லது புளிப்பான உணவுகள் அல்லது பானங்களை, மருந்து உட்கொண்ட பின் எடுக்கக்கூடாது.



Click it and Unblock the Notifications