ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையை சர்க்கரை எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் தினமும் காபி, டீக்களில் சேர்த்து வரும் சர்க்கரை, உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கும் என்பது தெரியுமா? ஆம், சர்க்கரையை ஒருவர் உணவில் அளவுக்கு அதிகமாக சேர்க்கும் போது, அது பாலுணர்ச்சியைப் பாதித்து, செக்ஸ் வாழ்க்கைக்கு ஆப்பு வைத்துவிடும்.

Ways Sugar Affects Your Sexual Life

இங்கு உணவில் சேர்க்கப்படும் சர்க்கரை எப்படியெல்லாம் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதா வேண்டாமா என முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெஸ்டோஸ்டிரோன் குறைவு

டெஸ்டோஸ்டிரோன் குறைவு

ஆம், அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உணவில் சேர்க்கும் போது, அது இன்சுலின் அளவைப் பாதித்து, பாலுணர்ச்சியை மேம்படுத்தி, விறைப்பு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும். அதாவது, சர்க்கரை ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைக் குறைக்கும்.

லெப்டின் குறைவு

லெப்டின் குறைவு

லெப்டின் என்னும் ஹார்மோன் பாலியல் நடத்தையை கண்காணித்து, அதற்கான உணவு உட்கொள்ள வேண்டிய சமிக்கையை செய்யும். ஒருவேளை ஒருவர் அளவுக்கு அதிகமான சர்க்கரையை உட்கொண்டால், அது லெப்டினைப் பாதித்து, டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, பாலியல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.

வளர்ச்சி ஹார்மோன்கள் பாதிக்கப்படும்

வளர்ச்சி ஹார்மோன்கள் பாதிக்கப்படும்

பிட்யூட்டரி சுரப்பியில் உற்பத்தி செய்யப்படும் வளர்ச்சி ஹார்மோன்கள், காம வேட்கையைப் பராமரிக்க உதவும். ஆனால் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, அது இன்சுலின் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தி, பாலுணர்ச்சியைக் குறைத்து, செக்ஸ் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.

சோர்வு அதிகரிக்கும்

சோர்வு அதிகரிக்கும்

ஆம், உணவில் சர்க்கரையை அதிகம் சேர்க்கும் போது, அது இரத்த சர்க்கரை அளவில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தி, பசியையும், மிகுதியான சோர்வையும் உண்டாக்கும்.

ஒரீக்ஸின் குறைவு

ஒரீக்ஸின் குறைவு

ஹைப்போதலாமஸில் உற்பத்தி செய்யப்படும் ஒரு நியூரோபெப்டைடு ஹார்மோன் தான் ஒரீக்ஸின். இது நடத்தை மற்றும் பாலியல் விழிப்புணர்ச்சியை சீராக பராமரிக்கும். ஆனால் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொள்ளும் போது, அது செக்ஸ் வாழ்க்கையை பெரிதும் பாதிக்க ஆரம்பித்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways Sugar Affects Your Sexual Life

Here are some ways sugar affects your sex life. Read on to know more...
Story first published: Monday, March 27, 2017, 13:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter