குடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் தவறாமல் பின்பற்ற வேண்டியவைகள்!

Posted By:
Subscribe to Boldsky

குடல் ஆரோக்கியமாக நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால், உண்ணும் உணவுகளில் புரோபயோடிக்குகள் என்னும் நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குடல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால், உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் சரியாக குடலால் உறிஞ்சப்படாமல் போகும்.

Things You Must Do To Improve Your Gut Health

எனவே குடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், நாம் அன்றாடம் ஒருசில விஷயங்களைப் பின்பற்ற வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணரான பிரியா சகுஜா கூறுகிறார். மேலும் அந்த விஷயங்கள் என்னவென்றும் பட்டியலிட்டுள்ளார். அதைப் படித்து தெரிந்து பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்க வேண்டுமானால், நார்ச்சத்துள்ள உணவுகளான பழங்கள், பீன்ஸ் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 30 கிராம் நார்ச்சத்து எடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

முழு தானியங்கள்

முழு தானியங்கள்

முழு தானியங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது இன்றியமையாதது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம், மெட்டபாலிசம் மற்றும் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் அளவு மேம்பட்டிருப்பதை நன்கு காணலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

ஆம், உடற்பயிற்சியின் மூலமும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உடற்பயிற்சி செய்வதால், குடலில் ஏற்படும் அழற்சியின் அளவு குறைக்கப்பட்டு, நல்ல பாக்டீரியாக்களின் அளவு அதிகரிக்கும். எப்படியெனில், உடற்பயிற்சி செய்யும் போது வியர்வை அதிகம் வெளியேற்றப்படுவதால், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வைத்து, உடலில் ஆற்றல் சீராக பராமரிக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படும்.

ஆன்டி-பயாடிக் மருந்துகள்

ஆன்டி-பயாடிக் மருந்துகள்

ஆன்டி-பயாடிக் மருந்துகள், நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்களைக் குறி வைக்கும். எனவே நீங்களாக ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுப்பவராயின், உடனே அப்பழக்கத்தைக் கைவிடுங்கள். மேலும் மருத்துவரின் பரிந்துரையின்றி எப்போது ஆன்டி-பயாடிக் மருந்துகளை எடுக்காதீர்கள்.

காபி

காபி

காபியில் மலமிளக்கும் பண்புகள் உள்ளது. இது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதிலும் தினமும் 2 கப் காபியை குடித்தால், குடலில் பிஃபிடோபாக்டீரியத்தின் அளவு அதிகரித்து, கெட்ட பாக்டீரியாக்களின் பெருக்கம் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Must Do To Improve Your Gut Health

Here are some things you must do to improve your gut health. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter