இந்த செயல்கள் உங்கள் வாழ்நாளின் அளவை நீட்டிக்கும் என்பது தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையாலும், நோய்கள் நிறைந்த சுற்றுச்சூழலாலும் பலரும் இளமையிலேயே நோய்களால் உயிரை இழக்கின்றனர். இருப்பினும் ஒவ்வொருவருக்கும் நீண்ட நாள் உயிர் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆசை இருந்தால் மட்டும் போதாது, அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

Surprising Things That Will Increase Your Life Span

ஒருவரது வாழ்நாளை அதிகரிக்க ஒருசில விஷயங்களைப் பின்பற்றினாலே போதும். அந்த விஷயங்களைச் சொன்னால், நகைச்சுவையாகத் தான் இருக்கும். ஆனால், உண்மையிலேயே அவைகள் வாழ்நாளின் அளவை நீட்டிக்கும். சரி, இப்போது அந்த விஷயங்கள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்தகங்கள் படிக்கவும்

புத்தகங்கள் படிக்கவும்

வாழ்நாளின் அளவை அதிகரிக்க வேண்டுமெனில், புத்தகம் படிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். ஆய்வு ஒன்றில், புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களை விட, புத்தகப் புழுக்களின் வாழ்நாள் 23 மாதங்கள் நீடித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

மிளகாய்

மிளகாய்

உணவில் மிளகாயை அதிகம் சேர்த்தால், வாழ்நாளின் அளவு அதிகரிக்கும் என்பது தெரியுமா? 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மிளகாயை உணவில் சேர்த்து வந்தோரின் இறப்பு விகிதம் 13% குறைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

சமூக சேவை

சமூக சேவை

சமூக சேவைகளை அதிகம் செய்து வருவோரின் வாழ்நாள் நீடிப்பதாக 2012 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதுவும் தாமாக முன்வந்து சமூக சேவைகளை செய்வோரின் இறப்பு விகிதம், சமூக சேவைகளை செய்யாதவர்களை விட குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.

நல்ல சமூக வாழ்க்கை

நல்ல சமூக வாழ்க்கை

நண்பர் கூட்டம் அதிகமாக கொண்டோரது வாழ்நாள் அதிகரிப்பதாக 2010 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது பெரும்பாலானோர் தனிமையையே விரும்புவதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரித்து, அதுவே பலரது சந்தோஷத்தை சீர்குலைத்து, வாழ்நாளைக் குறைத்து விடுகிறதாம்.

கடவுள் நம்பிக்கை

கடவுள் நம்பிக்கை

பலரும் இது ஒரு மூடநம்பிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நமக்கு மேல் ஒரு சக்தி நிச்சயம் உள்ளது. அந்த சக்தியைத் தான் நாம் தெய்வ உருவங்களின் வடிவில் வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும் அப்படி வழிபடும் போது, மனம் ஒருநிலைப்படுத்தப்படுவதால், மனம் அமைதியாகி, உயிரைப் பறிக்கும் பல நோய்களின் தாக்கத்தில் இருந்து விடுபடக்கூடும்.

விரதம்

விரதம்

நம் முன்னோர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து வந்ததற்கு காரணம், அவர்கள் அடிக்கடி மேற்கொண்ட விரதம் தான். இப்படி அடிக்கடி விரதம் மேற்கொள்ளும் போது, நம் நோயெதிர்ப்பு மண்டலம் புத்துயிர் பெறும், புற்றுநோயின் தாக்கம் குறையும், வயது அதிகரிக்கும் போது தாக்கும் நோய்களின் அபாயம் குறையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதாக 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Surprising Things That Will Increase Your Life Span

Here are some surprising things that will increase your life span. Read on to know more...
Subscribe Newsletter