பாலில் 1 ஸ்பூன் விளக்கெண்ணெயை கலந்து குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

எண்ணெய்களில் விளக்கெண்ணெய் மிகவும் அடர்த்தியானது மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது தெரியும். அதிலும் விளக்கெண்ணெயை ஒருவர் உட்கொள்வதன் மூலம், வயிற்றுப் பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிறு மட்டுமின்றி ஒட்டு மொத்த உடலும் சுத்தமாகும்.

Simple Ways To Use Castor Oil For Stomach Cleansing

வயிற்றில் டாக்ஸின்களின் தேக்கம் அதிகரித்தால், அது மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, அடிவயிற்று வலியையும் ஏற்படுத்தும். ஆனால் விளக்கெண்ணெய் இயற்கை மலமிளக்கியாக செயல்பட்டு, வயிற்று பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுவிக்கும்.

இக்கட்டுரையில் வயிற்றை சுத்தம் செய்ய விளக்கெண்ணெயை எப்படியெல்லாம் உட்கொள்ள வேண்டும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி மாதம் ஒருமுறை செய்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

தேவையான பொருட்கள்:

குளிர்ந்த பால் - 1/2 டம்ளர்

விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

ஒரு டம்ளரில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து, 1/2 டம்ளர் பாலை நிரப்பி நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை வெறும் வயிற்றில் இந்த பாலைக் குடித்தால், வயிறு முழுமையாக சுத்தமாகிவிடும்.

வழி #2

வழி #2

தேவையான பொருட்கள்:

ஆரஞ்சு ஜூஸ் - 1/4 டம்ளர்

விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

ஆரஞ்சு ஜூஸ் மற்றும் விளக்கெண்ணெயை ஒன்றாக கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பின் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் 1/2 டம்ளர் சுடுநீர் என 3 முறை குடிக்க வேண்டும்.

வழி #3

வழி #3

தேவையான பொருட்கள்:

விளக்கெண்ணெய்

காட்டன் துணி

செய்முறை:

செய்முறை:

வயிற்றில் விளக்கெண்ணெயை நன்கு தடவி, பின் காட்டன் துணியை வயிற்றின் மீது விரித்து, சுடுநீர் நிரப்பிய பாட்டிலால் வயிற்றுப் பகுதியை 45 நிமிடம் - 1 மணிநேரம் வரை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வயிற்றில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறுவதோடு, வாய்வுத் தொல்லையும் நீங்கும்.

வழி #4

வழி #4

தேவையான பொருட்கள்:

சுடுநீர்

விளக்கெண்ணெய்

செய்முறை:

செய்முறை:

1 டீஸ்பூன் விளக்கெண்ணெயை ஒரு கப்பில் ஊற்றி, பின் சுடுநீரால் அந்த கப்பை நிரப்பி நன்கு கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

வழி #5

வழி #5

தேவையான பொருட்கள்:

இஞ்சி - சிறிது

விளக்கெண்ணெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் நீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், சிறிது இஞ்சியைத் தட்டிப் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Ways To Use Castor Oil For Stomach Cleansing

Here are some simple ways to use castor oil for stomach cleansing. Read on to know more...
Story first published: Friday, May 5, 2017, 12:00 [IST]
Subscribe Newsletter