அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

யாருக்குமே அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவது பிடிக்காது. இருப்பினும், சிலர் உடல் வலி, மூக்கு ஒழுகல், இருமல் , தும்மல், வயிற்று பிரச்சனைகள் போன்றவற்றால் அடிக்கடி அவஸ்தைப்படுவார்கள். இப்படி ஒருவர் அடிக்கடி உடல்நல குறைவால் அவஸ்தைப்பட்டு வந்தால், உடலில் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளது என்று அர்த்தம்.

Secret Remedies To Never Get Sick Again!

இக்கட்டுரையில் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போவதைத் தடுக்க உதவும் சில ரகசிய குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை மனதில் கொண்டு நடந்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குறிப்பு #1

குறிப்பு #1

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்தான உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக குளோரெல்லா நிறைந்த உணவுகள் மிகவும் நல்லது.

குறிப்பு #2

குறிப்பு #2

உடல் பலவீனம் அடையாமல் இருக்க வேண்டுமென்றால் அதற்கு புளிப்பான உணவுகள் மற்றும் புரோபயாடிக் நிறைந்த உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

குறிப்பு #3

குறிப்பு #3

காய்கறிகள் உடலுக்கு நல்லது தான். ஆனால் அவை இயற்கை முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகளாக இருந்தால் தான் நம் உடலுக்கு நல்லது. மேலும், பால் சம்பந்தப்பட்ட பொருட்கள், சர்க்கரை மற்றும் ஆல்கஹால் போன்றவற்றை மிகக் குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குறிப்பு #4

குறிப்பு #4

தூக்கம் என்பது நமது உடலுக்கு மிகவும் இன்றியமையாதது. சரியான துக்கம் இல்லையென்றாலும் உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். தூக்கம் சரியான அளவு நமது உடலுக்குக் கிடைத்தாலே உடல் நிலை சரியாக இருக்கும்.

குறிப்பு #5

குறிப்பு #5

மன அழுத்தமும் உடல் நிலை பாதிப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. தியானம் செய்வது மன அழுத்தத்தைக் குறைக்கும். தினமும் சிறிது தியானம் செய்வதால் நம் உடலுக்கு எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.

குறிப்பு #6

குறிப்பு #6

உடல் நிலை சரியில்லாத நேரங்களில் நாம் இரண்டு மடங்கு நீர் குடிக்க வேண்டும். சராசரியாக ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது மருத்துவ ஆலோசனை. அதுவும் உடல் நலக் குறைவு ஏற்பட்டால் 6 லிட்டர் தண்ணீர் அளவு குடிக்க வேண்டுமாம்.

குறிப்பு #7

குறிப்பு #7

மூலிகை நோய் எதிர்ப்பு மருந்துகளை கூட நாம் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் கூட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கக்கூடும்.

குறிப்பு #8

குறிப்பு #8

உடல் நிலை சரியில்லை என்றால் தினமும் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை எந்த முறையிலாவது எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு சேர்த்துக் கொள்வதால் உடல் விரைவில் குணமடைந்துவிடும்.

குறிப்பு #9

குறிப்பு #9

முதலில் உங்கள் மனநிலையை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். உடல் சரியில்லை என்று நீங்கள் படுத்துக் கொண்டே இருந்தால் மேலும் நமக்கு அசதியாகத் தான் இருக்கும். அதற்கு பதிலாக " நான் ஆரோக்கியமாகத் தான் இருக்கிறேன்" என்று நீங்கள் மனதளவில் நம்ப வேண்டும். அப்படி இருந்தால் உடல்நிலை விரைவில் சரியாகிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Secret Remedies To Never Get Sick Again!

Here are some secret remedies to never get sick again. Read on to know more...
Story first published: Wednesday, April 26, 2017, 14:40 [IST]
Subscribe Newsletter