வில்வ இலை/பழங்களை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்று மகா சிவராத்திரி. அனைவரும் சிவபெருமானின் அருளைப் பெற விரதம் இருப்பார்கள். எப்படி பெருமாளுக்கு துளசி இலைகளோ, அப்படி தான் சிவபெருமானுக்கு வில்வ இலைகள். இது மூன்று இலைகள் ஒன்றிணைந்தவாறு, சிவபெருமானின் மூன்று கண்களைப் போன்ற தோற்றத்தைக் கொண்டிருக்கும்.

இது மிகவும் புனிதப் பொருளாக கருதப்படுகிறது. இன்று மகா சிவராத்திரி என்பதால், சிவாலயங்களில் சிவபெருமானுக்கு படைத்த வில்வ இலைகளைக் கொடுப்பார்கள். இந்த வில்வ இலைகளை பலரும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் தான் வைத்துக் கொள்வார்கள். ஆனால் இதை சாப்பிடுவதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியுமா?

இங்கு வில்வ இலை/பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சளி, இருமல், காய்ச்சல்

சளி, இருமல், காய்ச்சல்

வில்வ பழத்தைக் கொண்டு ஜூஸ் தயாரித்து, தேன் கலந்து குடித்தால், சளி, இருமல், அசிடிட்டி போன்றவை குணமாகும். அதேப் போல் அந்த ஜூஸில் வெல்லம் கலந்து குடித்தால், காய்ச்சல் குணமாகும்.

மலச்சிக்கல்

மலச்சிக்கல்

வில்வ பழத்துடன் சிறிது மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் மற்றும் குடலில் உள்ள டாக்ஸின்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

வயிற்று அல்சர்

வயிற்று அல்சர்

வில்ல இலை/பழத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. மேலும் ஆயுர்வேதத்தில் இந்த வில்வம் வயிற்று அல்சரைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்

பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்

வில்வ இலைகளில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட, உடலினுள் உள்ள பல்வேறு வகையான தொற்றுகள் குணமாகும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

வில்வ இலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். ஏனெனில் இதில் உள்ள மலமிளக்கி பண்புகள், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த தேவையான அளவு இன்சுலினை சுரக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

வில்வ இலைகள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதய நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.

ஆன்மீக முக்கியத்துவம்

ஆன்மீக முக்கியத்துவம்

சிவபெருமானுக்கு வில்வ இலைகளை வாங்கி பூஜை செய்தால், மனம் தெளிவடைவதோடு, நினைக்கும் காரியம் நிச்சயம் கைக்கூடும் என நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Miraculous Health Benefits Of Eating Bael Patra/Bilva Leaves

Here is a list of miraculous health benefits of Bael Patra/Bilva Leaves. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter