தரையில் படுத்து நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை வைப்பதால் நடக்கும் அதிசயம் குறித்து தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக நாம் வாழைப்பழம் சாப்பிடும் போது, அதன் தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் வாழைப்பழத்தைப் போலவே, அதன் தோலிலும் ஏராளமான நன்மைகள் மறைந்துள்ளன. இது தெரியாமல் நாம் இத்தனை நாட்கள் வாழைப்பழத் தோலை தூக்கி எறிந்து கொண்டிருக்கிறோம்.

வாழைப்பழத் தோலின் உட்பகுதியைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமம் அழகாகும் என கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதே வாழைப்பழத் தோலைக் கொண்டு அன்றாடம் பெரும்பாலானோர் சந்திக்கும் ஓர் தொல்லைமிக்க பிரச்சனையில் இருந்து விடுபட முடியும் என்பது தெரியுமா? அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தலைவலி

தலைவலி

நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் தலைவலி. தலைவலி வந்தால், அது தலைப்பகுதியை கடுமையாக பாதித்து, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் செய்துவிடும்.

சிலருக்கு தலையின் இரு பக்கமும், இன்னும் சிலருக்கு ஏதேனும் ஒரு பக்கம் மட்டும் வலிக்கவும் செய்யும். இப்படி ஒரு பக்கம் மட்டும் வலிப்பதற்கு ஒற்றைத் தலைவலி என்று பெயர்.

வாழைப்பழத் தோல்

வாழைப்பழத் தோல்

தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க கடைகளில் விற்கப்படும் தலைவலி பாம்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் சரிசெய்ய முடியும்.

தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

* 1 வாழைப்பழத்தின் தோல்

* ஐஸ் கட்டிகள்

* ஒட்டும் டேப்

செய்முறை:

செய்முறை:

வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி, பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.

Image Courtesy

எப்படி வேலை செய்கிறது?

எப்படி வேலை செய்கிறது?

வாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். இதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

குறிப்பு

குறிப்பு

ஒருவேளை தலைவலி 20 நிமிடத்திற்கும் மேல் நீடித்திருந்தால், மற்றொரு முறை இதைப் பின்பற்றுங்கள். இதனால் தலைவலி பறந்தோடிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lay Down With Banana Peal On Your Face and Something Amazing Will Happen!!

If you want to instantly get relief from the painful headache read this article because we show you how to get rid of it using banana peel.
Subscribe Newsletter