For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க தினமும் யூஸ் பண்ற இந்த பொருட்கள் உங்க சிறுநீரகம் மற்றும் கல்லீரலை பாதிக்குமா?

ஹார்மோன்களை சமநிலையாக செயல்பட வைக்க சில வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன

|

நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம், நமது ஹார்மோன்களை சமநிலையில் வைத்துக்கொள்ள முடியும். அவ்வாறு நமது ஹார்மோன்களை பராமரித்து மீட்டெடுப்பதற்கான சில வழிகள் பின்வருமாறு:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. உடற்பயிற்சி

1. உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வது நமக்கு பல வழிகளில் நம்மையை தருகிறது. இது உடல் மற்றும் மனதை சிறப்பாக வைத்துக்கொள்ள உதவுகிறது. சிறந்த ஹார்மோன் சமநிலைக்கு எச்.ஐ.ஐ.டி (HIIT) உடற்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும்.

உடல் எடையைக் குறைத்தல், உடல் எடையை ஒழுங்குபடுத்துதல், மன அழுத்தத்தை குறைத்தல், பசியின்மையை கட்டுப்படுத்துதல் மற்றும் தூக்கத்தை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சி உதவுகிறது. HIIT டெஸ்டோஸ்டிரோன், வளர்ந்த ஹார்மோன் மற்றும் உடலின் இன்சுலின் பயன்பாடு ஆகியவற்றை கட்டுப்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. அது வளர்சிதை மாற்ற மற்றும் இதய விளைவுகளை மேம்படுத்துகிறது. எனவே, நீங்கள் அதிகமாக அதை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

2. தூக்கம்

2. தூக்கம்

சரியாக தூங்குவதால் ஹார்மோன்கள் சமநிலை அடைகிறது. தினமும் ஏழு முதல் எட்டு மணி நேர தூக்கத்தின் மூலம் "கார்டிசோல்" என்ற ஹார்மோன் கட்டுப்படுத்தப்படுகிறது. நீண்டகால தூக்கமின்மை மற்றும் நீண்டகால அழுத்தம் கார்டிசோல் அளவை அதிகரிக்கிறது.

மன அழுத்தம் குளுக்கோகார்டிகாய்டுகள், வளர்ச்சி ஹார்மோன், ப்ராலாக்டின் மற்றும் கேட்சாலாமைன் போன்ற மற்ற ஹார்மோன்களின் சாதாரண அளவுகளையும் பாதிக்கிறது.

குறைவான தூக்கத்தினால், நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, திறனற்ற செயல்திறன், பதட்டம், மனச்சோர்வு மற்றும் எடை அதிகரிப்பு ஆகியவை ஏற்படுகிறது. சிறந்த தூக்கம் என்பது ஒவ்வொரு நாளும் ஆறு முதல் பத்து மணி நேரம் வரை ஆகும்.

3. நடைபயிற்சி

3. நடைபயிற்சி

இயற்கையான சூழ்நிலையில் நடைபயிற்சி செய்வது உங்களை சுத்தமான காற்றை சுவாசிக்க வைக்கும். இது மனதை அமைதிப்படுத்தும்.

மேலும், இயற்கையான இடத்தில் நடைபயிற்சி செய்வது, மன அழுத்தம், ஹார்மோன் அளவை குறைக்க, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிணநீர் அமைப்பு, மற்றும் அதிக உடல் வலிமை பெற உதவுகிறது.

4. யோகா

4. யோகா

யோகா பயிற்சி உடலின் சமநிலை பராமரிக்க உதவுகிறது. "வால் அப் லெக்ஸ்" என்றழைக்கப்படும் யோகா பயிற்சி ஹார்மோன் அளவை கட்டுப்படுத்தும். தலைகீழாக நிற்பதன் மூலம் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கரிக்கிறது. உடலில் நிணநீர் சுழற்சி அதிகரிக்கிறது.

5. மக்னீசியம் மசாஜ்

5. மக்னீசியம் மசாஜ்

மக்னீசியம் உடலுக்கு ஒரு அத்தியாவசிய கனிமமாகும். மெக்னீசியம் உணவாக உண்பதை விட எண்ணெயை அதிக பலன்களை தருகிறது. இது உடலுக்கு வழங்கப்படும் மக்னீசிய உணவு வகைகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இது மெக்னீசியம் குளோரைடு செதில்கள் மற்றும் நீர் கலவையை கொண்டுள்ளது. இது கால்சியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற மற்ற கனிமங்களை ஒழுங்குபடுத்துகிறது.

6. லெப்டின் ஹார்மோனை சமநிலைப்படுத்தும்

6. லெப்டின் ஹார்மோனை சமநிலைப்படுத்தும்

லெப்டின் ஹார்மோன் குறைபாடு காரணமாக அடிக்கடி பசி ஏற்படுகிறது. இதனால் நாம் அதிக கலோரிகளை எடுத்துக்கொள்வதால் உடல் எடை அதிகரிக்கிறது.

லெப்டின் அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு, மீன், வெண்ணெய், முட்டை, ஆலிவ், முதலிய புரதச்சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களின் நுகர்வை அதிகரிக்க வேண்டும். கூடுதலாக, சமயம் கிடைக்கும் போது நொறுக்கு தீனிகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

7. ஆழமான சுவாசம்

7. ஆழமான சுவாசம்

பதினைந்து நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் ஒரு நபரின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவு குறைகிறது. இது உங்கள் உடலின் திறனை அதிகரிக்கும்.

8. லுனேசன் பயிற்சி

8. லுனேசன் பயிற்சி

ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்த இது உதவுகிறது. இது பெண்களின் ஹார்மோன்களை இயற்கையாக சமநிலை அடைய செய்கிறது.

9. அழகு சாதன பொருட்கள்

9. அழகு சாதன பொருட்கள்

அழகு சாதன பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதை தவிர்க வேண்டும். இவை சருமத்துளை வழியாக சருமத்திற்குள் சென்று இரத்ததில் கலக்கும். அவற்றில் உள்ள நச்சுக்கள் இரத்ததில் கலந்தால் இரத்தம் பாதிப்படையும்.

சிறுநீரகம் மற்றும் கல்லீரலுக்கு ஏற்படும் ஹார்மோன் இடையூறு மற்றும் சேதத்தைத் தவிர்க்க, இயற்கை மற்றும் ஆர்கானிக்பொருட்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் உபயோகத்தை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.

10. கட்டிப்பிடித்தல்

10. கட்டிப்பிடித்தல்

ஆய்வுகள் இருபது விநாடிகளில் நேசிப்பவர்கள் கட்டிப்பிடித்தால், மகிழ்ச்சி ஹார்மோனான ஆக்ஸிடாஸின் சுரப்பு அதிகரிக்கிறது என்பதை நிரூபித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Balance Hormones Naturally

here are the instructions for Balance Hormones Naturally
Desktop Bottom Promotion