ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலான பெண்கள் மட்டும் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனை. இதை ஆரம்பத்திலேயே கவனித்து சரியான சிகிச்சையை மேற்கொண்டு வந்தால், நிலைமை தீவிரமாவதைத் தடுக்கலாம். இல்லையெனில் கருவளத்தை பாதிக்கும் அளவிலான பிரச்சனைகளை எல்லாம் சந்திக்க நேரிடும்.

Home Remedies To Overcome Irregular Periods Naturally

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையைப் போக்க நம் வாழ்க்கை முறை மற்றும் டயட்டுகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் போதும். இங்கு ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையைத் தடுக்க பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை உணவுகளைத் தவிர்க்கவும்

வெள்ளை உணவுகளைத் தவிர்க்கவும்

வெள்ளை உணவுகளான சர்க்கரை, உருளைக்கிழங்கு, சாதம், மைதா, பாஸ்தா போன்ற அனைத்துமே படுமோசமான உணவுப் பொருட்கள். இந்த உணவுகளை அதிகம் உண்டால், அது இன்சுலின் உற்பத்தியை அதிகம் தூண்டி, உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரித்து, ஓவுலேசனைப் பாதித்து, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு வழிவகுக்கும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உண்ணவும்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உண்ணவும்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சால்மன், மத்தி மற்றும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் இருக்கும். இந்த அமிலங்கள் ப்ரீ ராடிக்கல்களை வெளியேற்றி, உடல் மற்றும் கருப்பையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் மற்றும் முதுமையை எதிர்த்துப் போராடும்.

க்ரீன் டீ குடிக்கவும்

க்ரீன் டீ குடிக்கவும்

க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட், மெட்டபாலிசத்தை அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

போதுமான புரோட்டீன்கள்

போதுமான புரோட்டீன்கள்

புரோட்டீன்கள் காட்டேஜ் சீஸ், வால்நட்ஸ், பாதாம், வேர்க்கடலை, வேக வைத்த முட்டை, இறைச்சி போன்றவற்றில் உள்ளது. இந்த புரோட்டீன்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளைத் தடுத்து நிலைநிறுத்தும் மற்றும் கருவளத்தை ஊக்குவிக்கும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள ப்ளேவோனாய்டுகள், உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தட்டையணுக்கள் ஒன்று சேர்வதைக் குறைக்கும், கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் டோபமைன் நடவடிக்கையை அதிகரிக்கும்.

வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி உணவுகள்

வைட்டமின் டி சத்து பன்னீர், டூனா, முட்டை மஞ்சள் கரு, சால்மன், சூரியக்கதிர்கள் போன்றவற்றில் உள்ளது. இது செல்களின் செயல்பாட்டை மேம்படுத்தும், ஹார்மோன்களை நடுநிலைப்படுத்தும், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும்.

இரும்புச்சத்து உணவுகள்

இரும்புச்சத்து உணவுகள்

பச்சை இலைக் காய்கறிகளில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே இச்சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவில் சாப்பிட வேண்டும்.

விளக்கெண்ணெய் மசாஜ்

விளக்கெண்ணெய் மசாஜ்

விளக்கெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, துணியில் நனைத்து, அடிவயிற்றில் விரித்து வைத்து, சுடுநீர் நிரப்பிய பாட்டில் கொண்டு மசாஜ் செய்ய வேடும். இதனால் ஹார்மோன்களில் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வுகள் குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Overcome Irregular Periods Naturally

Here are some home remedies to overcome irregular periods naturally. Read on to know more...
Story first published: Saturday, January 21, 2017, 14:57 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter