அடிக்கடி கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படுகிறதா? அதிலிருந்து விடுபட இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு அடிக்கடி கண்கள் சிவந்து, எரிச்சலுடனும், அரிப்போடும் இருக்கும். இப்படி கண்களில் பிரச்சனைகளை சந்திப்பதற்கு தூக்கமின்மை, கம்ப்யூட்டர் அல்லது மொபைலை நீண்ட நேரம் பார்ப்பது, உடல் வெப்பம் அதிகமாக இருப்பது மற்றும் தூசி போன்றவைகள் தான் காரணம்.

Home Remedies For Irritated Eyes

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கடைகளில் விற்கப்படும் கண்ட மருந்தை கண்களில் விடுவதற்கு பதிலாக, வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றினால், கண் பிரச்சனைகள் நீங்குவதோடு, கண்களின் ஆரோக்கியமும் மேம்படும். சரி, இப்போது கண் எரிச்சல் மற்றும் அரிப்பைப் போக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் வைத்து, அதைக் கொண்டு கண்களின் மேல் சிறிது நேரம் ஓத்தடம் கொடுத்தால், கண்களில் உள்ள வீக்கம் மற்றும் அரிப்பு போன்றவை உடனே சரியாகும்.

சீமைச்சாமந்தி

சீமைச்சாமந்தி

1 கப் சுடுநீரில் 1 டீஸ்பூன் உலர்ந்த சீமைச்சாமந்தி பூக்களைப் போட்டு, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, அதைக் கொண்டு கண்களைக் கழுவினாலும், கண் பிரச்சனைகள் நீங்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் துண்டுகளை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் கண்களின் மேல் 10 நிமிடம் வைக்க வேண்டும். இதனால் அதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கண் எரிச்சலைக் குறைக்கும்.

போதிய நீர்

போதிய நீர்

கண்கள் எரிச்சலுடனும், மங்கலாகவும் மற்றும் கண்களில் ஏதோ ஒன்று இருப்பது போல் உணர்ந்தால், கண்கள் வறட்சியுடன் உள்ளது என்று அர்த்தம். இந்த கண் வறட்சி பிரச்சனைக்கு தினமும் அதிக அளவில் நீரைக் குடிப்பதன் மூலம் தான் சரிசெய்ய முடியும்.

குளிர்ச்சியான ஸ்பூன்

குளிர்ச்சியான ஸ்பூன்

ஃப்ரிட்ஜில் வைத்த ஸ்பூனை கண்களின் மேல் சிறிது நேரம் வைத்துக் கொள்வதன் மூலம், கண்கள் சிவப்புடன் இருப்பதும், கண் வீக்கமும் குறையும்.

விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்

இரவில் படுக்கும் முன் ஒரு துளி விளக்கெண்ணெயை கண்களின் மேல் தடவுவதன் மூலம், கண்களில் உள்ள பிரச்சனைகள் நீங்கும். மேலும் நல்ல தூக்கமும் கிடைக்கப்பெற்று, கண்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை துண்டுகளாக்கி கண்களின் மேல் 15 நிமிடம் வைப்பதன், கண்களினுள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Irritated Eyes

Here are some home remedies for irritated eyes. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter