நம் முன்னோர்கள் மேற்கொண்ட சில வினோதமான வீட்டு வைத்தியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சில நேரங்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஏற்படும் சில உடல்நல உபாதைகளுக்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே வைத்தியம் பார்ப்பார்கள். இதில் ஓர் ஆச்சரியம் என்னவெனிற், அப்படி அவர்கள் பார்க்கும் வைத்தியத்தால், நமக்கு ஏற்பட்ட உபாதைகள் உடனடியாக குணமாகி இருப்பது தான்.

Bizarre Home Remedies Our Grandparents Used That Actually Work!

இங்கு அப்படி நம் முன்னோர்கள் உடல்நல பிரச்சனைகளுக்கு மேற்கொண்ட சில வினோதமான வீட்டு வைத்தியங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, உங்களுக்கும் அப்பிரச்சனை வந்தால், நம் பாட்டிமார்களின் வைத்தியத்தை மேற்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர் பாதை நோய்த்தொற்று

சிறுநீர் பாதை நோய்த்தொற்று

சிறுநீர் பாதையில் நோய்த் தொற்று இருந்தால், ஒரு டம்ளர் நீரில் சிறிது பேக்கிங் சோடாவை சேர்த்து கலந்து குடியுங்கள். இதனால் பேக்கிங் சோடா தொற்றுக்களை உண்டாக்கிய கிருமிகளை எதிர்த்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களிடமிருந்து பாதுகாப்பை வழங்கும்.

சிலந்தி கடி

சிலந்தி கடி

உருளைக்கிழங்கில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூச்சிக்கடியை சரிசெய்யும் பண்புகள் உள்ளது. ஆகவே சிலந்தி கடித்துவிட்டால், உருளைக்கிழங்கை மெல்லியதாக வெட்டி, கடிப்பட்ட இடத்தில் சிறிது நேரம் தேய்த்துவிடுங்கள்.

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ்

ஆர்த்ரிடிஸ் என்னும் மூட்டு வீக்கத்திற்கு நம் முன்னோர்கள், உலர்திராட்சையை இரவில் படுக்கும் முன் ஜின்னில் ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிடுங்கள். இதனால் ஜின்னில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், வைட்டமின்கள் நிறைந்த உலர் திராட்சையுடன் சேர்த்து, மூட்டு வீக்கம் மற்றும் வலிக்கு உடனடி நிவாரணம் வழங்கும்.

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்ற பிரச்சனைக்கு செலரி கீரையை வாயில் போட்டு சிறிது நேரம் மெல்ல வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் போய்விடும்.

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகள்

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு சேனைக்கிழங்கு நல்ல நிவாரணம் அளிக்கும். எனவே மாதவிடாய் பிரச்சனை இருப்பவர்கள், இந்த சேனைக்கிழங்கை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ, சி போன்றவை ஹார்மோன்களில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும் மற்றும் அதில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

அஜீரண பிரச்சனைகள்

அஜீரண பிரச்சனைகள்

அஜீரண பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படுபவராயின், தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் உலர்ந்த ஆப்ரிகாட் பழத்தை 5 சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுவதோடு, வயிற்று உப்புசத்தையும் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Bizarre Home Remedies Our Grandparents Used That Actually Work!

Here are some bizarre home remedies our grandparents used that actually work. Read on to know more...
Story first published: Wednesday, January 25, 2017, 14:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter