தினமும் இத பத்து நிமிஷம் செஞ்சு வந்தா தாராளமா நூறு வயசு வாழலாம்!

Posted By:
Subscribe to Boldsky

வாழ்க்கையில் எல்லாமும் எல்லாருக்கும் கிடைக்காது என்பார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியம், நல்ல உணவு, நல்ல உறவுகள் எல்லாருக்கும் கிடைக்கும். அதற்கு ஏற்ற வகையில் நாம் நடந்துக் கொண்டால், உழைத்தால். நல்ல உணவும், நல்ல உறவுகளும் தான் ஒரு நல்ல ஆரோக்கியத்தின் ஆணிவேர்.

அந்த வகையில் இந்த விஷயங்களை நீங்கள் சரியாக பின்பற்றி வந்தால் தாராளமாக நூறு வயது ஆரோக்கியமாக வாழலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் #1

டிப்ஸ் #1

எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் சீரியசாக எடுத்து மனதை குழப்பிக் கொள்ள வேண்டாம். அமைதியாக அமர்ந்து யோசித்தால் கடினமான விஷயங்களுக்கு கூட எளிய தீர்வு கிடைக்கும்.

டிப்ஸ் #2

டிப்ஸ் #2

தினமும் கொஞ்ச நேரமாவது வயதானவர்கள், சிரியவர்களுடன் செலவழித்து வாருங்கள். இது நல்ல விஷயங்கள் கற்றுக் கொள்ளவும், கற்றுக் கொடுக்கவும் பயனளிக்கும்.

டிப்ஸ் #3

டிப்ஸ் #3

வேலை, வேலை என வேலையை கட்டிக்கொண்டு அழவேண்டாம். உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் உறவும், நட்பும் தான் வருமே தவிர வேலை அல்ல.

டிப்ஸ் #4

டிப்ஸ் #4

தினமும் 10 - 30 நிமிடங்கள் ஜாக்கிங் அல்லது, ஒரு மணிநேரம் வாக்கிங் செல்லுங்கள்.

டிப்ஸ் #5

டிப்ஸ் #5

உங்கள் கடந்த காலம் நிகழ் காலத்தையும், நிகழ் காலம் கடந்த காலத்தையும் பாதிக்கும் படி எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம்.

டிப்ஸ் #6

டிப்ஸ் #6

மற்றவர்கள் உங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றி எண்ணி கவலைப்பட வேண்டாம்.

டிப்ஸ் #7

டிப்ஸ் #7

தினமும் பத்து நிமிடமாவது அமைதியான இடத்தில் உட்கார்ந்திருங்கள். நல்ல உடல் நலனுக்கு இது உதவும்.

டிப்ஸ் #8

டிப்ஸ் #8

மற்றவரை பற்றி கிசுகிசு, புரளி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

டிப்ஸ் #9

டிப்ஸ் #9

கற்பனையை வளர்த்துக் கொள்ளுங்கள். நிறைய கனவு காணுங்கள்.

டிப்ஸ் #10

டிப்ஸ் #10

மற்றவருடன் தொழில் சார்ந்து, இல்லறம் சார்ந்து உங்களை ஒப்பிட்டுக் கொள்ள வேண்டாம். ஒவ்வொருவருடைய பாதையும் வெவ்வேறானது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #11

டிப்ஸ் #11

உங்கள் மகிழ்ச்சி உங்களை சார்ந்ததாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உணர்சிகளை மற்றவர் தீர்மானிக்க இடம் தர வேண்டாம்.

டிப்ஸ் #12

டிப்ஸ் #12

இறைச்சியை காட்டிலும் அதிகம் காய்கறி, பழங்கள் உட்கொள்ளுங்கள். நீங்கள் வேலை செய்வதற்கு ஏற்ற வகையில் உணவுகள் உட்கொள்வது சிறந்தது.

டிப்ஸ் #13

டிப்ஸ் #13

அனைவர் மீதும் அன்பு செலுத்துங்கள், எல்லா தருணங்களையும் ரசித்து வாழுங்கள். தினமும் முடிந்த வரை அனைவருக்கும் நல்லதை செய்ய பாருங்கள்.

டிப்ஸ் #14

டிப்ஸ் #14

தினமும் அரை மணி நேரமாவது உடல் அசையும்படி விளையாடுங்கள்!

டிப்ஸ் #15

டிப்ஸ் #15

தினமும் சிறிது நேரம் சிரித்து பேசுங்கள், மூன்று பேரையாவது சிரிக்க வையுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Tips For A Happy And Healthy Life

Simple Tips For A Happy And Healthy Life
Story first published: Tuesday, December 27, 2016, 10:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter