உங்களுக்கு வயிறு சரியில்லையா? அதை சரிசெய்ய இதோ சில எளிய வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

வயிறு உப்புசம் என்பது அன்றாடம் சாதாரணமாக நாம் சந்திக்கும் ஓர் பிரச்சனை. இது உண்ணும் உணவு சரியாக செரிமானமாகாமல் இருப்பதால் ஏற்படக்கூடியது. இந்நிலை அளவுக்கு அதிகமாக உணவு உட்கொள்வதால், காரமான உணவுகளை உண்பதால், அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால், வயிறு அல்சர், மன அழுத்தம் போன்றவற்றினால் ஏற்படக்கூடியது.

இதனால் வயிறு உப்புசத்துடன் இருப்பதோடு, அடிக்கடி ஒருவிதமான புளிப்பு சுவையுடனான ஏப்பம், அடிவயிற்றில் வலி, வாயில் ஒருவித கசப்புத்தன்மையை உணரக்கூடும். இந்த பிரச்சனையை ஒருசில வீட்டு வைத்தியத்தின் மூலம் சரிசெய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட் ஜூஸ்

கேரட் ஜூஸ்

வயிறு சரியில்லாத நேரத்தில் கேரட் ஜூஸ் குடிப்பது நல்ல தீர்வைத் தரும். அதுவும் அது வயிற்றில் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்கி, உப்புசத்தை நீக்கிவிடும். எனவே உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் அசௌகரிய உணர்வு ஏற்பட்டால், கேரட் ஜூஸ் குடியுங்கள்.

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன்

பால் மற்றும் தேன் வயிற்று பிரச்சனைகளுக்கு உடனடி நிவாரணம் தரும். அதிலும் இக்கலவை இரைப்பையின் உட்புறச் சுவற்றில் உள்ள படலத்தை பாதுகாத்து, பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சை ஜூஸ் உடலில் pH அளவை சீராக்கி, வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே உங்களுக்கு வயிற்றில் ஏதேனும் பிரச்சனைகள் இருப்பின் எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள். இதனால் விரைவில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சோம்பு

சோம்பு

சோம்பு கூட வயிற்று பிரச்சனைகளைப் போக்கும். குறிப்பாக அடிவயிற்றில் ஏற்படும் உப்புசம், பிடிப்புக்கள் போன்றவற்றை சோம்பு குறைக்கும். அதற்கு ஒரு டீஸ்பூன் சோம்பை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அந்நீரை வடிகட்டிக் குடித்து வர வயிற்று பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை

இஞ்சி மற்றும் எலுமிச்சை

சிறு துண்டு இஞ்சியை சாறு எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், வயிற்றுப் பிரச்சனைகள் உடனே விலகும்.

பட்டை டீ

பட்டை டீ

உங்களுக்கு தாங்க முடியாத வயிற்று உப்புசம் என்றால், பட்டையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் தேன் கலந்து குடிக்க, விரைவில் வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்றவை நீங்கும்.

புதினா டீ

புதினா டீ

புதினா டீயும் வயிற்று பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கும். இதற்கு அதில் உள்ள குளிர்ச்சி தன்மை தான் காரணம். இது செரிமான மண்டலத்தில் உள்ள தசைகள் குளிரச் செய்து, வயிற்று பிரச்சனைகளை விரைவில் குணமாகச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Effective Ways To Treat Sour Stomach

In this article, we at Boldsky will be listing out some of the effective ways to treat sour stomach. Read on to know more about it.
Story first published: Wednesday, February 3, 2016, 17:13 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter