உங்கள் ஃபிரிட்ஜை ஆரோக்கியமான முறையில் எப்படி பயன்படுத்தலாம்???

Posted By:
Subscribe to Boldsky

உணவுகள் கெட்டுப் போகாமல் வைத்து சாப்பிடவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் தான் ஃப்ரிட்ஜ் பயனளிக்கிறது. ஆனால், பலரும் அதையே தவறாக பயன்படுத்துகிறார்கள். வீட்டில் இருக்கும் அனைத்து உணவுப் பொருட்களையும் எடுத்து அடைத்து வைத்துவிடுவார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறை.

காய்கறி, பழங்களை ஒன்றாக வைக்க கூடாது, இறைச்சியை சரியான முறையில் பேக் செய்து வைக்க வேண்டும். பிரட், ஊறுகாய், நெய், போன்றவற்றை ஃப்ரிட்ஜில் வைக்கவே தேவை இல்லை. எனவே, எந்த உணவை எப்படி ஃப்ரிட்ஜில் ஆரோக்கியமான முறையில் வைக்க வேண்டும் என்று கற்றுக் கொள்ளுங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃப்ரிட்ஜ் கதவு

ஃப்ரிட்ஜ் கதவு

நீண்ட நேரம் உங்கள் ஃபிரிட்ஜ்ஜின் கதவை திறந்த நிலையில் வைக்க வேண்டாம். பொருளை எடுத்தவுடன் கதவை மூடிவிடுவது நல்லது. அல்லது, சூடான காற்று உட்சென்றால் ஃபிரிட்ஜின் செயல்பாட்டு திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

இடைவெளி

இடைவெளி

ஃப்ரிட்ஜில் உணவு பொருட்களை வைக்கும் போது சரியான இடைவெளி விட்டு வைக்க வேண்டும், இடம் இல்லாமல் நெருக்கி அடைத்து வைப்பது தவறான முறை. மேலும், ஒரே வகையான உணவுகளை ஒரே இடத்தில் வைய்யுங்கள். இதனால் உணவில் வேறு வாடை ஏற்படாமல் இருக்கும்.

காய்கறி பழங்கள்

காய்கறி பழங்கள்

காய்கறி மற்றும் பழங்களை ஒரே இடத்தில் வைக்க வேண்டாம். இவை வாயுவை வெளியிடம் குணம் கொண்டவை என்பதை நீங்கள் மறந்திட கூடாது. அதே போல ஃப்ரிட்ஜில் வைக்கும் முன் பழங்களை கழுவி வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எடுத்து பயன்படுத்தும் போது கழுவினால் போதும்.

முட்டைகள்

முட்டைகள்

முட்டைகளை ஃபிரிட்ஜ் கதவில் கொடுக்கப்பட்டுள்ள மேற் புறத்தில் வைப்பது தான் சரியானது. மற்ற இடங்களில் இடம் இருக்கிறது என அடைத்து வைக்க வேண்டாம். குளிர் நிலையின் மாற்றம் இதில் தாக்கம் ஏற்படுத்தலாம்.

இறைச்சி உணவுகள்

இறைச்சி உணவுகள்

இறைச்சி உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கும் போது தான் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதில் இருந்து பாக்டீரயா தாக்கம் வெளிப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, இதை சரியான முறையில் பேக் செய்து நன்கு குளிரூட்டப்பட்ட நிலையில் வைக்க வேண்டும்.

சாக்லேட்

சாக்லேட்

சாக்லேட் போன்ற உணவுகளை ஃப்ரிட்ஜில் வைக்கலாம் ஆனால், ஃப்ரீசரில் வைக்க கூடாது. சாதாராண குளிரில் வைத்தாலே போதுமானது.

சுத்தம் செய்தல்

சுத்தம் செய்தல்

மூன்று நாளுக்கு ஒருமுறையாவது ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அதே போல, சுத்தம் செய்யும் போது, கழற்றி சுத்தம் செய்யுங்கள், சுடுநீரை பயன்படுத்த வேண்டாம். மேலும் டிடர்ஜெண்ட் பவுடர் பயன்படுத்தி கழுவ வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Your Refrigerator The Healthy Way

How To Use Your Refrigerator The Healthy Way.
Subscribe Newsletter