தமிழக காவல்துறையுடன் சேர்ந்து நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ள தீபாவளி டிப்ஸ்!!

Posted By:
Subscribe to Boldsky

நம் வாழ்க்கையில் சூழ்ந்திருக்கும் இருளை போக்கவும், சந்தோஷம் பொங்கவும் நாம் வருடம் முழுக்க காத்திருந்து கொண்டாடும் பண்டிகை தீபாவளி. பட்டாடை, பலகாரம், பட்டாசு என தூள்கிளப்பும் பண்டிகை தான் தீபாவளி. சந்தோஷம் இருக்கும் அதே அளவு பாதுகாப்பும் முக்கியம் என்று உணர்த்தும் பண்டிகை தீபாவளி

பாதுகாப்பின்றி பட்டாசு வெடித்து தீக்காயம் ஏற்பட்ட குழந்தைகள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஏன் வீடுகள், கடைகளில் கூட பாதுகாப்பின்மையால் நிறைய தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றை தவிர்க்க வருடா வருடம் காவல் துறை நிறைய அறிவுரை கூறினாலும் கொண்டாடும் ஆர்வத்தில் பெரிதாய் யாரும் கேட்பதில்லை....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பாதுகாப்பு முக்கியம்

காவல் துறை சொல்லிக் கேட்கவில்லை என்று இந்த முறை உலகநாயகனின் மகள் வந்து கூறியுள்ளார். சென்ற வருடம் மட்டுமே தீபாவளி அன்று 92 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. மகிழ்ச்சியோடு சேர்ந்து பாதுகாப்பும் முக்கியம் என்று புரிந்து கொண்டாடுங்கள்.

இறுக்கமான காட்டன் உடை, பட்டுடை வேண்டாம்.

இறுக்கமான காட்டன் உடை, பட்டுடை வேண்டாம்.

பட்டாசுகளுக்கு அடுத்து புத்தாடை தான் தீபாவளியின் சிறப்பு. அதிலும் பட்டாடை உடுத்துவது அழகோ அழகு. ஆயினும் கூட பட்டாசு வெடிக்கும் போது இறுக்கமான காட்டன் ஆடை உடுத்துங்கள். மறவாமல் காலணி அணிந்து பட்டாசு வெடிக்க செல்லுங்கள்.

கீழே வைத்து வெடிக்கவும்

கீழே வைத்து வெடிக்கவும்

சிலர் கெத்து என்ற பெயரில் வெடிகளை கையில் வைத்து வெடித்து தூக்கி எறிந்து வெடிப்பது உண்டு. இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதனால், உங்களுக்கும் உங்களை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் கூட பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

நீண்ட பத்தி

நீண்ட பத்தி

பெரிய வெடியாக இருந்தாலும் சரி, சிறிய வெடியாக இருந்தாலும் சரி, எந்த பட்டாசு வெடிப்பதாய் இருந்தாலும் நீண்ட ஊதுபத்தி பயன்படுத்தி வெடியுங்கள்.

வெடிக்காத பட்டாசு கையில் எடுக்க வேண்டாம்

வெடிக்காத பட்டாசு கையில் எடுக்க வேண்டாம்

எக்காரணம் கொண்டும் வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்க வேண்டாம். அவை எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். சில சமயங்களில் புஸ்வாணம் கூட வெடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

திறந்த வெளியில் பட்டாசு

திறந்த வெளியில் பட்டாசு

பட்டாசு வெடிக்கும் போது திறந்த வெளி இடங்களில் சென்று வெடியுங்கள். அருகருகே வீடு இருக்கும் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதால் சில சமயங்களில் வீட்டக்குள் பட்டாசு செல்லவும், வயதானவர்கள், இதய பாதிப்பு உள்ளவர்களுக்கு பாதிப்பும் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

பெரியவர் மேற்பார்வை

பெரியவர் மேற்பார்வை

சிறு குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள் மேற்பார்வையில் வெடிக்க வேண்டியது அவசியம்.

தண்ணீர்

தண்ணீர்

பட்டாசு வெடிக்கும் போது எப்போதும் அருகே ஒரு பக்கெட் தண்ணீரை அருகே வைத்துக் கொள்ளுங்கள். தீக்காயம் ஏற்பட்டால் முதலில் நீர் ஊற்றவும் அல்லது தரையில் படுத்து உருளவும்.

தீயணைப்பு உதவி

தீயணைப்பு உதவி

தமிழக காவல் துறையும், தீயணைப்பு துறையும் உங்களுக்காக எப்போதும் சேவை செய்ய காத்திருக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனே 101, 102 என்ற எண்ணுக்கு கால் செய்ய மறக்க வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diwali Tips From Actress Shruthi Hassan

Indian film actress has been shared few Diwali tips for save diwali celebration in assosiation with Tamilnadu police department
Story first published: Saturday, November 7, 2015, 16:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter