Latest Updates
-
iPhone 18 Pro and 18 Pro Max: அமெரிக்காவை விட இந்தியாவில் ஐபோனின் விலை ஏன் மிக அதிகமாக உள்ளது தெரியுமா? -
விநாயகர் சதுர்த்திக்கு இப்படி பால் கொழுக்கட்டை செய்யுங்க.. க்ரீமியாவும், ருசியாவும் இருக்கும்.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் செட்டிநாடு உப்பு அப்பம் ரெசிபி - இதை ட்ரை பண்ணி பாருங்க - காரமா சூப்பரா இருக்கும் -
மழைக் காலத்தில் கண்களில் அரிப்பு ஏற்படுகிறதா? அதற்கான காரணங்களும், எச்சரிக்கை அறிகுறிகளும்- விளக்கும் டாக்டர்! -
தலைசுற்ற வைக்கும் இந்திய அரசர்களின் ஆடம்பரம் - எதுக்கெல்லாம் கோடிக்கணக்குல செலவு பண்ணிருக்காங்க பாருங்க -
ராகு-கேது பெயர்ச்சி 2026: மேஷம் முதல் கன்னி வரை யாருக்கு ராஜயோகம்?- விளக்கும் ஜோதிடர்! -
கேரட் தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
செப்டம்பர் 11, 2026: இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகிறது தெரியுமா? -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
'ஒரே கல்லுல ரெண்டு மாங்கா' இத நீங்க பண்ணா...உங்க உடல் எடை குறையும் இதயமும் ஆரோக்கியமா இருக்குமாம்!
உடல் எடையை குறைக்கும் போது, ஆரோக்கியமான இதயம் இருப்பது அவசியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய உத்தியாகும்.
பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சமச்சீரான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய படிகளாகும். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களை கட்டுப்படுத்துவதும் முக்கியம். இவை, உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம்.

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் சில வாழ்க்கை முறை பரிந்துரைகளைக் கூறுகிறது. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள்
நாம் சாப்பிடும் உணவுகள், நம் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஆதலால், ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பீன்ஸ், பருப்பு வகைகள், நட்ஸ்கள், தாவர அடிப்படையிலான புரதங்கள், ஒல்லியான விலங்கு புரதங்கள், மெலிந்த கோழி இறைச்சி, மீன் மற்றும் கடல் உணவுகள் போன்ற ஊட்டச்சத்து நிறைந்த, பதப்படுத்தப்படாத உணவுகளை உட்கொள்ளுங்கள்.
சுறுசுறுப்பாக இருங்கள்
சுறுசுப்பாக இருப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு இணைக்கப்பட்டுள்ளதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான அல்லது 75 நிமிட தீவிர உடல் செயல்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. தினமும் 30 நிமிட நடைபயிற்சி செய்வது உங்கள் உடல் எடையை குறைப்பதோடு, பல ஆரோக்கிய நன்மைகளையும் உங்களுக்கு வழங்குகிறது.
புகை பிடிப்பதை தவிர்க்க வேண்டும்
பரவலான உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக புகைபிடிப்பதை விட்டுவிடுமாறு நிபுணர்கள் எப்போதும் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, புற்றுநோயை உருவாக்க வாய்ப்புகள் அதிகம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ புகைபிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல மது அருந்துவதையும் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான தூக்கத்தைப் பெறுங்கள்
தூக்கமின்மை பல்வேறு உடல்நல பிரச்சனைகளோடு தொடர்புடையது. தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. நிம்மதியான தூக்கம், ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களுக்கு வழங்குகிறது.
எடையை நிர்வகித்தல்
இதய நோய், சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு உடல்நல ஆபத்துக்களை ஏற்படுத்த உடல் பருமனும் ஓர் முக்கிய காரணம். ஒரு நபரின் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) பொதுவாக எடை அல்லது உடல் அமைப்பை அளவிட பயன்படுகிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கொழுப்பைக் கட்டுப்படுத்துங்கள்
நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க, குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம் (எல்டிஎல்) கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் மாரடைப்பை ஏற்படுத்தலாம். மேலும், அதிக உடல் பருமன் உங்கள் கொலஸ்ட்ரால் அளவையும் அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் எடையையும் நிர்வகிக்க வேண்டியது முக்கியம்.
இரத்த சர்க்கரையை நிர்வகித்தல்
இன்றைய நாளில் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக சர்க்கரை நோய் உள்ளது. நீங்கள் சாபபிடும் உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஹீமோகுளோபின் A1c இன் ஆரோக்கியமான அளவை பராமரிப்பது ஆரோக்கியமான இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.
இரத்த அழுத்தத்தை நிர்வகித்தல்
பெரியவர்கள் இரத்த அழுத்த அளவை 120/80 மிமீ எச்ஜிக்கு குறைவாக பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தமும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உடல் எடையோடு சம்பந்தப்பட்டுள்ளது. ஆதலால், உங்கள் உயர் இரத்த அளவை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது மிக முக்கியம்.
இதய ஆரோக்கியம் மற்றும் எடை இழப்பு
ஆரோக்கியமான எடையை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவசியம். இதயத்திற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் எடை மேலாண்மைக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் அவை இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற சில நாள்பட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
எடுத்துக்காட்டாக, பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது, வழக்கமான உடல் செயல்பாடுகளுடன், எடை மேலாண்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கும்.
இறுதிக் குறிப்பு
இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறை எடை இழப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். சீரான உணவை உட்கொள்வது மற்றும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவும்.
கூடுதலாக, மன அழுத்தத்தை குறைப்பது மற்றும் போதுமான தூக்கம் பெறுவது சிறந்த ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். உங்கள் எடை இழப்பு திட்டத்தில் இதய ஆரோக்கியமான வாழ்க்கை முறையை இணைத்துக்கொள்வது உங்கள் இலக்குகளை அடைய உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications


