For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எது செஞ்சாலும் பதட்டமாவே இருக்கா?... இத சாப்பிடுங்க... தெம்பாயிடுவீங்க...

இந்த தொகுப்பில் லைசின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

|

நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதில் ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டிருக்கும் அத்தியாவசிய அமினோ அமிலங்களில் லைசின் ஒன்றாகும். சருமத்தின் முக்கிய கட்டமைப்பு புரதமான கொலாஜனை உருவாக்க உடல் லைசினைப் பயன்படுத்துகிறது.

Lysine

மனித உடலால் லைசின் தயாரிக்க முடியாது என்பதால், இந்த அமினோ அமிலத்தை உணவின் மூலம் பெறுவது மிக முக்கியம். லைசின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தம் குறைகிறது, ஹெர்பெஸ் வைரஸ் என்னும் ஒரு வகை தோல் அழற்சி மற்றும் நீரிழிவு நோயை எதிர்த்துப் போராடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை

நீரிழிவு நோய்க்கு சிகிச்சை

தி ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், லைசின் சாப்பிட்ட பிறகு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தலைப்பில் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

MOST READ: நெஞ்சுசளி பாடா படுத்துதா?... இந்த பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க... உடனே சரியாகும்...

பதட்டத்தை குறைக்க

பதட்டத்தை குறைக்க

மன அழுத்த எதிர்வினையில் ஈடுபடும் ஏற்பிகளைத் தடுப்பதன் மூலம் லைசின் பதட்டத்தைக் குறைக்கும். 50 ஆரோக்கியமான மக்கள் மீது நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 2.64 கிராம் லைசின் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அர்ஜினைன் போன்றவை , மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்தால் தூண்டப்பட்ட கவலையைக் குறைத்தது என்று குறிப்பிடுகின்றது.

இரத்த அழுத்தத்தை குறைக்க

இரத்த அழுத்தத்தை குறைக்க

லைசின் குறைபாடு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ள 50 பெரியவர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், லைசின் சப்ளிமெண்ட்ஸ் இரத்த அழுத்தத்தை கணிசமாகக் குறைப்பதைக் காண முடிந்தது.

சளி புண்களுக்கு சிகிச்சையளிக்க

சளி புண்களுக்கு சிகிச்சையளிக்க

சளி புண்கள் என்பது திரவத்தால் நிரப்பப்பட்ட கொப்புளங்கள் ஆகும், அவை வலி மற்றும் எரியும் உணர்வை ஏற்படுத்துகின்றன. அவை ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 (HSV-1) காரணமாக ஏற்படுகின்றன. லைசின் சப்ளிமெண்ட்ஸ் ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் அதிகரிப்பதைத் தடுக்கிறது மற்றும் சளி புண்களின் காலத்தைக் குறைக்கிறது

MOST READ: உங்க அந்தரங்க பகுதியில் இந்த பிரச்சினை இருக்கா?... அது இந்த நோயா இருக்கலாம்...

காயம் குணப்படுத்த

காயம் குணப்படுத்த

காயம் விரைவாக குணமாக லைசின் உதவும். இந்த அமினோ அமிலம் கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்க உதவுகிறது, இது தோல் மற்றும் எலும்புகளுக்கு கட்டமைப்பை அளிக்கிறது, மேலும் காயத்தில் புதிய உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது, இதனால் காயம் சரிசெய்யும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது.

கால்சியம் உறிஞ்சுதல்

கால்சியம் உறிஞ்சுதல்

லைசின் உங்கள் குடலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உடல் உதவுகிறது மற்றும் சிறுநீரகங்களை தாதுப்பொருளைத் தக்கவைக்க அனுமதிக்கிறது. லைசின் எலும்பு இழப்பைத் தடுக்கவும், கால்சியத்தை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

லைசினின் பிற நன்மைகள்

லைசினின் பிற நன்மைகள்

. அக்கி பாதிப்பிற்குச் சிகிச்சை அளிக்கிறது

. வயதானவர்களுக்கு மெல்லிய தசைகள் இழப்பு மற்றும் இயக்க சிக்கல்கள் போன்றவற்றைத் தடுக்கிறது

. புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது

. கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

. சருமத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை மேம்படுத்துகிறது

. முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது

. தமனிகளில் பிளேக் கட்டமைப்பதைத் தடுக்கிறது

. தசைகளை உருவாக்குகிறது

லைசின் அதிகமுள்ள உணவுகள்

லைசின் அதிகமுள்ள உணவுகள்

உணவு ஆதாரங்கள் ( 100கிராம்) லைசின்அளவு (மிகி)

காட்டேஜ் சீஸ் 934 மிகி

மாட்டிறைச்சி 329 மி.கி.

கோழி 1509 மி.கி.

முட்டை 951 மி.கி.

அட்லாண்டிக் சால்மன் 1870 மி.கி.

ஆடு பால் 290 மி.கி.

ராஜ்மா 1618 மி.கி.

கொண்டைக்கடலை 1291 மி.கி.

MOST READ: இந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா?... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா?

பக்க விளைவுகள், அபாயங்கள்

பக்க விளைவுகள், அபாயங்கள்

தினசரி 3 கிராம் அளவு லைசின் உடலுக்குப் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது மற்றும் ஒரு நாளைக்கு 10 முதல் 15 கிராம் வரை அளவை அதிகரிப்பது வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தக்கூடும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் லைசின் சப்ளிமெண்ட்ஸைத் தவிர்க்க வேண்டும். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் உள்ளவர்களும் லைசின் சப்ளிமெண்ட்ஸைத் தவிர்க்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lysine: Health Benefits, Food Sources And Risks

Lysine is one of the essential amino acids that play an integral role in supporting the immune system. The body uses lysine to create collagen, the main structural protein in the skin
Story first published: Monday, September 23, 2019, 15:45 [IST]
Desktop Bottom Promotion