Just In
- 5 hrs ago
வார ராசிபலன் (17.01.2021 முதல் 23.01.2021 வரை) – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- 6 hrs ago
இன்றைய ராசிப்பலன் (17.01.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது…
- 17 hrs ago
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- 19 hrs ago
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
Don't Miss
- Sports
கடும் மோதல்.. ஒரு கோல் கூட அடிக்காத மும்பை சிட்டி - ஹைதராபாத்!
- Movies
இன்னும் முடியாத கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங்.. டைட்டில் வின்னர் அறிவிப்பை தாமதப்படுத்துவது ஏன்?
- News
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 104-வது பிறந்த நாள்.. ட்விட்டரில் பிரதமர் மோடி புகழ் வணக்கம்
- Finance
அதிரடி ஆஃபர்.. ரூ.877 ரூபாயில் விமானத்தில் போகலாம்.. இண்டிகோவின் சரவெடி சலுகை..!
- Automobiles
வாகனத்தில் தனியாக செல்லும்போது மாஸ்க் அணிவது கட்டாயமா, இல்லையா? - மத்திய அரசு விளக்கம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எவ்ளோ பிரச்னை வந்தாலும் இதயத்துல ரத்த உறையாம இருக்க என்ன செய்யணும்?
இரத்த உறைதலைத் தடுக்கும் ஹெபரின் என்ற ஊசி மருந்து, இரத்த உறைவு உருவாகும் அபாயம் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. சில அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்டவர்கள், இதயத்தில் உறைதல் ஏற்படக் கூடிய இதய பிரச்சினைகள் உள்ளவர்கள் மற்றும் உறைதல் உருவாகும் அபாயத்தில் உள்ளவர்கள் ஹெபரின் எடுத்துக் கொள்கிறார்கள்.
அதிகப்படியான அளவு ஹெபரின் எடுத்துக் கொள்வது கட்டுப்பாடற்ற இரத்தக்கசிவை ஏற்படுத்தும். இரத்த உறைவுக்கு உதவும் கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின் கே, ஹெப்பரின் அதிகப்படியான சிகிச்சைக்கு வழங்கப்படுவதில்லை, ஏனெனில் இரண்டு மருந்துகளும் இரத்த உறைவு செயல்பாட்டில் அவற்றின் விளைவுகளில் வேறுபடுகின்றன.

உறைதல் நுட்பம்
சிக்கலான ஒரு தொடர் சங்கிலி நிகழ்வால் இந்த இரத்த உறைவு ஏற்படுகிறது. பிளேட்லெட்டுகள் என்பது சிறிய இரத்த நுண்தட்டுகள். இவை ஒரு இரத்த நாளத்தில் சேதமடைந்த தளத்துடன் இணைகின்றன. இந்த நுண்தட்டுகள் இரத்தக் குழாயின் சுவர்களில் ஓட்டும்போது, அந்த தளத்திற்குள் மேலும் பல நுண்தட்டுகளை ஈர்க்கும் ஒரு பொருளை வெளியிடுகின்றன.
இரத்தத்தில் பல காரணிகள் புரோத்ராம்பினை செயல்படுத்துகின்றன, பின்னர் அவை த்ரோம்பினாக மாற்றப்படுகின்றன. த்ரோம்பின் மற்றொரு உறைதல் காரணியான ஃபைப்ரினோஜனை ஃபைப்ரின் என்று மாற்றுகிறது. ஃபைப்ரின் பிளேட்லெட்டுகளை ஒன்றாக ஒரு வலைக்குள் இணைத்து சேதமடைந்த பகுதியை மூடி மறைத்து, இரத்தப்போக்கை நிறுத்துகிறது.
MOST READ: இன்றைக்கு லட்சுமிதேவி வாசம் செய்யப்போகும் 2 அதிர்ஷ்ட ராசிகள் எது தெரியுமா?

ஹெபரின் செயல்பாடு
இரத்த உறைவுக்குத் தேவையான சில எதிர்வினைகளை இரத்தத்தில் தடுப்பதன் மூலம் ஹெப்பரின் செயல்படுகிறது. இதனை சில நேரங்களில் இரத்த மெலிதாக்கி என்று அழைத்தாலும் உண்மையில் ஹெபரின் இரத்தத்தை மெலிதாக்குவதில்லை. மாறாக இது ஒரு உறைவெதிர்ப்பியாக செயல்பட்டு, இரத்தம் கட்டியாவதைத் தடுக்கிறது.
தொடர்ச்சியான செயல்களின் மூலம், ஹெபரின் சிறிய அளவில் கொடுக்கும்போது புரோத்ராம்பின் த்ரோம்பினாக உருவாகுவதைத் தடுக்கிறது. ஒரு உறைவு உருவானதும், பெரிய அளவிலான ஹெப்பரின் ஃபைப்ரினோஜனை ஃபைப்ரினாக மாற்றுவதைத் தடுக்கிறது, இது ஒரு நிலையான உறைவு ஏற்படுவதைத் தடுக்கிறது.

வைட்டமின் "கே" வின் பங்கு
இரத்த உறைவு உருவாகும் வழிமுறையான உறைதல் அடுக்கை செயல்படுத்துவதில் வைட்டமின் கே முக்கிய பங்கு வகிக்கிறது, உறைதல் காரணிகளை உருவாக்கும் பல புரதங்களை செயல்படுத்த வைட்டமின் கே உதவுகிறது. உறைதல் காரணிகள் கல்லீரலில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. வைட்டமின் கேவைச் சார்ந்திருக்கும் உறைதல் காரணிகள் காரணி II ஐ உள்ளடக்குகின்றன, இது புரோத்ராம்பின், காரணி VII, காரணி IX மற்றும் காரணி X ஆகும். வைட்டமின் கே குறைபாட்டில், உறைதல் காரணி அளவு குறைந்து இரத்தப்போக்கு ஏற்படலாம்.

ஹெப்பரின் அதிகப்படியான அளவு
ஒரு நபர் அதிக ஹெபரின் எடுத்துக் கொண்டால், கட்டுப்பாடற்ற இரத்தப்போக்கு ஏற்படலாம், ஏனெனில் ஹெபரின் இறுதியில் ஃபைப்ரின் உருவாவதைத் தடுக்கிறது, அத்துடன் புரோத்ராம்பின் மற்றும் பிற உறைதல் காரணிகளை உருவாக்குவதில் தலையிடுகிறது. வைட்டமின் கே அதிகப்படியான ஹெபரின் அளவுக்கு சிகிச்சையளிக்காது, ஏனெனில் உறைதல் காரணிகளின் உற்பத்தியை செயல்படுத்தும் புரதங்களை ஒருங்கிணைக்க வைட்டமின் கே உதவுகிறது.
MOST READ: சாய்பாபாவின் ஆசி இந்த ராசிக்காரருக்கு மட்டும் இருக்கிறதே... நீங்கள் எந்த ராசி?...

ரத்தம் உறைதல்
இந்த செயல்முறையில் இரத்த உறைவுக்கான கடைசி கட்டத்தில் மட்டுமே ஹெபரின் தலையிடுகிறது. உறைதல் காரணியை உருவாக்கும் அதிக புரதங்களை உற்பத்தி செய்வதால், அதிகப்படியான ஹெபரின் காரணமாக உருவாகும் உறைவெதிர்ப்பிகளால் உண்டாகும் எதிர்வினைகளை எதிர்க்க முடியும் என்று RxMed குறிப்பிடுகிறது. அதிகப்படியான ஹெபரின் அளவால் உண்டாகும் தாக்கத்தை நடுநிலை செய்யக்கூடிய ஒரு மருந்து புரோட்டமைன் சல்பேட் என்று மருந்துகள் வலைத்தளம் குறிப்பிடப்படுகிறது.