For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பற்களுக்குள் சீழ்கட்டி இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது? என்ன செஞ்சா பல் தப்பிக்கும்?

பற்களில் சீழ்கட்டி அறிகுறிகள், வகைகள், சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் போன்றவற்றைப் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அது பற்றிய விளக்கமான தொகுப்பு தான் இது.

|

கிருமி தொற்றின் காரணமாக பற்களில் சீழ் கட்டும் நிலையை குறித்து அறிந்து கொள்வதற்காகவே இந்த பதிவு. பொதுவாக பற்களில் இந்த சீழ்கட்டிகள் தோன்றும். இது மிதமானது முதல் தீவிரமான வலி வரை உண்டாக்கும். தீவிரமான நிலையில் கழுத்து மற்றும் காது பகுதி வரை வலி இருக்கும். பற்களை சுற்றியிருக்கும் பல்வேறு இடங்களில் இந்த கட்டிகள் தோன்றும்.

Dental Absess

ரூட் கனால் என்று அழைக்கப்படும் பற்களின் வேர் கால்வாய் பகுதிகளில் உள்ள மென்மையான திசுக்கள் இறக்க நேரிடும்போது அல்லது அழற்சி அடையும்போது பற்களில் சீழ்கட்டிகள் தோன்றுகிறது. உணவு, உமிழ்நீர் வழியாக கிருமிகள் பற்களில் படிவதால் இந்த அழற்சி உண்டாகிறது. இதனால் பற்கள் மற்றும் பல் ஈறுகள் சேதமடைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்கள் பாதிப்பு

பற்கள் பாதிப்பு

அடிப்படையில், இரவு முழுவதும் உறக்கத்தைக் கெடுக்கும் விதமாக பல் வலி ஏற்படும். இந்த பாதிப்பின் ஆரம்பப் பகுதியில், சாதாரண பல் வலியில் தொடங்கி, தொற்று வேர் வரை பரவும்போது, தாங்க முடியாத வலி உங்களை ஆட்கொள்ளும். பற்களின் உட்புற அறை வழியாகவே இந்த சீழ்கட்டிகள் வளர்ச்சி பெறும். தொற்றை எதிர்த்துப் போராடும் திறனை பற்கள் இழக்க நேரிடுவதால், கிருமிகள் பெருகி, தொற்று பாதிப்பு வாய் முழுவதும் பரவுகிறது.

பற்களில் உண்டாகும் சீழ்கட்டிகளை உடனடியாக சிகிச்சை பெற்று சரி செய்துக் கொள்ள வேண்டும், இல்லையேல், பல பிரச்சனைகள் தோன்றும் வாய்ப்பு உண்டு. காரணம், இந்த தொற்று பாதிப்பு, தாடை, கழுத்து, தலை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. வயது மற்றும் பாலின வரைமுறை இன்றி எவரையும் இந்த சீழ்கட்டி பாதிக்கலாம்.

MOST READ: 30 வருஷமா குழந்தைங்கள கடத்தி விக்கிற நர்ஸ் இவங்கதான்... என்ன பண்ணுவாங்க தெரியுமா?

பற்கள் சீழ்கட்டியின் வகைகள்

பற்கள் சீழ்கட்டியின் வகைகள்

பற்புறத் திசு சீழ்கட்டி

பற்களின் துணை எலும்பு திசு கட்டமைப்புகளில் இந்த சீழ்கட்டிகள் வளர்ச்சி அடைகின்றன, அதாவது, பல்லின் வேர் பகுதிக்கு அடுத்து இருக்கும் ஈறுகளில் இதன் வளர்ச்சி ஏற்படுகிறது. சுற்றி இருக்கும் திசுக்கள் மற்றும் எலும்புகளில் இந்த கட்டிகள் பரவும் வாய்ப்பு உள்ளது.

பல் நுனி சீழ்கட்டி

இந்த வகை சீழ்கட்டிகள், பற்களின் வேர் பகுதியின் நுனிப்பகுதியில் வளர்ச்சி அடைகின்றன.

ஈறுகள்சார் சீழ்கட்டி

இந்த வகை சீழ்கட்டிகள் பல் ஈறுகளின் திசுக்களில் மட்டும் வளர்ச்சி அடைகின்றன, இவை, பற்புறத் திசுக்களை அல்லது பற்களை சேதப்படுத்துவது இல்லை.

உணர்த்தும் அறிகுறிகள்

உணர்த்தும் அறிகுறிகள்

பற்களின் அருகில் அல்லது ஈறுகளில் தாங்க முடியாத வலி உண்டாவது, கிருமி தொற்று ஏற்பட்டதை உணர்த்தும் முக்கிய அறிகுறியாகும். இந்த வலி மிக விரைவாக வளர்ச்சியுற்று, அடுத்த சில மணி நேரத்தில் இன்னும் மோசமான வலியை உண்டாக்கும். பற்களில் சீழ்கட்டிகள் உண்டாவதை உணர்த்தும் வேறு சில அறிகுறிகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

மூச்சு விடுவதில் அல்லது விழுங்குவதில் சிரமம்

நீடித்த, தீவிரமான, பல்வலி, கழுத்து, காது மற்றும் தாடை எலும்புகளில் கூட வலி நீடிப்பு

காய்ச்சல்

படுக்கும் போது வலி அதிகமாவது

ஏதாவது ஒரு பொருளை கடிக்கும் போது அல்லது மெல்லும்போது கூச்ச உணர்வு ஏற்படுவது

சூடான அல்லது குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ளும்போது கூச்ச உணர்வு ஏற்படுவது

கன்னம் அல்லது முகத்தில் வீக்கம் அல்லது சிவப்பு நிறம் தோன்றுவது

சீழ்கட்டி உடைவதால், வாயில் இருந்து துர்நாற்றத்துடன் கூடிய திரவ வெளிப்பாடு

தாடைக்கு கீழே அல்லது கழுத்து நிணநீர் முனையில் மென்மையான வீக்கம் ஏற்படுவது

பல் ஈறுகள் சிவந்து போவது, வீக்கமடைவது

பற்கள் நிறமாறுவது அல்லது பற்கள் ஆடுவது

வாய் துர்நாற்றம்

தூக்கமின்மை

உண்டாகக் காரணம்

உண்டாகக் காரணம்

இந்த தொற்று பாதிப்பு வளர்ச்சி அடைவதற்கான முக்கிய காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

. ஆழமான பற்குழி அல்லது பல் சொத்தை

. ஈறுகளில் பாதிப்பு அல்லது பற்புறத் திசுக்களில் பாதிப்பு

. பற்களில் விரிசல்

மேலே கூறிய காரணங்கள் தவிர, ஒவ்வொரு வகை சீழ்கட்டிகளுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட காரணங்கள் உண்டு.

1. பற்புறத் திசு சீழ்கட்டி

இந்த பாதிப்பு ஈறு நோயால் பொதுவாக உண்டாகிறது. இருப்பினும் இந்த கட்டிகள் வளர்ச்சி பெற காயமும் காரணமாக இருக்கலாம்.

2. பல் நுனி சீழ்கட்டி

பற்களுக்குள் இருக்கும் வேர்களில் கிருமிகள் ஊடுருவுவதால் உண்டாகும் கட்டி . பற்குழி வழியாக ஈறுகளுக்குள் இந்த கிருமிகள் பரவுகிறது.

3. ஈறுகள்சார் சீழ்கட்டி

வெளிப்புறப் பொருட்களான, டூத் பிரஷ் நார் , பழங்களின் விதை போன்றவை ஈறுகளில் சிக்கிக் கொள்வதால் உண்டாகும் கட்டிகள்.

MOST READ: சாப்பிட வாங்கி வந்த முட்டை கோழி குஞ்சாக மாறியதால் பரபரப்பு... பாருங்க இந்த கொடுமைய

சீழ்கட்டிகளின் அபாய காரணிகள்

சீழ்கட்டிகளின் அபாய காரணிகள்

கிருமிகளின் தொற்று பாதிப்பு வளர்ச்சியை அதிகரிக்கும் சில முக்கிய காரணிகள் உண்டு. அவற்றைப் பற்றி இப்போது காண்போம்.

சர்க்கரை அதிகம் உள்ள உணவு

சோடா, கேக், இனிப்பு போன்ற உயர் இனிப்பு சுவை கொண்ட உணவுகளை தொடர்ச்சியாக உட்கொள்வதால் பற்குழிகள் வளர்ச்சி பெற்று இதன் காரணமாக சீழ்கட்டிகள் உண்டாகலாம்.

மோசமான பல் சுகாதாரம்

ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்காமல் இருப்பது, சரியான முறையில் வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்றவை நேரடியாக பல் சொத்தைக்கு வழி வகுக்கின்றன. இதனால் பல் ஈறுகளில் பிரச்சனை, பற்களில் சீழ்கட்டி மற்றும் இதர பல் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை ஏற்படுகின்றன.

வறண்ட வாய்

இந்த பாதிப்பும் பல் சீழ்கட்டிகளின் அபாயத்தை அதிகரிக்கும் வாய்ப்பை உண்டாக்கலாம்.

நோய் கண்டறிதல் முறை

நோய் கண்டறிதல் முறை

நோய்த்தொற்று மற்றும் அதன் தீவிரத்தை ஆய்வு செய்வதற்கும் புரிந்து கொள்வதற்கும், பல் மருத்துவர் பின்வருவனவற்றைச் செய்வார்

1. பற்களைத் தட்டிப் பார்ப்பது

சீழ்கட்டி எந்த இடத்தில் உள்ளது என்பதை உணர்வதற்கு இந்த முறை கையாளப்படும். வேரில் சீழ்கட்டிகள் இருப்பதால் தொடுதல் அல்லது எந்த விதமான அழுத்தத்திற்கும் உணர்திறன் அதிகமாகக் கொண்டிருக்கும்.

2. எக்ஸ் ரே

எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பதால் கட்டிகள் இருப்பதை அடையாளம் காண முடியும். கிருமி தொற்று பாதிப்பு மற்ற இடங்களில் பரவி உள்ளதா என்பதை தீர்மானிக்கவும், மற்ற இடங்களில் சீழ்கட்டிகள் உள்ளதா என்பதை காணவும் எக்ஸ் ரே உதவுகிறது.

3. சிடி ஸ்கேன்

சில வழக்குகளில் வலி மிக அதிகமாக இருக்கும்போது, தொற்று பாதிப்பின் அளவைத் தெரிந்துக் கொள்ள சிடி ஸ்கேன் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

சிகிச்சை முறைகள்

சிகிச்சை முறைகள்

கிருமி தோற்று பாதிப்பிற்கு மருத்துவ பராமரிப்பு மேற்கொள்வதால், தொற்று நீக்கப்பட்டு அதனுடன் தொடர்புடைய வலியும் குறைக்கப்படுகிறது. சீழ்கட்டிகளின் அறிகுறி மற்றும் அந்த நிலையின் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து சிகிச்சை மாறுபடும். பற்களில் உண்டாகும் சீழ்கட்டிகளுக்கான சிகிச்சை முறைகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றி இப்போது காண்போம்.

1. கட்டியை வடிய வைப்பது

கட்டியில் உள்ள சீழை வெளியேற்ற, பல் மருத்துவர் கட்டியில் சிறிதாக வெட்டுவார். கட்டியை வெட்டி, சீழ் வெளியேற்றப்பட்டவுடன், அந்தப் பகுதியை சலைன் நீரால் சுத்தம் செய்வார்.

2. வேர் கால்வாய் வழிமுறை

இந்த செயல்முறையில் பாதிக்கப்பட்ட பல்லில் துளையிட்டு சீழ் வெளியேற்றப்பட்டு, தொற்றும் நீக்கப்படுகிறது. பிறகு பற்கூழ் அறை மற்றும் வேர் கால்வாய் நிறைக்கப்பட்டு அடைக்கப்படுகிறது. பிறகு இதனைத் தொடர்ந்து பற்களின் மேல் பகுதியில் கேப் அணிவிக்கபட்டு வேர் கால்வாய் வழிமுறை வலிமையாக்கப்படுகிறது.

3. பல்லை அகற்றுவது

பற்களில் உண்டான சேதம் மிகவும் தீவிர நிலையை அடைந்திருந்தால், கட்டியை அகற்றுவதற்கு முன்னர், பற்களை அகற்றிவிட பல் மருத்துவர் பரிந்துரைப்பார்.

4. வெளிப்புறப் பொருளை அகற்றுவது

பாப்கார்ன் விதை அல்லது பழத்தின் விதை போன்ற வெளிப்புறப் பொருட்கள் பல்லில் சிக்கி இருந்தால், மருத்துவர் அந்தப் பொருளை அகற்றிவிட்டு, சலைன் நீர் கொண்டு பற்களை சுத்தம் செய்து சிகிச்சையை முடிவிற்கு கொண்டு வருவார்.

5. நுண்ணுயிர்க் கொல்லி

சீழ்கட்டிகள் இருக்கும் இடத்தைத் தாண்டி தொற்று பரவி இருந்தால் அல்லது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் பலவீனமாக இருந்தால், நுண்ணுயிர்க்கொல்லி மாத்திரைகளை எடுத்துக் கொள்ள மருத்துவர் பரிந்துரைப்பார். இதனால் தொற்று நீங்கி, வலியில் இருந்து நிவாரணம் கிடைக்க முடியும்.

ஏற்படும் சிக்கல்

ஏற்படும் சிக்கல்

இத்தகைய சீழ்கட்டிகள் பற்களில் பரவி இருப்பதை கவனிக்காமல் சிகிச்சை அளிக்காமல் இருப்பதால், பல்வேறு விதமான தொந்தரவுகள் எழ வாய்ப்பிருக்கிறது. சில அரிய வழக்குகளில், சிகிச்சைக்கு பின்னும் சில சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்

1. பல் கட்டி

பற்களின் வேரின் அடிப்பகுதியில் திரவம் நிரப்பப்பட்ட குழிகள் வளர்ச்சி பெறலாம்.

2. அடிமூளைச் சுரப்பி காற்றுப்புரை இரத்த உறைவு

மூளையின் அடிப்பகுதியில் ஒரு பெரிய நரம்பாகிய அடிமூளைச் சுரப்பியில் கிருமிகள் இரத்தம் உறைய வைக்கும் நிலையை உண்டாகலாம்.

3. எலும்புக் குழல் தொற்று

சீழ்கட்டிகளில் இருக்கும் கிருமிகள் இரத்த ஓட்டத்தில் கலந்து எலும்புகளை பாதிக்கும் நிலை உண்டாகலாம்.

4.லுட்விக் அஞ்சினா :(Ludwig's angina)

பல் சீழ்கட்டியில் உள்ள கிருமிகள் பரவியதால் வாயில் உண்டான தொற்று பாதிப்பு

5. அனுவெலும்பு சைனஸ்

கன்ன எலும்புகளுக்கு பின்புறம் இருக்கும் சிறிய இடத்தில் கிருமி தொற்று பரவுவதை அனுவெலும்பு சைனஸ் என்று கூறுவார்.

தடுப்பது எப்படி

தடுப்பது எப்படி

பற்களில் கிருமிகள் தொற்று ஏற்படாமல் தடுக்க ஒரு முக்கியமான மற்றும் கவனமான வழி, பற்களை சிறந்த முறையில் பராமரிப்பது மட்டுமே. பல் சொத்தை ஏற்படாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

சீழ்கட்டிகளைத் தடுக்கும் முறைகள் சிலவற்றை இப்போது பார்க்கலாம் ஆரோக்கியமான உணவை உண்ணுவது, இனிப்பு பொருட்கள் மற்றும் சிற்றுண்டி வகைகளை அளவாக எடுத்துக் கொள்வது

. ப்ளுரைடு சேர்க்கப்பட்ட நீரை அருந்துவது

. தளர்முறுக்கு பட்டு நூல் என்னும் டென்டல் ப்ளோஸ் பயன்படுத்தி பற்களின் இடையில் தினமும் சுத்தம் செய்வது

. ப்ளுரைடு பற்பசை பயன்படுத்தி ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்குவது.

. பல் சொத்தையைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பிற்காக, அன்டிசெப்டிக் அல்லது ப்ளுரைடு கொண்டு வாய் கொப்பளிப்பது

. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பல் துலக்கும் பிரஷ்ஷை மாற்றிக் கொள்வது , அல்லது பிரஷ் நார் பிரியும்போது அதனை மாற்றிக்கொள்வது

. பல் மருத்துவரிடம் சென்று வழக்கமான சோதனை செய்து, பற்களை சுத்தம் செய்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்வது

எளிய வீட்டுத் தீர்வுகள்

எளிய வீட்டுத் தீர்வுகள்

கிருமி தொற்றால் ஏற்படும் வலியை குறைக்க சில எளிய வழிகளை வீட்டிலேயே பின்பற்றலாம். அவை,

. உணவு அல்லது பானங்களை மிகவும் சூடாக அல்லது குளிர்ச்சியாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.

. மென்மையான பிரஷ் பயன்படுத்தி பல் துலக்கவும்.

. பாதிக்கபட்ட இடத்தில் நூல் கொண்டு சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.

. சீழ்கட்டி இல்லாத பக்கத்தில் உணவுகளை மென்று சாப்பிடவும்.

. வெதுவெதுப்பான உப்பு நீர் கொண்டு வாய் கொப்பளிக்கவும்.

. அசிடமிநோபேன் மற்றும் ஐ புப்ரோபின் போன்ற மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

MOST READ: ரோட்டில் போகும்போது கவனமாக இருக்க வேண்டிய 2 ராசிகள் யார் தெரியுமா?

இதையும் பயன்படுத்தலாம்...

இதையும் பயன்படுத்தலாம்...

. பேக்கிங் சோடா

. ஆரகனோ, கிராம்பு மற்றும் தைம் அத்தியாவசிய எண்ணெய்

. குளிர் ஒத்தடம்

. வெந்தய டீ

. ஹைட்ரஜன் பெராக்சைடு

. ஆயில் புல்லிங்

. பூண்டு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dental Absess: Types, Symptoms, Causes, Treatment and Remedies

When a tooth persistently throbs and keeps you up at night with pain, it could be something more worrisome than a simple toothache. An abscessed tooth is an infection within a tooth that has spread to the root tip or around the root.
Story first published: Monday, April 29, 2019, 16:14 [IST]
Desktop Bottom Promotion