Latest Updates
-
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
சாப்பிட வாங்கி வந்த முட்டை கோழி குஞ்சாக மாறியதால் பரபரப்பு... பாருங்க இந்த கொடுமைய
சாப்பிடுவதற்காக வாங்கிவந்த முட்டை குஞ்சு பொரித்த சுவாரஸ்ய சம்பவம் பற்றி இந்த பகுதியில் பார்க்கலாம். இந்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.
அசைவம் என்றாலே எல்லாருக்கும் தனிப்பிரியம் தான். அதிலும் சில பேருக்கு நான்வெஜ் வாசனை இல்லாமல் சாப்பிடவே முடியாது. சும்மா முகர்ந்து பார்த்தால் கூட நான்வெஜ் வாசனை அடிக்கனும். அப்படி தீவிர நான்வெஜ் பிரியராக இருக்கும் உங்களுக்கு எதிர்பாரா விதமாக வெஜ்க்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன நினைப்பீர்கள்.

கண்டிப்பாக கடுப்பாகி போய் விடுவீர்கள் அல்லவா. ஆசை ஆசையா வாங்கிட்டு வந்த சிக்கன் பீஸை வாய்ல கூட வைக்க முடியலைன்னா? மணக்க மணக்க ஆம்லெட் போட்டு மிளகு தூவி சாப்பிட முடியாமல் போச்சுன்னா? அவ்வளவு தான் வாழ்க்கையே வெறுத்திடும். அப்படி தான் சாப்பிடுவதற்கு முட்டை வாங்கி வந்த பொண்ணுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

வியட்நாமில் நடந்த நிகழ்ச்சி
இந்த ஆச்சரியமூட்டும் நிகழ்ச்சி வியட்நாம் நகரில் நடந்துள்ளது. அந்த நாட்டில் உள்ள பெண் ஒரு நாள் சாப்பிடுவதற்காக டஜன் கணக்கில் வாத்து முட்டைகளை ஆசை ஆசையாக வாங்கி வந்துள்ளார். ஆனால் அந்த முட்டைகள் அனைத்திலும் வாத்துக் குஞ்சு இருந்தது அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 டஜன் முட்டைகள்
இந்த கோடை காலத்தில் உடம்புக்கு எனர்ஜி தேவை என்று 2 டஜன் வாத்து முட்டைகளை வாங்கி சமையலறையில் வைத்துள்ளார்.

பேலட் டிஷ்
அவருக்கு தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாமில் புகழ்பெற்ற பேலட் என்ற டிஷ் மிகவும் பிடிக்குமாம். இந்த டிஷ் செய்ய வாத்து முட்டைகளைத் தான் பயன்படுத்துவார்களாம். அதற்காகத்தான் நிறைய டஜன் முட்டைகளை வாங்கி சமையலறையில் அடுக்கி வைத்துள்ளார்

குஞ்சு பொரித்தல்
ஆனால் அவர் வாங்கி வந்த முட்டைகள் குஞ்சு பொரிக்க ஆரம்பித்து விட்டதாம். டிஷ் செய்ய பயன்படுத்த முயன்ற போது உள்ளே அழ அழகான வாத்துக் குஞ்சுகள் வெளி வந்துள்ளது. இதில் ஆச்சர்யப்படும் விஷயம் என்னவென்றால் அவர் வாங்கி வந்த 24 முட்டை களிலிருந்தும் 24 குஞ்சுகள் வெளி வந்து அசத்தியுள்ளனர். இப்படி எதிர்பார்ப்பு விதமாக பிறந்த வாத்துக் குஞ்சுகளை நான் எப்படி பராமரிப்பேன் என்ற வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார் அந்த பெண்.

தத்தெடுத்தல்
அவர் தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த விஷயத்தை தெரிவித்து அந்த அழகான வாத்துக் குஞ்சுகளை தத்தெடுக்க கோரியுள்ளார். அப்படியே அந்த அழகான குஞ்சுகளின் போட்டோக்களை போடவும் அவர் மிஸ் பண்ணல.

காரணம் என்னவா இருக்கும்?
என்னங்க இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க. எதுக்கும் உங்க கிச்சன்ல இருக்கிற கோழி முட்டையையும் கொஞ்சம் பார்த்துக்கோங்கோ. உள்ளே இருந்து சிக்கன் 65 வந்தாலும் ஆச்சர்யப்படப் போறதிக்கில்லை. ஏன்னா வெயில் ரொம்ப அதிகம்.



Click it and Unblock the Notifications
