For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பரு முதல் மஞ்சள்காமாலை வரை பல பிரச்னைகளுக்கு தீர்வாகும் சிறுநீர்

|

சிறுநீர் என்பது விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் உள்ள சிறுநீரகங்களில் உருவாக்கப்படும் திரவ வடிவிலான ஒரு கழிவுப்பொருள் அல்லது பக்கவிளைவுப் பொருளாகும்.

benefits of urine

இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்க்குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, தற்காலிகமாக அங்கே சேகரிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறுநீர்வழி மூலம் உடலில் இருந்து வெளியேறுகின்றது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறுநீர்

சிறுநீர்

உடலுக்குத் தேவையற்ற நச்சுப்பொருட்கள், உடலிலுள்ள தேவையற்ற நீர் போன்றன சிறுநீர் மூலம் உடலில் இருந்து வெளியேற்றப்படுகின்றது. இந்த சிறுநீரை பல்வேறு வழிகளில் மீண்டும் பயன்படுத்த முடியும். அப்படி சிறுநீரை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பது பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

சிறுநீரில் நைட்ரஜன்,

பாஸ்பரஸ்,

பொட்டாசியம் (0.750கி/),

யூரியா (0.93கி/லி),

குளோரைடு (1.87 கி/லி)

சோடியம் (1.17 கி/லி)

கிரியேட்டினைன் (0.670கி/லி)

ஆகிய வேதிப்பொருள்கள் அடங்கியுள்ளன.

MOST READ: உங்க குடலை எப்பவும் சுத்தமா வெச்சிக்கணுமா? அப்போ இத தினமும் சாப்பிடுங்க...

சிறுநீர் கலர்

சிறுநீர் கலர்

சிறுநீருக்கு என்று தனியே நிறம் எதுவும் கிடையாது. ஆனால் நாம் உண்ணும் உணவு, மாறிவரும் பருவ நிலை மாற்றம், உடலின் உள்ளுறுப்புகளின் நிலை, தட்ப வெப்ப நிலைகள் ஆகிய பல காரணங்களினால் மனிதனுடைய சிறுநீரின் நிறம் அவ்வப்போது வேறு வேறாக மாறிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

நம்மில் சிலருக்கு பருவ கால மாற்றங்களினால் சிறுநீரின் நிறம் மாறும். சிலருடைய உணவுப் பழக்கத்துக்கு ஏற்ற நிறம் மாறும். நிறம் மாறுவதற்கு இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிறுநீரை எந்தெந்த விஷயங்களுக்குப் பயன்படுத்தலாம்?

விவசாயத்திற்கு

விவசாயத்திற்கு

மனித சிறுநீரை வயல்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். பெருகி வரும் மக்கள் தொகையால் உற்பத்தியாகும் மனித கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது வளரும் நாடுகளில் பெரிய சவாலாக மாறி வருகிறது. பொதுவாக மனித சிறுநீர் நச்சுத்தன்மையற்றது என்றாலும் அதில் உள்ள யூரியா, குளோரைடு மற்றும் சோடியம் உப்புகள் சுற்றுச்சூழலை மாசுப்படுத்துகிறது.

மனித சிறுநீரை உரிய முறையில் பயன்படுத்தினால் விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். இதன் பயன்கள் தமிழகத்திற்கும் கிடைக்கச் செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேளாண் பொருளாதாரத் துறை சிறப்பு முயற்சிகளை எடுத்து வருகிறது.

நீர்ச்சத்துக்கள்

நீர்ச்சத்துக்கள்

நம்முடைய சிறுநீரை வைத்தே நம்முடைய உடலில் உள்ள நீர்ச்சத்தின் அளவைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடியும். இங்கே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். உங்களுடைய சிறுநீரின் நிறம் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று சொல்கிறதென்று.

எவ்வளவுக்கு எவ்வளவு உங்களுடைய சிறுநீர் நிறமற்று கண்ணாடி போல இருக்கிறது அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.

நோய் அறிகுறிகள்

நோய் அறிகுறிகள்

சிறுநீர் என்றவுடன் நாம் கிண்டலாக எடுத்துக் கொள்வோம். ஆனாலும் அதையும் தாண்டி, நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தையும் நீர்ச்சத்தையும் அளக்கும் மீட்டராக நம்முடைய சிறுநீர் இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. அதோடு நம்முடைய உடலில் இருக்கும் பாதிப்பகள் குறித்து நம்மடைய சிறுநீரே வெளிக்காட்டிவிடும். சிறுநீர் சிவப்பு அல்லது பிங்க் ஆக வந்தால் சிறுநீரகக் கோளாறு இருக்கிறதென்று அர்த்தம். பழுப்பு நிறம் கல்லீரல் குறைபாட்டையும் நீலம் அல்லது பச்சை நிறம் அதிக மருந்துகள் உட்கொண்டதன் விளைவு என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

முகப்பரு

முகப்பரு

சிறுநீரை முகத்தில் எப்படி அப்ளை செய்வது என்று நாம் அருவருப்பாக நினைக்கலாம். ஆனால் உண்மையிலேயே சிறுநீரை முகத்தில் அப்ளை செய்து வந்தால் முகப்பருக்கள், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாக இருக்கும். இது இப்போது பயன்படுத்தப்பட்டிருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் இந்த முறையைத் தான் பின்பற்றியிருக்கிறார்கள் என்று புராண தொன்மங்களில் பார்க்க முடிகிறது.

MOST READ: எமன் ஏன் பாண்டவர்களை நரகத்திற்கும் துரியோதனனை சொர்க்கத்துக்கும் அனுப்பினார் தெரியுமா?

பல் துலக்க

பல் துலக்க

நம்முடைய சிறுநீரை பரிசோதனைக்காக எடுப்பதற்குள்ளேயே நாம் பலமுறை முகத்தை சுழிக்கிறோம். இதில் முகப்பரு, கரும்புள்ளி நீங்கும் என்பதெல்லாம் கொஞ்சம் சங்கோஷத்தை தந்தாலும் கூட உள்மருந்தாகவும் சிறுநீர் பல அற்புதங்களைச் செய்யும் என்கிறார்கள்.

இதைக்கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பேஸ்ட்டுக்கு பதிலாக சிறுநீரை பயன்படுத்தி பல் துலக்கினால் பற்கள் வெண்மையாக முத்துபோல பளிச்சிடும் என்று சொல்கிறார்கள். இது அறிவியல் ரீதியாக ஆராயப்பட்ட உண்மை.

இப்போதுதான் நாம் டூத் பேஸ்ட் தயாரித்துப் பயன்படுத்துகிறோம். நம்முடைய முன்னோர்கள் கரி, உப்பு கொண்டு துலக்கினார்கள் என்பது நமக்கு தெரியும். ஆனால் அதற்கு முன்பாக சிறுநீரில் பல் துலக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, ரோமானியர்கள் தங்களுடைய பற்களை வெண்மையாக்க, பிளீச் செய்ய என எல்லாவற்றுக்கும் சிறுநீரையே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

health and beauty benefits of urine

Urine or pee is a waste substance that is formed through biochemical reactions inside living organisms, which includes human beings, animals and plants. Urine comes in different colors, reflecting our body conditions as we release it. A healthy man excretes light colored urine, while the more unfit the person is, the darker the urine gets.
Story first published: Wednesday, September 19, 2018, 16:20 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more