எப்பவும் தூங்கி வழிஞ்சுட்டே இருக்கீங்களா? காரணம் இதுவாக் கூட இருக்கலாம்!

Posted By:
Subscribe to Boldsky

சிலர் காலை எழுந்ததிலிருந்தே ரொம்பவும் சோர்வா இருப்பதாக உணர்வார்கள். எந்த வேலையிலும்  நாட்டம் இருக்காது வேலை செய்யும் போது தூக்கமாக வரும்.

முந்தைய நாள் சரியாக தூக்கம் இல்லையென்றால், அல்லது அதிக வேலைப் பளு இருந்திருந்திருந்தால் அப்படி சோர்வாக இருப்பது இயற்கைதான். ஆனால் நன்றாக

தூங்கியும் மறு நாள் எழும்போது நீங்கள் சோர்வாக உணர்ந்தீர்களென்றால் அதனை அவ்வளவு ஈஸியாக எடுத்துக் கொள்ளாமல் அதற்கான காரணங்களை நீங்கள்என்னவென்று கண்டறிய வேண்டும்.

அதனை கண்டுகொள்ளாமல் விடும்போது உங்களுக்கு பல பிரச்சனைகள் தலைதூக்கும். தலைவலி, உடல் வலி, வேலையில் ஈடுபாடில்லாமை, மன அழுத்தம்,அஜீரணம்,போன்றவை உண்டாகும்.

எப்பவும் தூக்கம் வருவது போல் இருப்பதற்கு ஆயுர்வேதம் பல காரணங்களை கூறுகின்றது. என்னென்ன என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீரான தூக்கம் இல்லாமை :

சீரான தூக்கம் இல்லாமை :

ஒரு நாள் சீக்கிரம் தூங்குவது, மறு நாள் லேட்டாக தூங்கச் செல்வது என ஒவ்வொரு நாள் ஒவ்வொரு நேரம் தூங்கச் செல்லும்போது உங்களின் உங்களின் உடல் பாதிக்கின்றது.

இந்த ஒரு காரணத்தால் உங்களுக்கு தினமும் சோர்வாகவும் தூங்கி வழிவதுமாய் இருக்கத் தோன்றும்

 மன அழுத்தம் :

மன அழுத்தம் :

குடும்பம் அல்லது அலுவலகப் பிரச்சனைகளை எப்போதும் தலையில் ஏற்றிக் கொண்டிருந்தால் நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக இருப்பீர்கள்.எதிலும் நாட்டமின்மையுடனும், தூக்கம் தூக்கமாகவும் வரும்.

அதிக உணவு :

அதிக உணவு :

அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிட்டால் இயற்கையாகவே தூக்கம் வர ஆரம்பிக்கும். எனவே நீங்கள் எப்போதும் தூங்கி வழிந்தால், அதிகம் உணவு சாப்பிடுகிறீர்களா என

ஒரு தடவை ஆராய்ந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

எதிர்மறை எண்ணங்கள் :

எதிர்மறை எண்ணங்கள் :

சிலர் எப்போதும் சோர்வாகவும், தூங்கி வழிவதற்கும் இருக்கும் காரணம் அவர்களின் எதிர்மறை எண்ணங்கள். எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே பேசுவது,

எல்லாவற்றிற்கும் பயப்பட்டுக் கொண்டிருப்பதும் உணர்வுரீதியாக இந்த பிரச்சனையை தரும்.

நோய்கள் :

நோய்கள் :

சர்க்கரை வியாதி போன்ற வியாதிகள் தூக்கம், மற்றும் சோர்வை அதிகப்படுத்தும். ஹார்மோன் சீரில்லாமலிருந்தால், தைராய்டு பாதிப்பு இருந்தால் எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

மாத்திரைகள் :

மாத்திரைகள் :

உடல் பாதிப்புகளுக்கு நீங்கள் மாத்திரை எடுத்துக் கொண்டிருந்தால், மாத்திரைகளின் வீரியங்களால் தூக்கம் மற்றும் சோர்வு உண்டாகும். அந்த மாதிரி பிரச்சனையென்றால்

நீங்கள் மருத்துவரை நாடி மாத்திரைகளின் வீரியத்தை குறைக்கச் சொல்வது நல்லது.

உடல் வாகு :

உடல் வாகு :

எல்லாருடைய உடலும் வாதம், பித்தம், கபம் என மூன்று தோஷங்களால் ஆனது. ஆகவே அவரவர் உடலுக்கு தகுந்தாற்போல் உணவு முறைகளை கையாள வேண்டும்.

அதுபோல் பருவகாலங்களுக்கு தகுந்தாற்போலும் உண்ண வேண்டும்., குளிர்காலத்தில் குளிர்ச்சியான உணவுகளும், வெயில் காலத்தில் சூடான உணவுகளும்,

மழைக்காலத்தில் அதிக நீர்சத்து உணவுகளும் சாப்பிட்டால் உடலில் பாதிப்புகள் ஏற்படத்தான் செய்யும்.

தடுக்கும் முறைகள் :

தடுக்கும் முறைகள் :

அஜீரணத்தால் இப்படி தூங்கி வழியும்படி இருக்கலாம். ஆகவே அஜீரணத்தை குணப்படுத்த நீங்கள் முனைய வேண்டும்.

உடல் உழைப்பு இருந்தால் இரவில் நன்றாக தூங்கி மறு நாள் உற்சாகமா இருப்பீர்கள். குறைந்த பட்சம் உடற்பயிற்சியாவது அரை மணி நேரம் செய்ய வேண்டும்.

ஜன்னலை திற :

ஜன்னலை திற :

எப்போதும் மூடி வைத்திருக்கும் ஜன்னல் க்தவுகளை திறந்து வையுங்கள். சூரிய ஒளி வீட்டில் படுமாறு இருந்தால் வீட்டில் நேர்மறை எண்ண்ங்களும், சுறுசுறுப்பும் அதிகமாக இருக்கும்.

நேராக அமருங்கள் :

நேராக அமருங்கள் :

சரியான பொஸிஷனில் நீங்கள் அமராமல் இருந்தாலும், உங்கள் உடல் பாதிக்கப்படும். இதனால் உங்களுக்கு சோர்வு, தூக்க்ம அகையவை வரும். அதனால் எப்போதும் நேராக அமர்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

உணவு :

உணவு :

நல்ல ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடுங்கள். உணவில் சரியான சத்துக்கள் இல்லையென்றாலும், சோர்வு உண்டாகி தூக்கம் வரும். அதிக கொழுப்பு உணவுகளை

தவிருங்கள். இவை சோம்பேறித்தனத்தை உண்டாக்கும்.

மது தவிர்க்கவும் :

மது தவிர்க்கவும் :

மது, புகைப் பழக்கம் இரண்டுமே உடல் பிரச்சனையை உண்டாக்குபவை. இரண்டையும் கட்டாயம் தவிருங்கள். இதனால் இந்த பிரச்சனை மட்டுமல்ல பல வித நோய்களையும் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons why you feel sleepy all the time

Reasons why you feel sleepy all the time