For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஃப்ளூ காய்ச்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்து உங்கள் நுரையீரலை சுத்தப்படுத்தும் வீட்டு வைத்திய முறை

இயற்கை முறையில் ஃப்ளூ காய்ச்சலை சரி செய்து நம் நுரையீரலை எப்படி சுத்தப் படுத்துவதற்கான இயற்கை வைத்திய முறை பற்றிய தொகுப்பு

|

காரட் என்பது நமது உணவின் முக்கியமான காய்கறி ஆகும். இந்த காரட் நிறைய நன்மைகளை கொடுத்தாலும் மிகப்பெரிய பயனாக இது புளூ காய்ச்சலை தடுக்கிறது.

யாருக்கும் இதுவரை காரட்டை பற்றி இந்த உண்மை தெரிந்திருக்காது. ஆமாங்க காரட் கண்களுக்கு மட்டுமல்லாமல் சலதோஷம், இருமல் மற்றும் புளூ காய்ச்சல் போன்றவற்றிலிருந்து நம்மை குணமடையச் செய்கிறது.

காரட்டை கொண்டு தயாரிக்கப்படும் காரட் சிரப் நமக்கு ஏற்படும் சுவாச மண்டல பிரச்சினைகளை சரி செய்கிறது. இந்த காரட் சிரப்பில் லெமன் மற்றும் தேன் போன்றவைகளும் பயன்படுத்தப்படுகிறது.

Put An End To Flu & Clean Your Lungs With This Powerful Home Remedy

காரட் ஒரு நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். இது ஒரு இயற்கையான மருந்தாக செயல்படுகிறது. சலதோஷம், சளி மற்றும் புளூ போன்ற பிரச்சினைகளை இந்த இயற்கையான காரட் மருந்தை கொண்டு எதிர்த்து போரிடலாம்.

இதில் விட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் நமது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. எனவே இந்த பவர்புல் சிரப்பை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம். அதற்கு தேவையான பொருட்கள் காரட், லெமன் மற்றும் தேன் போன்றவை ஆகும்.

தேவையான பொருட்கள் :

5-6 பெரிய காரட்கள்

1 லெமன் ஜூஸ்

4-5 ஸ்பூன் தேன்

தயாரிக்கும் முறை :

5-6 கேரட்களை நன்றாக வெட்டி தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும். கேரட் மென்மையாகும் வரை இதை செய்யவும்

பிறகு ஆற வைக்கவும்

பிறகு வேக வைத்த காரட்டை கரண்டியை கொண்டு மசித்து கொள்ளவும்

பிறகு 1 லெமன் ஜூஸ் மற்றும் 4-5 ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.

நன்றாக கலக்கி காற்று புகாத ஒரு ஜாரில் அடைத்து வைத்து கொள்ளவும்

பயன்படுத்தும் முறை

தினமும் 4-5 ஸ்பூன் இந்த சிரப்பை பருக வேண்டும். அறிகுறிகள் போகும் வரை இதை செய்யவும்.

காரட் சிரப்பின் பயன்கள்

புளூ, சலதோஷம் இவற்றை தவிர இந்த சிரப் எலும்பு மூட்டுகளில் ஏற்படும் அழற்சி, தசைகள் மற்றும் எலும்புகளில் ஏற்படும் அழற்சி போன்றவற்றை குணப்படுத்துகிறது.

மேலும் மன அழுத்தம், நரம்புகளை அமைதிபடுத்துதல் மற்றும் அனிஸ்சிட்டி போன்ற பிரச்சினைகளை எதிர்த்து செயல்படுகிறது.

மேலும் உடலுக்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இதற்கு காரணம் இதிலுள்ள விட்டமின்கள், தாதுக்களான பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவை ஆகும்.

குறிப்புகள்

நீங்கள் டயாபெட்டிக் நோயாளியாக இருந்தாலோ அல்லது டையூரிடிக் மாத்திரைகளை எடுப்பவராக இருந்தால் அவர்கள் இந்த சிரப்பை எடுத்துக் கொள்ள கூடாது.

English summary

Put An End To Flu & Clean Your Lungs With This Powerful Home Remedy

Put An End To Flu & Clean Your Lungs With This Powerful Home Remedy
Story first published: Thursday, November 30, 2017, 18:12 [IST]
Desktop Bottom Promotion