Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
தாங்க முடியாத கணுக்கால் வலியா? இதோ ஒரு ஆயுர்வேத வைத்திய முறை!!
நமது உடலில் வலி உண்டானால் அது ஏதோ உள் பாதிப்பின் அறிகுறி, அவ்வகையில் கணுக்கால்களில் உண்டாகும் வலியும் உண்டு. கணுக்கால் வலியை போக்கும் ஒரு ஆயுர்வேத வைத்தியம் இங்கே குறிப்பிட்டப்பட்டுள்ளது.
கணுக்கால் அதாவது கால் பாதத்தை நன்கு ஊன்ற முடியாமல் குதிகாலில் பொறுக்கமுடியாத வலி உண்டாகும். காலை அழுத்தி, ஊன்ற முடியாது. மேலும் சிறு கட்டி போல் காணப்படும்.

காலை எழுந்தவுடன் கால் ஊன்றி நடக்க முடியாது. வெயில் வர வர கொஞ்சம் கொஞ்சமாக வலி குறையும்.
கால் பாதத்தில் ஒருவிதமான எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இதை சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால் நாளடைவில் நடக்க இயலாமல் போய்விடும்.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
வாதம், பித்தம், கபம் போன்றவற்றில் பித்தநீர் அதிகமாகி வாதநீருடன் சேரும்போது தலையில் நீராகக் கோர்த்து தலை வலியை ஏற்படுத்துகின்றது. இப்படி தலையில் கோர்க்கும் நீர் கழுத்து வழியாக இறங்கி காலின் அடிப்பகுதியில் கணுக்காலில் தங்கிவிடுகின்றது.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
மலச்சிக்கல், அஜீரணக் கோளாறு போன்ற வற்றால் கூட இந்த வலி உருவாகிறது.

கணுக்கால் வலி ஏற்பட காரணங்கள்:
பகல் தூக்கம், அதிக உடல் உழைப்பு, உடல் உழைப்பின்மை போன்ற காரணங்களால் கூட கணுக்கால் வலி உண்டாகும். வலியை போக்க இந்த வைத்தியத்தை செய்து பாருங்கள்.

தேவையானவை :
கணுக்கால் வலியை
வசம்பு - 1 ஸ்பூன்
மஞ்சள் - 1 ஸ்பூன்
சுக்கு - 1 ஸ்பூன்
சித்தரத்தை - 1 ஸ்பூன்

செய்முறை
இவற்றை எல்லாம் எடுத்து பொடி செய்து அல்லது கடைகளில் பொடியாகவே வாங்கி முருங்கை இலை அல்லது வெற்றிலை சாறில் அரைத்து இளம் சூடாக்கி காலில் பூசி வந்தால் கணுக்கால் கட்டி நீங்கி வலி குணமாகும்.

யூகலிப்டஸ் தைலம் :
கற்பூரவள்ளி தைலம் அல்லது யூகலிப்டஸ் தைலத்தை தடவி அரை மணி நேரம் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வந்தால் கணுக்காலில் உண்டான கட்டி சிறிது சிறிதாக குறையும்



Click it and Unblock the Notifications
