பல்வலி மற்றும் அல்சரை மணத்தக்காளி கீரையை கொண்டு எப்படி குணப்படுத்தலாம்?

Posted By:
Subscribe to Boldsky

மணித்தக்காளி கீரை நமது வீட்டிலேயே சாதாரணமாக வளரக்கூடியது. இது நமது ஊர்ப்பகுதிகளில் அதிகமாகவும், விலைமலிவாகவும் கிடைக்கும். இந்த மணித்தக்காளி கீரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த மணித்தக்காளி கீரையை எப்படி மருத்துவ பொருளாக பயன்படுத்தலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பற்கள் ஆடுகிறதா?

பற்கள் ஆடுகிறதா?

பற்கள் வலிமையின்றி ஒரு சிலருக்கு ஆடும். இதனை தடுக்க மணித்தக்காளி கீரையை பச்சையாக சுத்தம் செய்து மென்றால் இந்த பற்கள் ஆட்டம் குறையும்.

அல்சர்

அல்சர்

மணத்தக்காளி கீரையை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அதனுடன் வெந்தயமும் சேர்க்க வேண்டும். இந்த நீரினை கொண்டு வாய் கொப்பளித்தால், வாயில் இருக்க கூடிய அல்சர் குணமாகும். இந்த மணத்தக்காளி கீரை சாப்பிட்டால் குடல் புண்களும் குணமாகும்.

இரத்தம் கசிதல்

இரத்தம் கசிதல்

நீரிலே இட்டு காய்ச்சிய கீரையை வாயில் வைத்து அடக்கி வைத்துக்கொண்டால், பற்களில் இருந்து இரத்தம் கசிவதை இந்த கீரை கட்டுப்படுத்தும்.

வீக்கங்கள்

வீக்கங்கள்

இந்த மணித்தக்காளி கீரையை எந்த விதத்தில் சாப்பிட்டாலும், மண்ணீரலில் ஏற்படும் வீக்கம், கல்லீரலில் ஏற்படும் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்தும்.

புண்களை ஆற்ற...

புண்களை ஆற்ற...

மணித்தக்காளி கீரை மற்றும் வெந்தயத்தை நீரில் ஈட்டு நன்றாக காய்ச்சி, அந்த தேநீரை குடிக்கும் போது, குடல் புண்கள் ஆறும். அதுமட்டுமில்லாமல், இந்த நீரை கொண்டு வாய் கொப்பளிதால், வாய்ப்புண்கள் ஆறும்.

இரும்பு சத்து

இரும்பு சத்து

வெந்தயம் இரும்பு சத்து மாத்திரைகளுக்கு இணையாக செயல்படக்கூடியது. வெந்தயம் மற்றும் மணித்தக்காளி இரண்டுமே உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. இந்த தேநீரை தினமும் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies for ulcer and tooth pain

Here are the home remedies for ulcer and tooth pain
Story first published: Thursday, September 7, 2017, 11:57 [IST]
Subscribe Newsletter