For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரோஜாவின் சில இதழ்களை நீங்க சாப்பிட்டா உங்க உடலில் இந்த நோயெல்லாம் தூரம் விலகும்!!

By Hemalatha
|

ரோஜா பூக்களுக்கெல்லாம் அரசி. காதலின் சின்னம். அதன் அழகிற்கு ஈடு வேறெந்த பூவிற்கும் இல்லை என சொல்லலாம். காதல் முதல் கல்யாணம் வரை அதற்கென ஸ்பெஷலான இடம் எல்லாவற்றிலும் உண்டு. ரோஜா அழகுத் துறையிலும் கொடிக்கட்டிப் பறக்கிறது. சரும பொலிவிற்கு ரோஜாவின் இதழ்களே அதிகம் அழகு சாதனங்கள் தயாரிக்க பயன்படுகிறது

அழகில் மட்டுமா? உடல் நலத்திலும்தான். ரோஜாப் பூக்கள் பலவித மருத்துவ குணங்கள் கொண்டது. நோய்களை போக்கும் தன்மை பெற்றது. ஃபினைல் எத்தானல், க்ளோரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற மிக அருமையான வேதிச் சத்துக்கள் ரோஜாப் பூக்களில் அடங்கியுள்ளன.

இப்படி ஆல் இன் ஆல் அழகு ரோஜாவாய் இருக்கும் இதன் நன்மைகளையும், என்ன மாதிரியான நோய்களை குணப்படுத்தும் என்பதையும் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வயிற்றுப் போக்கிற்கு :

வயிற்றுப் போக்கிற்கு :

ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டு வந்தால்வயிற்றுப் போக்கு குணமாகும். ஆனால் ரோஜா இதழ்களை உங்கள் போக நன்றாக கழுவி அதன் பின் உபயோகியுங்கள்.

மூல வியாதிக்கு மருந்து :

மூல வியாதிக்கு மருந்து :

ரோஜாக்கள் மூல வியாதிக்கு மருந்தாக பயன்படுகின்றது. மூல வியாதினால் உதிரப் போக்கு இருந்தாலுஇம் இது கட்டுப்படுத்துகிறது. ரோஜா இதழ்களை நீர்ல் சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த நீரை வடிக்கட்டி குடித்தால் நல்ல பலன் தரும்.

உடலுக்கு பலம் :

உடலுக்கு பலம் :

ரோஜாப் பூவை கற்கண்டுடன் சம அளவு எடுத்து, தேன் சேர்த்து அன்றாடம் சூரிய ஒளியில் வைத்து, அதன் பின் இதனை காலை மாலை என இரு வேளையும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரலாம். அப்படி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு உற்சாகத்தையும், மனதுக்கு நல்ல உணர்வையும் தந்து மகிழ்விக்கும்.

கர்ப்பப்பை வலுப் பெற :

கர்ப்பப்பை வலுப் பெற :

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்களுக்கு ரோஜா நல்ல மருந்தாகும். ரோஜா இதழ்களை சாப்பிடுவதால் உடல் இளமையாக இருக்கும். வாய் சுத்தமாகும்.

சரும நோய்களை நீக்கும் :

சரும நோய்களை நீக்கும் :

ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை தினமும் உடலில் தேய்த்து அரை மணி கழித்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி நீரை எடுத்துச் சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

ரத்தம் சுத்தமாகும் ;

ரத்தம் சுத்தமாகும் ;

ரோஜா மொட்டுகளில் ஒரு கைப்பிடியளவு எடுத்து சுத்தம் செய்து நன்றாக மைப் போல அரைத்து, ஒரு டம்ளர் அளவு கெட்டியாக தயிரில் போட்டுக் கலக்கிக் காலை வேளையில் மட்டும் குடித்து விட வேண்டும்.

வாயுவைப் போக்கும் :

வாயுவைப் போக்கும் :

ரோஜா பூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும்

 உடல் எடையை குறைக்கும் :

உடல் எடையை குறைக்கும் :

நம்ப முடியுமா? உண்மையில் ரோஜா இதழ்கள் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்க முடியும் என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தினமும் கையளவு ரஒஜா இதழ்களை சாப்பிட்டால் அது நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. ரோஜா இதழ்களை நீரில் போட்டு கொதிக்க வைத்து நீரில் நிறம் மாறிய பின் நீரை வடிகட்டுங்கல். அதில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் உடல் எடை வேகமாக குறைக்கும்.

குல்கந்து :

குல்கந்து :

ரோஜாவை புதிதாக தினமும் கிடைப்பது கடினமென்பதால் கெட்டுப் போகாத அளவிற்கு குல்கந்து செய்யப்படுகிறது. அது பலவித சத்துக்கள் கலந்த லேகியமாக தயாரிக்கப்படுகிறது. இது மிகவும் நன்மையளிக்கக் கூடியது. சத்துக்களும் இருமடங்கு இருக்கும்.

குல்கந்து பல கடைகளில் கிடைத்தாலும் அவை கலப்படங்கள் செய்யப்படுவதால், தரமான குல்கந்து பார்த்து வாங்க வேண்டியது உங்கள் பொறுப்பு. தினமும் குல்கந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

அளவு

அளவு

சிறுவர்கள் 1/2 ஸ்பூன் மற்றும் பெரியவர்கள் 1 ஸ்பூன் அளவு தினமும் காலை மாலை என இருவேளை சாப்பிட்டு வரலாம். இப்படி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

அஜீரணக் கோளாறுகளுக்கு :

அஜீரணக் கோளாறுகளுக்கு :

உடலின் அதிக பித்த அளவை குறைத்து சீராக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும்.

மாதவிடாய் கோளாறை போக்கும் :

மாதவிடாய் கோளாறை போக்கும் :

வலியுடன் கூடிய மாதவிடாய் கோளாறுகளை குறைக்கும். கருப்பை தொற்றைப் போக்கும். வெள்ளைப் படுதல் அடிகக்டி உண்டானால் அதனை நிவர்த்தி செய்யும்.

இதய நோய்களை குணப்படுத்தும் :

இதய நோய்களை குணப்படுத்தும் :

பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான டானிக் - மருந்து. ஒரு மாதத்திற்கு மேல் தொடர்ச்சியாகச் சாப்பிட்டுவர இதயம், கல்லீரல், நுரையீரல், குடல் போன்றவை உறுதியடையும்.

வியர்வை நாற்றம் :

வியர்வை நாற்றம் :

சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவர்களுக்கு இது அருமருந்தாகும். அவர்கல் தியன்மும் குல்கந்து சாப்பொட்டு வந்தால் வியர்வை நாற்றம் வியர்வையினால் உண்டாகும் விஷ தன்மையை உங்கள் உடலில் இருந்து நீக்கி உங்கள் உடலை குளிர வைக்கிறது. குறிப்பாக இதை வெயில் காலங்களில் அதிகம் சாப்பிடுவது நல்லது.

வாய்ப்புண் :

வாய்ப்புண் :

வாய்ப் புண் மன அழுத்தத்தால் அல்லது குடலில் உண்டாகும் அல்சரால் சிலருக்கு உருவாகும். குல்கந்து உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வாய் புண் உருவாவதை குறைகிறது, மற்றும் வாய் புண்கள் காரணமாக வாயில் வரும் எரிச்சல் உணர்வு மற்றும் வலி குறைக்க உதவுகிறது.

தூக்கமின்மை :

தூக்கமின்மை :

தூக்கமில்லாமல் அவதிப்படுபவர்கள் தினமும் இரவில் பாலில் 1 ஸ்பூன் குல்கந்து கலந்து குடித்து வந்தால் நிம்மதியான தூக்கம் பெறுவீர்கள்.

குல்கந்து தயாரிக்கும் முறை :

குல்கந்து தயாரிக்கும் முறை :

புதிதான ரோஜா இதழ்கள் - 2 கைப்பிடி

கற்கண்டு- 4 கைப்பிடி

தேன்- தேவையான அளவு.

கண்ணாடி ஜார்

செய்முறை :

செய்முறை :

ரோஜா இதழ்களை சுத்தம் செய்து , எத்தனை அளவு எடுத்திருக்கிறீர்களோ அதைவிட இருமடங்கு கற்கண்டையும் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளுங்கள். படை போல் ஆகும் வரை இடிக்க வேண்டும். பின்னர் அதனை கண்ணாடி ஜாரில் போட்டு மூடி வைத்தபின் 4 நாட்கள் வெயிலில் வையுங்கள். அதன் பின் அதில் தேன் 2 ஸ்பூன் அளவு, ஏலக்காய்ப் பொடி 1ஸ்பூன் எடுத்து ரோஜா கலவையுடன் கலந்து நன்றாக கிளறி வைக்க வேண்டும். இப்போது குல்கந்து சாப்பிடுவதற்கு ரெடி

Image source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of eating rose petals

Health benefits of eating rose petals