வாரம் ஒருமுறை முருங்கைக் கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதங்கள் !!

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

முருங்கைக்காய் விதவிதமான சமையல்களிலில் பயன்படுத்தப்படும் காய்கறியாக உள்ளது. இதில் நிறைய மினிரல்கள், விட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. இந்த காய்கறி சாம்பார், பருப்பு மற்றும் சூப் வகைகளில் சேர்க்கப்படுகிறது.

அதே போல் இதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்களை கொண்டுள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. முருங்கைக் கீரை ஒரு சிறந்த ஆற்றலை தரும் கீரையாக இருப்பதோடு அதிகப்படியான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது.

நமது முன்னோர்கள் காலத்தில் இந்த முருங்கைக் கீரையை கொண்டு நிறைய உடல் நலக் குறைவுகளை சரி செய்துள்ளனர். இதில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி6, பொட்டாசியம், போலேட், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற எண்ணற்ற சத்துக்கள் அடங்கிய ஒரே கீரையாக இது உள்ளது.

இதை இதுவரை உங்கள் உணவில் நீங்கள் சேர்க்காமல் இருந்தால் கண்டிப்பாக இனி சேர்த்து கொள்ளுங்கள். முருங்கைக் கீரையின் 10 அற்புதமான நன்மைகளை பற்றி இக்கட்டுரையில் காண உள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடையை குறைக்க பயன்படுகிறது:

எடையை குறைக்க பயன்படுகிறது:

முருங்கைக்கீரையில் அதிகமான நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களான குளோரோஜெனிக் அமிலம் உள்ளது. இது உடம்பில் தங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து கெட்ட கொழுப்புகளை எரிக்கிறது.

பருக்களை குணபடுத்துதல்

பருக்களை குணபடுத்துதல்

முருங்கைக் கீரை முக சருமத்தை சுத்தமாக்குகிறது. முகப் பருக்களை எதிர்த்து போராடுகிறது. சருமத்தை தூய்மையாக்குவதோடு சருமத்திற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது.

உடலுக்கு உடனடியான ஆற்றலை அளித்தல்

உடலுக்கு உடனடியான ஆற்றலை அளித்தல்

முருங்கைக் கீரையில் உள்ள சத்துக்கள் சாப்பிட்ட உடனே உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது. இதிலுள்ள இரும்புச் சத்து மற்றும் மக்னீசியம் உங்களது களைப்பு மற்றும் சோர்வை போக்கி சுறுசுறுப்பாக்குகிறது.

இன்ஸோமினியா

இன்ஸோமினியா

முருங்கைக் கீரையில் உள்ள 18 அமினோ அமிலங்கள் நமது உடலுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. அமினோ அமிலமான ட்ரைப்டோபோஃன் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. நல்ல விதத்தில் ஹார்மோன்களின் செயல்பாட்டை சரி செய்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமது உடற் செல்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. இதில் கிட்டத்தட்ட 30 ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவைகள் புற்று நோய் வருவதை தடுக்கிறது. சருமம் வயதாகுவதை தடுத்து ஆரோக்கியமான சருமம் கிடைக்க உதவுகிறது.

டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைதல்

டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பை குறைதல்

டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பை முருங்கைக் கீரை குறைக்கிறது. இதிலுள்ள அஸ்கோர்பிக் அமிலம் சரியான அளவில் இன்சுலின் சுரப்புக்கு உதவுகிறது.

அழற்சி எதிர்ப்பு பொருள்

அழற்சி எதிர்ப்பு பொருள்

இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி செப்டிக் பொருட்கள் சிறிய காயங்களான வெட்டுக் காயங்கள், தீப்பட்ட காயங்கள் போன்றவற்றை தடுக்கிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல்

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுதல்

முருங்கைக் கீரையை தவறாது உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தமாக்குகிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

முருங்கைக் கீரையில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் சீரண சக்தியை அதிகரிக்கிறது. மேலும் வயிறு சம்பந்தமான பிரச்சினைகளை சரி செய்கிறது.

 மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுதல்

மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுதல்

முருங்கைக் கீரையில் உள்ள விட்டமின் ஈ, சி சத்துக்கள் மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. விட்டமின் சி நரம்புகளின் கடத்தல் திறனை அதிகரிக்கிறது. விட்டமின் ஈ சத்து டிமென்ஷியா மற்றும் அல்சீமர் நோய் வராமல் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Powerful Benefits Of Drumstick Leaves,

10 Powerful Benefits Of Drumstick Leaves
Story first published: Tuesday, December 26, 2017, 13:00 [IST]