For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலை மடக்கக் கூட முடியாத மூட்டு வலியா? இந்த யோகாவை செய்யுங்க

|

உங்கள் தசைகளும் , மூட்டுகளும் பலவீனமாக இருந்தால் அதன் அறிகுறிதான் மூட்டுகளில் வரும் இறுக்கம். இழுத்து பிடிப்பது போல் ஒரு உணர்வு உண்டாகும். எளிதாக வளைக்க முடியாது. இதற்கு காரணம் கால்சியம் மற்றும் மற்ற மினரல் குறைபாடுதான்.

மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த மருந்துக்களை சாப்பிட்டும் சரியாகவில்லையென்று அப்படியே தொடராதீர்கள். பின்னர் இன்னும் எலும்புகள் பலமிழந்து லேசான அடிபட்டால் கூட எலும்பு முறிவு உண்டாகும்.

Crescent Pose yoga to reduce Joint Stiffness

இந்த பிரச்சனையை தவிர்க்க யோகாவை செய்து பாருங்கள். பிறையோகா என்பது பிறை போன்ற வடிவத்தில் செய்வதாகும். இவை மூட்டுகளுக்கு நல்ல வலிமை தந்து இறுக்கத்தை போக்குகிறது.

தசைகளுக்கு போதிய பயிற்சி இல்லாத போது, அவைகளில் நெகிழ்வுத்தன்மை குறைந்து மூட்டு வலியை உண்டாக்கும். இந்த மாதிரியான பிரச்சனைகளை இந்த க்ரெஸன்ட் எனப்படும் பிறை யோகா குணப்படுத்துகிறது. அதனை எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை :

முதலில் ஆழ்ந்து மூச்சை இழுத்துவிட்டபின், கீழே உள்ள படத்தில் இருப்பது போல், குனிந்து மலை போன்ற வடிவத்தில் உள்ளங்கைகளால் தரையை தொடுங்கள். தலைக்கு சற்று முன்னதாக கை இருக்க வேண்டும்.

பின்னர் மெதுவாக வலது காலை முன்னோக்கி கொண்டு வாருங்கள். கைகளை மேலே தூக்கி வணக்கம் சொல்வது போல் வைத்திருங்கள். முதுகு லேசாக வளைக்க வேண்டும். தலை கைகளை பார்த்தவறு மேலே இருக்க வேண்டும். இடது காலை நன்றாக நிமிர்த்துங்கள்.

இந்த நிலையில் 1 நிமிடம் இருங்கள். பின்னர் இயல்பு நிலைக்கு வரவும். இப்போது இடது காலுக்கு இதே மாதிரி செய்யவும்.

பலன்கள் :

கால்களுக்கும், மூட்டுகளுக்கும் பலம் தருகிறது.முதுகு வலியை குறைக்கும். தோள்களுக்கு வலு தரும். உடல் முழுவதும் சக்தி பெறும்.

குறிப்பு :

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் மற்றும் இதய நோயாளிகள் இந்த யோகாவை தவிர்க்கவும்.

English summary

Crescent Pose yoga to reduce Joint Stiffness

Crescent Pose yoga to reduce Joint Stiffness
Story first published: Thursday, August 18, 2016, 13:08 [IST]
Desktop Bottom Promotion