For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜீரண சக்தி குறைவா இருக்கா? அர்த்த உத்தனாசனம் செஞ்சு பாருங்க !!

|

ஜீரண உறுப்பு ஆரோக்கியமா இல்லாத போது பல பிரச்சனைகள் உண்டாகும். சரியா சாப்பிட முடியாது. பசி எடுக்காது. வயிறு உப்புசம், வாயுதொல்லை, நெஞ்செரிச்சல் என பல இன்னல்களுக்கு ஆளாவீர்கள்.

அதோடு பசி எடுக்காத போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைபடும். ஜீரண உறுப்புகளை யார் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுளோடு வாழும் வாய்ப்புகள் அதிகம்.

ஆரோக்கியமான ஜீரண மண்டலத்தால் நல்ல ரத்த ஓட்டம், கொழுப்பு செரிமானம், நிறைய எனர்ஜி என தேக திடகாத்திரமோடு வாழ முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
யோகா :

யோகா :

உங்களுக்கு ஜீரண பிரச்சனை இருந்தால் விரைவில் சரி செய்து கொள்ளுங்கள். இந்த பிரச்சனையை யோகாவிலும் சரி பண்ணலாம்.

ஜீரண மண்டலங்கள் வலுப் பெறும். இதனால் நன்றாக பசி எடுத்து வேகமாக சத்துக்களை உட்கிரகிக்க முடியும். எந்த மாதிரியான ஆசனம் என பார்க்கலாம்.

அர்த்த உத்தனாசனா ;

அர்த்த உத்தனாசனா ;

உத்தனாசனா நேராக நெட்டுக்குத்தலாக உடலை வளைத்து செய்வது. அர்த்த என்றால் பாதி. பாதியாக உடலை வளைத்து செய்யப்படுவதால் இந்த ஆசனம் அர்த்த உத்தனாசனா எனப் பெயர் பெற்றிருக்கிறது. எப்படி செய்வது என பார்க்கலாம்.

செய்முறை :

செய்முறை :

தடாசனாவில் நில்லுங்கள். கால்களை நேராக வைத்து நிமிர்ந்து நிற்கவும். ஆழ்ந்து மூச்சை இழுத்து மெதுவாக விடவும். கூன் போடாமல் தோள்பட்டையை இறுக்கமாக வைத்திருக்கவும்.

 செய்முறை :

செய்முறை :

இப்போது மெதுவாக கையை நீட்டி குனியுங்கள். கீழே தரையை தொட முயலுங்கள். வயிறு, தொடைகளில் பதிந்தபடி தரையை தொடவும்.

மெதுவாக மூச்சை விட்டபடி இந்த நிலையில் 1 நிமிடம் நிற்கவும். பின் இயல்பு நிலைக்கு வாருங்கள்.

பலன்கள் :

பலன்கள் :

முதுகிற்கு பலமளிக்கும். வயிற்று வலியை குணப்படுத்தும். தோள்பட்டையை விசாலப்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

குறிப்பு :

குறிப்பு :

இந்த அர்த்த உத்தனாசனா பல பிரச்சனைகளுக்கு தீர்வு அளித்தாலும், கழுத்தில் அடிபட்டவர்கள், குறைவான ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த யோகாவை தவிர்க்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ardha uttanasana to improve Digestion

How to preform ardha uttanasana to improve digestion and function the digestive organ
Story first published: Wednesday, October 5, 2016, 15:47 [IST]
Desktop Bottom Promotion