For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதை சாப்பிட்டால் மூலநோய் வரவே வராது... ஆனா இப்படி இவ்வளவு தான் சாப்பிடணும்?

By Mahibala
|

இயற்கை மருத்துவம் என்றாலே எந்தவிதமான மருந்துகளும் இல்லாமல் உணவை வைத்து மட்டுமே நோய் தீர்க்கக் கூடியது தான் இயற்கை மருத்துவம். இந்த முறையைத் தான் நாம் பாட்டி வைத்தியம் என்ற பெயரிலும் அழைக்கின்றோம். ஏனென்றால், பாட்டி வைத்தியத்திலும் தனியாக மருந்தெல்லாம் கிடையாது. பாட்டி வைத்தியத்திலும் உணவு தான் பிரதான மருந்தாக விளங்குகிறது. அப்படி இயற்கை மருந்தான உணவின் மூலம் எப்படி மிக முக்கியப் பிரச்சினையாக இருக்கிற மூலத்தை சரி செய்யலாம் என்பது பற்றித் தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

மூலம் யாருக்கு வரும்? பொதுவாக மூல நோய் எதனால் வருகிறது? யாருக்கு வரும் என்பது தான் மிக மிக அடிப்படையான விஷயம். ஆம் மலச்சிக்கல் பிரச்சினை இருக்கின்ற எல்லோருக்குமே மூல நோய் வரும் வாய்ப்பு மிக மிக அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வகைகள்

வகைகள்

மூலம் என்றால் ஏதோ ஒரு வகை கட்டி என்று மட்டும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் மூலத்தில் மட்டும் மொத்தம் ஒன்பது வகை இருக்கிறதென்றும் 21 வகை இருக்கிறதென்றும் பலவாறு கூறப்படுகிறது. அவற்றில் சிலவற்றைக் குறித்து இங்கு பார்ப்போம்.

வெளி மூலம்

உள்மூலம்

பௌத்திர மூலம்

ரத்த மூலம்

சதை மூலம்

வெளுப்பு மூலம்

காற்றுமூலம்

நீர் மூலம்

தீ மூலம்

சீழ் மூலம்

என பலவகை உண்டு.

MOST READ: சாப்பாட்டில் முடி கிடந்தால் உண்மையிலே என்ன அர்த்தம்? விழுந்தால் என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

எந்த வகையான மூலம் வந்தாலும் அது மரண வலியைக் கொடுக்கும். அது அறுவை சிகிச்சை செய்தாலும் மூலத்தைப் பொருத்தவரையில் மீண்டும் வளரும். அதந்கு மிக முக்கியக் காரணமே மலச்சிக்கல் தான். நம்முடைய அன்றாட உணவில் உணவில் 70 முதல் 80 சதவீதம் வரை காய்கறிகள், கீரைகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் இயல்பாகவே மலம் வெளியேறுவது மிக அவசியம்.

அபூர்வ மூலிகை

அபூர்வ மூலிகை

பெரு நகரத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த மூலிகை கிடைக்காது. நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் மற்ற ஊர்ப் பகுதிகளில் ரோட்டோரங்களில் கூட எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும்.

MOST READ: இந்த தமிழ் புத்தாண்டில் நீங்கள் கைவிட வேண்டிய பத்து விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

பெயர் என்ன?

பெயர் என்ன?

இந்த அற்புத மூலிகையின் பெயர் துத்தி இலை. உங்களுக்குத் தெரியவில்லை என்றால் கிராமப் புறத்தில் இருப்பவர்களிடம் கேட்டால் தெரியும். இது மருந்தல்ல. இது ஒரு கீரை. யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

எப்படி சாப்பிட வேண்டும்?

எப்படி சாப்பிட வேண்டும்?

இந்த துத்தி இலைகளைப் பறித்து, ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு, அதை நன்கு அலசிக் கொள்ள வேண்டும். அதை நான்கு சின்ன வெங்காயத்தோடு சேர்த்து நன்கு மை போல அரைத்து மோரில் கலந்து தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்டாலே போதும். 9 வகையான மூலமும் குணமடையும். இது துளசியைப் போன்றுதான் சுவையுடன் இருக்கும். வெறும் வாயில் கூட மென்று சாப்பிடலாம். எந்தவித பக்க விளைவும் ஏற்படாது.

ரத்த மூலம் இருந்தால்

ரத்த மூலம் இருந்தால்

ரத்த மூலம் மிக கொடூரமான நோய். மலம் கழிக்கப் போனாலே ரத்தம் வெளியேறும். இது உள்ளும் வெளியும் பெரிதாக வலி தெரியாது. இந்த ரத்த மூலம் கட்டுப்பட ஒரு மூலிகை உண்டு. அதுதான் குப்பைமேனி இலை. இது எல்லா இடத்திலும் எளிதாகக் கிடைக்கக் கூடியது.

குப்பைமேனி இலையை கைப்பிடி அளவு எடுத்து நன்கு அலசிவிட்டு நன்கு மை போல அரைத்து அதில் பசும்பால் ஊற்றி மூன்று நாள் தொடர்ந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடனே கட்டுக்குள் வரும்.

MOST READ: புது வருஷத்துல உங்க ராசிக்கு எப்படி இருக்கு? யார் யார் எப்படி நடந்துக்கணும்?

நார்ச்சத்து

நார்ச்சத்து

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கலை கட்டுப்படுத்தும். மலச்சிக்கல் பிரச்சினை இல்லாமல் இருந்தாலே மூல நோயிலிருந்து விடுதலை பெற முடியும். அப்படியே வந்துவிட்டாலும் மேலே சொன்ன இரண்டு மூலிகைகளும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் மூலத்தை நிரந்தரமாகக் குணப்படுத்திக் கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Thuthi Herb For Curing Piles Completely In A Week

Herbal medicine is also called phytomedicine. It is refers to using a plant's seeds, berries, roots, leaves, bark, or flowers for disease treatment. Herbs have many golden phytochemicals or secondary metabolites to treat disease. They have a long tradition of use outside of conventional medicine. Hemorrhoids or Piles treatment through Herbs has been effective and a golden treatment without any side-effects.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more