"நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்-அது என்ன?"இந்த பழமொழிக்கு அர்த்தம் தெரிய இதப் படிங்க!

By: Gnaana
Subscribe to Boldsky

கிராமங்களில் சில புதிர்களை அடிக்கடி சொல்லி, சிறுவர்களிடம் அதன் பதிலைக் கேட்பார்கள், புதிர்களின் காரணம், புதிர்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயத்தை, அவர்கள் மனதில் நன்கு இருத்திக்கொள்ளவே. அது போல ஒரு புதிரை, இங்கே நாம் பார்க்கலாமா!?

"நாலு கீத்தில் ஒரு பந்தல், அதுக்கு ஒரே கால்" அது என்ன?

பந்தலுக்கு எப்படி ஒரே கால் என்று நிறைய யோசித்து, இருக்கும் பல்வேறு சிந்தனைகளில், இதையும் சேர்த்துக்கொண்டு சிரமப்பட வேண்டாம்.

மேலே இருக்கும் படத்திலேயே, இதற்கான விடை இருக்கிறது. கண்டுபிடித்து விட்டீர்களா? நீராரைக்கீரை, ஆலக்கீரை எனும் ஆரைக்கீரை தான், புதிருக்கான பதில். நான்கு கால்வட்ட இலைகளைத் தாங்கி நிற்கும் தண்டுகள் நிறைந்துள்ள ஆரைக்கீரை, ஆரை இனத்தில் கொடி போன்ற ஒரு கீரை வகைச்செடியாகும்.

மூன்று இலைகள் கொண்ட புளியாரை மற்றும் ஓரிலை கொண்ட வல்லாரை இதன் மற்ற வகைகளாகும். இதில், வல்லாரை தேவ மூலிகை, ஆற்றல்மிக்க காய கற்ப மூலிகையும் கூட.

நீர்ப்பாங்கான வயல்வெளிகளில், நெற்பயிர்களைவிட வேகமாக, வளமாக வளரும் ஒரு களைச்செடியாக, ஆரைக்கீரையைக் கருதினாலும், அவை அதி சிறப்புமிக்க, மனித உடல் நலம் காக்கும் ஒரு அரிய மூலிகையாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வீடுகளில் தினமும் ஒரு கீரை அவசியம் இருக்கும், அதிலும் கிராமங்களில் உள்ள வீடுகளில், நகரங்களில் கிடைக்காத ஆரைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரை, முடக்கத்தான், பொன்னாங்கன்னி மற்றும் பண்ணைக்கீரை போன்ற கீரைகள் தினமும் உணவில் இடம்பெற்றிருக்கும். அந்தக் கீரைகள் எல்லாம், உடலுக்கு தேவையான ஆற்றலை, சத்துக்களை அளிக்கும், உணவுகளாக, திகழ்ந்து, தனியே உடல் நலம் காக்கும் மருந்துகள் தேவையின்றி, இயற்கை வழியே, எல்லோரும் உடல் நலத்துடன் இருந்தார்கள்.

தற்காலங்களில், கீரைகளை மாதமொருமுறை, சாப்பாட்டில் காண்பதே, அரிதாகி வருகிறது. விளைவு? உடலில் உள்ள வியாதி எதிர்ப்பு ஆற்றல் குறைந்து, சிறு பாதிப்புகள் கூட, உடலை வெகுவாக சிரமப்படுத்திவிடும் காலகட்டத்தில், இன்றைய வாழ்க்கை இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரைக்கீரை:

ஆரைக்கீரை:

தமிழகத்தின் வாய்க்கால், குளம் போன்ற நீர்நிலைகளின் ஓரம், நீர்நிலைகளில், நீர்ப்பாங்கான இடங்களில், அதிகமாக வளரும் கீரையினம், ஆரைக்கீரையாகும். தண்ணீரிலும், தரையிலும் வளரும் அதிசயத் தன்மை மிக்கது. உலகெங்கும் காணப்படும் ஒரு நீர்த்தாவரம், ஆரைக்கீரை.

மேலைநாடுகளில் பண்ணை வீடுகளில், பூங்காக்களில் அழகுக்காக அமைக்கப்படும் நீர்த்தோட்டம் எனும் பசுமையான நீர்த்தாவரங்கள் கொண்ட நீரோடைகளில் அதிகம் வளரும், வளர்க்கப்படும் அழகுத் தாவரமாகவும் திகழ்கிறது, பசுமையான ஆரைக்கீரை.

கீரையிலுள்ள சத்துக்கள் :

கீரையிலுள்ள சத்துக்கள் :

அழகுக்கு மட்டுமல்லாமல், மனிதருக்கு பல்வேறு நன்மைகளையும் அளிக்கக்கூடியது, ஆரைக்கீரை. உடல் உறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு அவசியமான இரும்புச்சத்து, கால்சியம், சோடியம், மாங்கனீஷ், வைட்டமின்கள் மற்றும் பச்சையம் எனும் ஊட்டம் நிரம்பிய அரிய வகைக் கீரை இதுவாகும்

நரம்பு நோய்கள் குணமாகும் :

நரம்பு நோய்கள் குணமாகும் :

ஆரைக்கீரை உடலின் சூட்டைத்தணித்து, செரிமானமின்மை பாதிப்புகளை சரியாக்கும். இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு, நிவாரணம் தரும். மன நல பாதிப்புகள் மற்றும் காக்கா வலிப்பு போன்ற நரம்பு வியாதிகளுக்கும் பெண்களின் வெள்ளைப்படுதல் பாதிப்புகளுக்கும், சிறந்த தீர்வாக அமைகிறது.

வாய்ப்புண் குணமாகும் :

வாய்ப்புண் குணமாகும் :

ஆரைக்கீரைகள் சற்றே இனிப்புசுவை மிக்கவை, இந்தக் கீரைகளை நன்கு அலசி, பச்சையாகவே, மென்று தின்னலாம். இதனால், வாய்ப்புண் மற்றும் நாவின் சுவையின்மை பாதிப்புகள் விலகும். உடலில் செரிமான ஆற்றல் மேம்படும்.

சர்க்கரை பாதிப்பை சரி செய்யும் :

சர்க்கரை பாதிப்பை சரி செய்யும் :

ஆரைக்கீரைகளை நன்கு நிழலில் உலர்த்தி, அவற்றை இடித்து பொடியாக்கி, அந்தப் பொடியை, சிறிதளவு எடுத்து, நீரில் இட்டு, சுண்டக்காய்ச்சி, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை தொடர்ந்து பருகி வர, சர்க்கரை பாதிப்புகள் விலகி, சர்க்கரை அளவு, இரத்தத்தில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். இந்த மூலிகை நீரே, சிறுநீரில் இரத்தம் கலந்து வருவது மற்றும் சிறுநீர் எரிச்சல் பாதிப்பையும் சரி செய்யும்.

நீர்க்கடுப்பு போக்கும், :

நீர்க்கடுப்பு போக்கும், :

நீர்க்கடுப்பு என்பது, சிறுநீர்த் தாரையில் தொற்று ஏற்பட்டு அதனால், கடுமையான வேதனை ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி ஏற்படும்.

ஆயினும், சிறுநீர் வராமல், வேதனை அதிகரிக்கும், எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் மிகவும் சிரமம் தரும் இந்த பாதிப்பை, ஆரைக்கீரை மூலிகை நீர் சரிசெய்து, சிறுநீர்த்தாரை தொற்றை விலக்கி, சிறுநீரை இயல்பாக வெளியேற வைக்கும்

மன நல கோளாறுகளை சரி செய்யும் ஆரைக்கீரை..

மன நல கோளாறுகளை சரி செய்யும் ஆரைக்கீரை..

சிலருக்கு பணிகளில் உள்ள பாதுகாப்பு இன்மையால், அல்லது குடும்ப நலப் பிரச்னைகளால், தேவையற்ற சிந்தனைகள் ஏற்பட்டு, அதனால் மன அழுத்தம் மிகுந்து, மனக்குழப்பத்தில் யாருடனும் இயல்பாக இருக்க முடியாமல், தனித்துக் காணப்படுவார்கள்.

ஆரைக்கீரையை கடைந்து சாதத்தில் இட்டு பிசைந்தோ அல்லது, கூட்டு மற்றும் பொரியல் போன்றோ செய்து, உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட்டு வர, மனதில் தேவையற்ற சிந்தனைகளால் ஏற்படும் மன அழுத்தம், மன பிரமை மற்றும் மன வேதனை போன்ற பாதிப்புகள் விலகி, மன நலம் மேம்படும். ஆரைக்கீரையின் பொடியை தினமும் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும், பாதிப்புகள் விலகும்.

ஆண்களின் உயிர் ஆற்றலை அதிகரிக்கும் :

ஆண்களின் உயிர் ஆற்றலை அதிகரிக்கும் :

ஆரைக்கீரை பொடியை தினமும் சாப்பிட்டு வந்தாலோ அல்லது கீரையை உணவில் சேர்த்து வந்தாலோ, ஆண்களின் உயிர் ஆற்றலை வலுவாக்கி, அதிகரிக்க வைக்கும்.

பெண்களின் கருத்தரிப்பை விலக்கும் ஆரைக்கீரை...

குடும்ப சூழ்நிலைகள் அல்லது, பணிகளின் நெருக்கடிகள் போன்ற சூழலில், பெண்கள் தாய்மையடைவதைத் தள்ளிப்போட எண்ணுவர். ஆயினும் அதற்கு, மருந்துகள் எடுத்துக்கொள்ளவும் அச்சப்படுவார்கள். அந்த மருந்துகளால், நிரந்தரமாக, கருத்தரிக்க வாய்ப்பில்லாமல், மகப்பேறடைய முடியாமல் போய் விடுமோ என்று.

பெண்களின் இந்த அச்சங்களைத் தவிர்க்கும் ஒரு அரு மருந்தாக, இயற்கையாகக் கிடைக்கும், கருத்தடை மருந்தாக, பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை மூலிகையாக ஆரைக்கீரை திகழ்கிறது.

ஆரைக்கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர, மகப்பேறை தள்ளிப்போட நினைக்கும் பெண்களின், கருத்தரிப்பை விலக்கும் தன்மை மிக்கது. மேலும், தாய்ப்பால் சுரப்பையும் தடை செய்யும்.

எச்சரிக்கை :

எச்சரிக்கை :

கவனம் தேவை.:

வயிற்றில் மகவை சுமப்பவர்கள், கரு உண்டாகும் நிலையில் இருக்கும் பெண்கள், ஆரைக்கீரையை கட்டாயம் உணவில் இருந்து சேர்க்கக் கூடாது.

புளியாரைக் கீரையும், காய கற்ப மூலிகை வல்லாரையும் :

புளியாரைக் கீரையும், காய கற்ப மூலிகை வல்லாரையும் :

ஆரையின் மற்ற வகையான புளியாரை இலைகள் வீக்கம் மற்றும் கட்டிகளைக் கரைக்கும், வயிற்றுப் புண்ணை குணமாக்கும், வயிற்றுப் போக்கு மற்றும் சூட்டு பேதி போன்ற பாதிப்புகளை நிறுத்தும். கீரைகளை சமைத்து சாப்பிட, உடல் சூடு தணியும்.

 நோய் எதிர்ப்பு சக்தி :

நோய் எதிர்ப்பு சக்தி :

புளியாரைக்கீரைகளை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து அரைத்து மரு மற்றும் உண்ணிகள் மீது தினமும் தடவி வர, விரைவில் அவை மறைந்து விடும்.

வல்லாரைக்கீரை, பலன்கள் மிக அதிகம் தரும் காயகற்ப மூலிகையாகும். உடலின் பாதிப்புகளைத் தீர்க்கும்

அற்புதமூலிகை வல்லாரை.

தினமும் வல்லாரை சூரணத்தை, தேனில் குழைத்தோ அல்லது தனித்தோ சாப்பிட்டுவர, உடல் வியாதி எதிப்பு ஆற்றல் மிகுந்து, உடல் வலுவாகத் திகழும்.

வல்லாரை, மன அழுத்த பாதிப்புகளைப் போக்கும், ஞாபக சக்தியை அதிகரித்து, மூளையின் ஆற்றலை வளமாக்கி, செயல்களில் சுறுசுறுப்பை தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Regular eating of Marsilea Quadrifolia,improves your immunity

Regular eating of Marsilea Quadrifolia,improves your immunity
Subscribe Newsletter