ஸ்பைருலினாவை யாரெல்லாம், எப்போது சாப்பிட வேண்டும்!! அவசியமான தகவல்கள்!!

Posted By:
Subscribe to Boldsky

ஸ்பைருலினாவைப் பற்றி விளம்பரங்களில் பெரும்பாலும் பாத்திருப்பீர்கள். டயட்டை குறைக்கும் மாத்திரை வகைகளில் விளம்பரங்களில் ஸ்பைருலினாவைப் பற்றி பேச்சு வராமல் இருக்காது.

அப்படியென்ன அந்த ஸ்பபைருலினாவில் இருக்கிறது. அது எதனால் ஆனது என சந்தேகங்கள் உங்களுக்கு வந்திருக்கிறதா? அதனை யாரும் சாப்பிடலாமா? எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாமா என்று கேள்விகள் உங்கள் மனதில் எழுகிறதா?

How and When to take spirulina to get its more benefits

இப்படி பல விஷயங்கள் உங்களுக்கு அதனைப் பற்றி தெரியாமல் இருக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு மட்டுமல்ல,. அதனைப் பற்றி நீங்கள் தெரிந்திராத தகவல்களுடன் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்பைருலினா என்றால் என்ன?

ஸ்பைருலினா என்றால் என்ன?

ஸ்பைருலினா ஒரு பாசி வகை சேர்ந்தது. ஈரப்பதத்தில் வளரக் கூடியது. இது மிகவும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி கடற்பாசி வகையை சேர்ந்தது. விளையாட்டு வீரர்களுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் கொண்டது.

சத்துக்கள் :

சத்துக்கள் :

அதில் விட்டமின் பி, சி, டி, ஈ போன்ற விட்டமின் சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இதில் முக்கியமக குளோரோஃபில் அதிகம் காணப்படுகிறது. அதிக புரதமும் இருக்கின்றது. இது பல்வேறு உடல் கோளாறுகளை குணப்படுத்தும் அளவிற்கு பெரும் ஆற்றல் கொண்டது.

நன்மைகள் :

நன்மைகள் :

ஜீரண சக்திக்கு :

இது ஜீரண என்சைம்களை கொண்டுள்ளது. ஆகவே அஜீரணப் பிரச்சனை இருப்பவர்கள் எடுத்துக் கொள்வது நல்லது. இதில் கொழுப்பு இல்லாததால் எளிதில் செரிக்கபப்டுகிறது.

இளமையாக இருக்க :

இளமையாக இருக்க :

என்றும் இளமையாக இருக்க ஸ்பைர்லினாவை எடுத்துக் கொள்ளுங்கள். இது முதுமையை தள்ளிப் போடுகிறது. இதிலுள்ள சக்திவாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் குளோரோஃபில் இளமையான செல்களை தக்க வைக்க அவசியமாகும்.

கொழுப்பை கரைக்க :

கொழுப்பை கரைக்க :

உடல் எடை கூடிக் கொண்டே போகிறவர்களுக்கு சிறந்த டயட்டாக ஸ்பிருலினாவை சொல்லலாம். இது உடலில் இருக்கும் கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.

ரத்த சோகை :

ரத்த சோகை :

ரத்த சோகையால பாதிக்கப்பட்டவர்கள் ஸ்பைருலினாவை சாப்பிட பரிந்துரை செய்யப்படுகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. ரத்தம் மற்றும் இதர உடல் உறுப்புகளை சுத்தகரிக்க தூண்டுகிறது.

மூட்டு பாதிப்புகள் :

மூட்டு பாதிப்புகள் :

ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ், மூட்டு வலி போன்றவை வராமல் காக்கவும், வந்த பின் குணப்படுத்தவும் ஸ்பைருலினா மருந்தாக பயன்படுகிறது. மூட்டு வீக்கங்களை சரிப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு :

நோய் எதிர்ப்பு :

நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. அடிக்கடி சளி, காய்ச்சல் என அவதிப்படுபவர்கள் இதனை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். நல்ல நினைவுத் திறனையும் பெற உதவுகிறது.

யார் எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் :

யார் எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும் :

உடல் எடை குறைக்கனுமா?

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவுக்கு முன் அரை மணி நேரத்திற்கு முன்பு ஸ்பைருலினாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடல் எடையை ஏற்றனுமா?

உடல் எடையை ஏற்றனுமா?

உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் உணவு சாப்பிட்ட பின் ஸ்பைருலினாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பரிந்துரைக்கபப்டும் அளவு :

பரிந்துரைக்கபப்டும் அளவு :

பொதுவாக ஒரு நாளைக்கு 500 மி.கி அளவு எடுத்துக் கொள்ளலாம். முதலில் ஆரம்பிக்கும்போது குறைந்த அளவிலிருந்து சாப்பிட வேண்டும். இதனை சாப்பிடும் போது அதிக அளவில் நீரை குடிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How and When to take spirulina to get its more benefits

How and When to take spirulina to get its more benefits
Story first published: Thursday, January 11, 2018, 17:40 [IST]