For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..!

|

நம்மை அறியாமலே நாம் செய்ய கூடிய பல விஷயங்கள் நமக்கு நிச்சயம் விளைவை தரும். அது எவ்வளவு சிறிய செயலாக கூட இருக்கலாம். நமது உடலின் நலத்தை கூட இவை பாதிக்க கூடும். இதயம், சிறுநீரகம், மூளை இந்த வரிசையில் கல்லீரலும் அடங்கும். நாம் நமது கல்லீரலை பாதுகாப்பாக பார்த்து கொள்ளவில்லையென்றால் அவ்வளவு தான். கல்லீரல் பிரச்சினையை ஆரம்ப நிலையில் எளிதாக அறிந்து கொள்ள முடியாது.

கல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய 10 எளிய ஆயுர்வேத முறைகள்..!

உடலில் சேர கூடிய அழுக்குகளை வெளியேற்றுவதே இதன் முக்கிய கடமை. அழுக்குகளும், வேதி பொருட்களும் உடலிலேயே தங்கி விட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடும். அப்போ எப்படி தான் இந்த பிரச்சினைக்கு தீர்வை தேடுவது என நினைப்பவர்களுக்கு ஆயுர்வேத முறைகள் இருக்கிறது. என்னென்ன முறைகளை வைத்து கல்லீரலின் அழுக்குகளை சுத்தம் செய்யலாம் என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரிய உறுப்பு இதுதான்..!

பெரிய உறுப்பு இதுதான்..!

உடலில் மற்ற உறுப்புகளை காட்டிலும் கல்லீரல் தான் மிக பெரிய உறுப்பாக கருதப்படுகிறது. இதன் செயல்பாடு இன்றியமையாத ஒன்றாகும். கிட்டத்தட்ட 10 செ.மீ அளவும், 1.4 கிலோ எடையும் இது கொண்டிருக்குமாம். இதில் அடைப்புகள் ஏற்பட்டால் உடலின் மொத்த செயல்பாடும் நின்று விட கூடும்.

3 செயலகள்..!

3 செயலகள்..!

கல்லீரல் மூன்று முக்கிய செயல்களை உடலுக்கு செய்கிறது. அழுக்குகளை நீக்குவது, பித்த நீரை உற்பத்தி செய்வது, சத்துக்களை சேகரித்து வைப்பது ஆகிய செயல்களை கல்லீரல் செய்து வருகின்றது. இந்த செயல்களில் ஏதாவது கோளாறு நடந்தால் மற்ற உறுப்புகளும் படிப்படியாக பாதிக்கப்படும்.

மஞ்சள்

மஞ்சள்

"மிக சிறந்த கிருமி நாசினி" என்று போற்றப்படும் இந்த மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதில் உள்ள curcumin என்ற முக்கிய மூல பொருள் கல்லீரலை சுத்தம் செய்ய பெரிதும் உதவும். இதற்கு பாலில் சிறிது மஞ்சளை கலந்து குடித்தாலே போதும்.

முளைக்கீரை

முளைக்கீரை

கல்லீரல் பிரச்சினையாக்கு முளைக்கீரை அருமையான தீர்வை தருகிறது. அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் கே, வைட்டமின் எ, பொட்டாசியம் இதில் இருப்பதால் கல்லீரலை எளிதாக சுத்தம் செய்து விடலாம். மேலும், இதில் உள்ள கொழுப்புக்களை அகற்றி விடலாம்.

MOST READ: இவற்றையெல்லாம் செய்வதால் தான் உங்கள் கிட்னி சீக்கிரமாகவே சிதைவடைந்து விடுகிறது..!

வைத்திய முறை...

வைத்திய முறை...

முதலில் சமமான அளவு முளைக்கீரை மற்றும் கேரட்டை எடுத்து கொண்டு சிறிது சிறிதாக வெட்டி கொள்ளவும். பிறகு இதனை நன்கு அரைத்து கொண்டு வடிகட்டி கொள்ள வேண்டும். இந்த சாற்றை தினமும் தயாரித்து குடித்து வந்தாலே எளிதில் கல்லீரலை பாதுகாத்து விடலாம்.

சீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION)

சீமைக் காட்டு முள்ளங்கி (DANDELION)

மூலிகைகளில் அதிக மகத்துவம் பெற்ற மூலிகையாக இது கருதப்படுகிறது. ஆரோக்கியமான கல்லீரல் வேண்டும் என்றால் இந்த வேரை டீ போட்டு குடித்தாலே போதும். இதற்கு சிறிது சீமை காட்டு முள்ளங்கி வேரை நீரில் போட்டு, சிறிது நிமிடம் கொதிக்க விட்டு தினமும் 2 முறை குடித்து வந்தால் கல்லீரல் பிரச்சினை குணமாகும்.

நெல்லி

நெல்லி

வைட்டமின் சி நிறைந்துள்ள இந்த நெளி கனி கல்லீரலை ஆபத்தில் இருந்து காக்கும். தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தாலே நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழலாம். மேலும், உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை அனைத்து விதமான பிரச்சினைக்கும் இந்த நெல்லி கனி அற்புதமான மருந்தாக விளங்குகிறது.

அதிமதுரம்

அதிமதுரம்

ஆயுர்வேத மூலிகைகளில் பல்வேறு மகத்துவங்களை பெற்றது இந்த அதிமதுரம். இதனை டீ போன்று செய்து குடித்தால் கல்லீரல் அழுக்குகள் சுத்தமாகி விடும். இந்த டீயை தினமும் 1 வேலை குடித்து வந்தாலே கல்லீரல் கோளாறுகள் இனி உங்களை அண்டாது.

MOST READ: பெருங்காயத்தை உணவில் சேர்ப்பது உண்மையில் ஆரோக்கியமானதா?

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

கல்லீரலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க இந்த ஆளி விதை பெரிதும் பயன்படுகிறது. மேலும், இது கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்புக்களை குறைக்கவும் செய்யும். இதனை வறுத்து சாலட், அல்லது பிற வகையான உணவுகளில் சேர்த்து கொண்டு சாப்பிடலாம்.

 இஞ்சி

இஞ்சி

ஆயிரம் மருத்துவ புதையல்களை தனக்குளே வைத்திருக்கும் ஒரு மருத்துவ பெட்டகம் இந்த இஞ்சி. பல ஆயிரம் வருடங்களாக இதனை மருத்துவ பயனுக்காக பயன்படுத்தி வருகின்றனர். இஞ்சியில் உள்ள Gingerols என்ற மூல பொருள் கல்லீரல் கொழுப்புக்களை அகற்றி விடும். எனவே, இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.

கிரீன் டீ

கிரீன் டீ

ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகம் கொண்ட கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் அதிக ஆரோக்கியம் பெறலாம். கிரீன் டீயை குடித்து வருபவர்கள் நீண்ட காலம் நோய் நொடியின்றி சீரான ஆரோக்கியத்தோடு அதிக காலம் இளமையாக இருக்கலாம்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Herbs To Cure Liver Disesaes

With the intake of the right foods you can maintain your both physical and mental health.
Desktop Bottom Promotion