For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இளம்வயதிலே இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான திடுக்கிடும் காரணங்கள் என்னென்னனு தெரியுமா..?

|

இன்று பல வகையான நோய்களுக்கு ஆளாகி விடுகின்றோம். மற்ற நாட்டை விட இந்தியா தான் சுத்தத்திலும், சுகாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நாடாக உள்ளது என உலக சுகாதார மையம் (UNO) தெரிவித்துள்ளது. இது மிகவும் மோசமான நிலையாகவே பல காலமாக இருக்கிறது. இந்தியாவில் தான் மற்ற நாட்டை விட இளைஞர்கள் அதிகம் உள்ளனர்.

இளம்வயதிலே இந்தியர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான திடுக்கிடும் காரணங்கள் என்னென்னனு தெரியுமா..?

ஆனால், இங்கு தான் மற்ற நாட்டை விட நோய்களின் எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. அதிலும் நோய்கள் இப்போதெல்லாம் இளைய தலைமுறையினரை குறி வைத்தே வருகிறது. இந்த வகையில் மாரடைப்பும் அடங்கும். ஏன், இளம் வயதிலே மாரடைப்பு இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு வருகிறது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நோயின்றி வாழ்வாரே வாழ்வர்...!

நோயின்றி வாழ்வாரே வாழ்வர்...!

நம் முப்பாட்டன் வள்ளுவர் கூறியது போன்று "நோய்கள் இன்றி வாழும் வாழ்வே மிக சிறந்த வாழ்வாகும்". நோய்களுடன் நாம் வாழ்ந்தோம் என்றால் அது வலிகள் கொண்ட வாழ்க்கையாகவே இருக்கும். மற்ற நாடுகளை விட நம் நாட்டில் தான் அதிகப்படியான நோய்கள் கொண்ட மக்கள் இருக்கின்றனர்.

திடுக்கிடும் புள்ளி விவரம்..!

திடுக்கிடும் புள்ளி விவரம்..!

உலக அளவில் 17 மில்லியன் மக்கள் சராசரியாக இதய நோய்களினால் இறக்கின்றனர். இதில் 3 மில்லியன் மக்கள் மாரடைப்பால் இறக்கின்றனர். இதில் 14 லட்சம் மக்கள் நகர் புறத்தை சேர்ந்தவர்கள். கிராம புறத்தில் 16 லட்சம் மக்கள் இதில் அடங்குவர்.

இந்தியாவில் நிலைமை என்ன..?

இந்தியாவில் நிலைமை என்ன..?

இந்தியர்கள் 8 முதல் 10 வயது முதலே மாரடைப்பு சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுக்கு கீழுள்ளவர்கள் மக்கள் 40 சதவீதம் இதய நோய்களால் அவதிப்படுகின்றனர். இதில் பாதி சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தங்களது உயிரையே இழக்கின்றனர்.

யாருடைய சதி..?

யாருடைய சதி..?

இது போன்ற நோய்களின் எண்ணிக்கை கூடுவதால் நாம் மற்ற நாட்டினரின் மேல் சந்தேகம் கொள்வோம். இது போன்ற நோய்கள் ஒரு சில நாடுகளில் அவர்களது எதிரி நாடுகளாக கருதப்படுவோர் செய்வதாக ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. என்னவாக இருந்தாலும், நம் அரசாங்கமும் மக்களும் ஒன்று இணைந்தால் மட்டுமே நம்மால் இந்த சதியை முறியடிக்க முடியும்.

MOST READ: ஆண்களுக்கு எந்த கண் துடித்தால் நல்லது நடக்கும்..? கண்கள் துடிப்பது உண்மையில் ஆபத்தா..?

ஏன் மாரடைப்பு..?

ஏன் மாரடைப்பு..?

மாரடைப்பு இளம் வயதிலே இத்தியர்களுக்கு வருவதற்கு பல்வேறு காரணிகள் கூறப்படுகிறது. உணவின் மூலமாகவும், அன்றாட செயல்கள் மூலமாகவும், சுற்றுசுழல் காரணமாகவும், மருத்துவ துறையின் தவறான அணுகு முறையாலும் இந்த மாரடைப்பு இளம் வயதினருக்கு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

கெட்ட கொலஸ்ட்ரால் தெரியுமா..?

கெட்ட கொலஸ்ட்ரால் தெரியுமா..?

நமது உடலில் இரு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன. ஒன்று நல்ல கொலஸ்ட்ரால், இன்னொன்று கெட்ட கொலஸ்ட்ரால். இதில் இரண்டாவது வகை மிக மோசமானதாகும். இதுதான் நமக்கு மாரடைப்பை தருகிறது. இவை ரத்த குழாய்களில் படிந்து ரத்த ஓட்டத்தை முற்றிலுமாக தடை செய்து விடுகிறது.

உயர் ரத்த அழுத்தமா..?

உயர் ரத்த அழுத்தமா..?

உடலில் அதிகமான ரத்த அழுத்தம் இருந்தால் அது நமக்கு பல வகையில் பாதிப்பை தரும். குறிப்பாக மாரடைப்பை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் ரத்த குழாய்கள் வீக்கம் பெற்று ரத்தம் செல்வது தடை ஆகி விடும். எனவே, இதுவும் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணமாகும்.

சர்க்கரை நோயும் தான்..!

சர்க்கரை நோயும் தான்..!

சர்க்கரை நோயாளிகளில் பெரும்பான்மையோருக்கு இந்த மாரடைப்பு கோளாறும் இருக்கின்றது. சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாத நேரங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். எனவே, இது ரத்த ஓட்டத்தை பாதித்து மாரடைப்பை தரும்.

MOST READ: முட்டையை ஃபிரிட்ஜில் வைப்பது சரியா..? தவறா..? அப்படி வைத்தால் என்ன நடக்கும்..?

புகை இதயத்திற்கும் பகை..!

புகை இதயத்திற்கும் பகை..!

புகை பழக்கம் உள்ளோர்க்கு அதிக படியான நோய்கள் வருவதற்கு எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சு பொருள் நமது நுரையீரலை பாதித்து விடுகிறது. எனவே, இரத்த குழாய்களும் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பை தருகிறது.

வாழ்வியல் முறை மாற்றமா..?

வாழ்வியல் முறை மாற்றமா..?

இளம் தலைமுறையினருக்கு இந்த மாரடைப்பு வருவதற்கு அவர்களது வாழ்வியல் மாற்றமும் ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காலை எழுந்தவுடன் மாத்திரை போட்டு கொண்டே அந்த நாளை தொடங்குகின்றனர். இதுவே மிக மோசமான நிலைதான். இதிலிருந்து தப்பிக்க சிறந்த உணவு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான சூழல் கட்டாயம் வேண்டும்.

இதய பாதுகாப்பு பற்றிய இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why More Young Indians Are Having heart Attacks?

Particularly, shocking is the increased rate in heart attacks among young Indian people.
Desktop Bottom Promotion