For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் இதயத்தின் லப்-டப் சத்தத்தை நிறுத்த கூடிய அறிகுறிகள் இவைதான்..!

|

காதலின் அழியாத சின்னமாக கருதப்படும் இந்த இதயம், நமது உடலின் மிக முக்கிய உறுப்பாகும். மற்ற உறுப்புகள் இருந்தாலும், இதயம் இல்லையென்றால் நாம் அவ்வளவுதான். இதயத்தை அதிக அக்கறையுடன் நாம் பாதுக்காக்க வேண்டும். இல்லையென்றால் அது விரைவிலே செயலிழக்க தொடங்கி விடும்.

உங்கள் இதயத்தின் லப்-டப் சத்தத்தை நிறுத்த கூடிய அறிகுறிகள் இவைதான்..!

நம் உடலில் ஏற்படுகின்ற பல அறிகுறிகளை நாம் கொஞ்சம் கூட கண்டுகொள்வதே இல்லை. அந்த வகையில், இதயத்தின் லப்-டப் சத்தத்தை நிறுத்த கூடிய ஒரு சில சாதாரணமான அறிகுறிகள் நமது உடலில் ஏற்படுகிறதாம். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என் இனிய இதயமே..!

என் இனிய இதயமே..!

பல காதலர்களை படாத பாடு செய்யும் ஒரு அழகான உறுப்பு தான் இந்த இதயம். இது அறிவியல் பூர்வமாக இல்லையென்றாலும், உணர்வு பூர்வமாக பார்க்கப்படுகிறது. இவ்வளவு மகத்துவம் பெற்ற இதயத்தை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும். உடலில் ஏதேனும் புது வித அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் அதை கண்டு கொள்ளாமல் இருக்காதீர்கள்.

கைகளில் வலியா..?

கைகளில் வலியா..?

பலருக்கு கைகளில் ஒரு வித வலி ஏற்பட்டால் அதை சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். குறிப்பாக உடலின் இடது புறம் முழுக்க வலியாக இருந்தால் அது உங்கள் இதயம் உங்களுக்கு கொடுக்கும் எச்சரிக்கை மணியாகவும் இருக்கலாம். எனவே, இவ்வாறு இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.

நீல நிறமா..?

நீல நிறமா..?

உங்களின் தோல் அல்லது முகத்தின் சருமம் மிகவும் வெளிர்ந்து அல்லது நீல நிறமாக உள்ளதா..? இதை சாதாரன விஷயமாக நாம் எடுத்து கொள்ள கூடாது. இது போன்று உங்களுக்கு இருப்பதற்கு காரணம், உடலில் ரத்தம் சீராக ஓடாமல் இருப்பதே. எனவே, இது உங்கள் இதயம் ஆபத்தில் உள்ளதை உணர்த்துகிறது.

கால் பகுதியில் வீக்கமா..?

கால் பகுதியில் வீக்கமா..?

உங்களின் இதயம் சரியாக வேலை செய்யவில்லையென்றால் ரத்த நாளங்களின் வழியாக ஒரு வித திரவம் வெளிவர தொடங்கும். இவை கால் பகுதியில் உள்ள திசுக்களின் வழியாக முதலில் வெளியேறும். எனவே, உங்களின் கால் அல்லது கணுக்கால் வீக்கம் அடைந்தால் அதை இதய நோய்க்கான பிரச்சினையாகும் இருக்கலாம்.

MOST READ: மறைந்து தாக்கும் கொடூர புற்றுநோய்கள்..! இவை உங்கள் உடலில் இருப்பது கூட தெரியாதாம்..!

லப்-டப் எகுறுகிறதா..?

லப்-டப் எகுறுகிறதா..?

96" படத்தில் காட்டுவது போன்றில்லாமல், எதற்கெடுத்தாலும் உங்களின் இதய துடிப்பு அபிரிமிதமான அளவில் அடித்து கொண்டால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ளாதீர்கள். உங்களின் இதயம் அபாய நிலையில் உள்ளது என்பதையே இது உணர்த்துகிறது.

திடீரென்று அலர்ஜியா..?

திடீரென்று அலர்ஜியா..?

உடலில் ஒரு விதமான அலர்ஜி போன்றோ அல்லது ரத்தம் கட்டி கொள்வது போன்று இருந்தால் கொஞ்சம் ஆபத்தான அறிகுறியாகும். அதுவும் உங்கள் இதயம் உங்களுக்கு கொடுக்கின்ற முக்கிய அலாரம் என்றே எடுத்து கொள்ளலாம். இது போன்று இருந்தால், 48% உயர் ரத்த அழுத்தமாக இருக்கலாம், 29% அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பாக இருக்கலாம், முக்கியமாக 59% இதய துடிப்பு நிறுத்தத்திற்கான அறிகுறியாக இருக்கலாம்.

தொண்டை, தாடை பகுதியில் வலியா..?

தொண்டை, தாடை பகுதியில் வலியா..?

உங்களின் தொண்டை மற்றும் தாடை பகுதியில் வலி ஏற்பட்டால் நேரடியாக அது இதய நோய்க்கான அறிகுறியாக இருக்காது. ஆனால், இதயத்தில் ஏற்பட்ட கோளாறு கொஞ்சம் கொஞ்சமாக தசை பகுதிகளையும் தாக்க கூடும். அந்த வகையில் உங்களுக்கு தொண்டை அல்லது தாடை பகுதியில் வலி இருந்தால் சாதாரணமாக நினைக்காதீர்கள்.

அடிக்கடி மயக்கமா..?

அடிக்கடி மயக்கமா..?

எப்போ பார்த்தாலும் மயங்கி விழுந்து விடுகிறீர்களா..? அல்லது அதிக சோர்வாக உணர்கிறீர்களா..? இதற்கு காரணம் உங்கள் இதயமாக கூட இருக்கலாம். ரத்த ஓட்டம் அடிக்கடி தடைபட்டால் இந்த நிலை ஏற்படும். எனவே, இது போன்று உங்களுக்கு இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.

MOST READ:புதினாவை முகர்ந்தாலே உடல் எடை குறைந்து விடுமாம்..! எப்படினு தெரிஞ்சிக்கோங்க...

அதிக தயக்கமா..? மன அழுத்தமா..?

அதிக தயக்கமா..? மன அழுத்தமா..?

இத்தனை நாளாக இல்லாமல் இப்போது தான் ஒரு சில நாளாக உங்களுக்கு அதிக தயக்கமும், பயமும், குழப்பமும்,மன அழுத்தமும் ஏற்படுகிறதென்றால் கொஞ்சம் எச்சரிக்கையாக நீங்கள் இருக்க வேண்டும். இதற்கும் இதய நோய்களுக்கும் அதிக தொடர்பு உள்ளது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வியர்த்து கொட்டுகிறதா..?

வியர்த்து கொட்டுகிறதா..?

எங்கே போனாலும் வியர்த்து கொட்டுகிறதா..? உடல் முழுக்க சில்லென்று ரத்தமே பாயாதவாறு இருக்கிறதா..? இது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி இருந்தால் இதய பிரச்சினைகள் அதிகம் உள்ளது என்று அர்த்தம்.

பசியின்மை, வாந்தி

பசியின்மை, வாந்தி

பலருக்கு நீண்ட நாட்களாக பசியே எடுக்காமல் இருக்கும். மேலும், கொஞ்சமாக சாப்பிட்டால் கூட வாந்தி வருவது போன்ற நிலை ஏற்படும். இவ்வாறு உங்களுக்கு அறிகுறி தென்பட்டால் உங்களின் இதயம் துடிப்பை நிறுத்தி கொள்ள போவதாக கூட இருக்கலாம்.

மேற்சொன்ன அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் மருத்துவரை ஆலோசியுங்கள் நண்பர்களே. மேலும், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் பிறருடனும் பகிருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Warning Signs That Your Heart Doesn’t Work Properly

These are the warning signs that your heart does not working properly
Desktop Bottom Promotion