For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாரடைப்பை தடுக்க இவற்றை சாப்பிட்டாலே போதுமாம்..! மருத்துவர்களின் முதன்மையான பரிந்துரை...

|

இதயம் மிக முக்கிய உறுப்பாக நமது உடலில் கருதப்படுகிறது. இதயத்தின் செயல்திறன் குறைந்து கொண்டே போனால், கடைசியில் மரணம் தான் நேரும். இதயத்தின் ஆரோக்கியத்தை பற்றி நாம் கவனமே செலுத்துவதில்லை. இது மிக பெரிய விளைவை தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாரடைப்பை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது பாதிக்கும் மேற்பட்டவர்களின் பிரச்சினையாக இருக்கிறதாம்.

ஆனால், இதனை முன்கூட்டியே தடுக்க முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். எவ்வாறு தடுப்பது என்பதையும், எதன் மூலம் தடுப்பது என்பதையும் விரிவாக இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விபரீதத்தின் விளிம்பில்...!

விபரீதத்தின் விளிம்பில்...!

இன்று பலரும் பல விதமான நோய்களுக்கு ஆளாகி கொண்டிருக்கின்றோம். அதில் முதன்மையான ஒன்றாக இதயம் சார்ந்த நோய்களும் அடங்கும். நம்மில் அதிகமானோர் விபரீதத்தின் விளிம்பில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதய நோய்களில் இருந்து பழங்கள் மற்றும் காய்கறிகள் 35 சதவீதம் காக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

பூண்டு

பூண்டு

இதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. இதில் அல்லிசின்(allicin) எனப்படும் முக்கிய மூல பொருள் உள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். குறிப்பாக anti-carcinogenic தன்மை அதிகம் நிறைத்துள்ளதாக ஆய்வுகள் சொல்கிறது. எனவே, மாரடைப்புகளை பூண்டு தடுக்கும்.

ஆரஞ்ச்

ஆரஞ்ச்

வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ள இந்த ஆரஞ்சை அதிகம் உணவில் சேர்த்து கொண்டால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம். குறிப்பாக கொலெஸ்ட்ரோலின் அளவை இது கட்டுக்குள் வைக்குமாம். இவை இதயத்தில் ஏதேனும் அடைப்புகள் இருந்தால் அதனையும் சரி செய்து விடுமாம்.

மாதுளை

மாதுளை

இதயத்தின் நலனை அக்கறையுடன் பார்த்து கொள்கிறது மாதுளை. இவை ரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் இதில் இருப்பதால் எதிர்ப்பு சக்தியை கூட்டி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

MOST READ: பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

காலே

காலே

இந்த பச்சை கீரையை நம் உணவில் சேர்த்து கொண்டால் நமது உடலுக்கு அதிக நன்மையை தரும். இதில் அதிக அளவில் பொட்டாசியம், நார்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. எனவே, இவை இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்குமாம்.

திராட்சை

திராட்சை

எண்ணற்ற அளவில் பிளவானட்ஸ் மற்றும் வைட்டமின் சி கொண்ட பழ வகைகளில் இந்த திராட்சையும் ஒன்று. இது மாரடைப்பு ஏற்படுவதை 20 சதவீதம் வரை தடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, இந்த வகை சிட்ரஸ் பழங்கள் நல்ல ஆரோக்கியத்தை உடலுக்கு தரும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள உருளைக்கிழங்கு இதய நலனை பாதுகாக்கிறது. ஆனால், உருளை கிழங்கை வறுத்து சாப்பிட கூடாது. மாறாக அவற்றை வேக வைத்து சாப்பிடுதலே இதய ஆரோக்கியத்தை பலப்படுத்தும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

தக்காளி

தக்காளி

உணவில் பெரும்பாலும் நாம் சேர்த்து கொள்ளும் இந்த தக்காளியில் உள்ள lycopene என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தொடர்ந்து தக்காளி ஜுஸை குடித்து உடல் நலம் நன்றாக இருக்கும். குறிப்பாக மாரடைப்பு ஏற்படுவதை இது தடுக்கும் ஆற்றல் கொண்டதாம்.

MOST READ: ஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்க, தினமும் 1 கிளாஸ் பீர் குடித்தாலே போதுமாம்...!

பாதாம்

பாதாம்

வைட்டமின் ஈ நிறைந்துள்ள பாதாம் இதயத்திற்கு பல வித நன்மைகளை தரும். அத்துடன் பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை போன்றவையும் இதய ஆரோக்கியத்தை காக்குமாம். மேலும், இவை உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்டரோலை குறைக்க கூடியதாம்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

22 சதவீதம் இதய கோளாறுகளை தடுப்பதில் இந்த பருப்பு வகைகள் முதன்மையான இடத்தில் உள்ளது. பீன்ஸ், பச்சை பட்டாணி போன்றவை ஆரோக்கியமான உணவு வகைகளை சார்ந்ததாகும். எனவே, இது போன்ற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு இதய ஆரோக்கியத்தை காத்து வாருங்கள்.

இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fruits And Vegetables Prevent From Heart Diseases

Fruits & vegetables are vital for health. These antioxidant-rich are as tasty as they are healthy.