மாரடைப்பு வரப்போகிறது என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். பெரும்பாலும் மக்கள் மாரடைப்பிற்கான அறிகுறிகள் தென்படும் போது அதை கண்டு கொள்ளாமல் சாதாரணமாக விட்டுவிடுவார்கள். இப்படி மாரடைப்பு வருவதற்கு முன் உணர்த்தும் அறிகுறிகளை சாதாரணமாக விட்டுவிட்டால், பின் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும்.

Signs A Person Is Having A Heart Attack

எனவே ஒவ்வொருவரும் மாரடைப்பிற்கான அறிகுறிகளைத் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். மேலும் மாரடைப்பிற்கான அறிகுறிகள் ஒவ்வொவருக்கும் வேறுபடும். இங்கு மாரடைப்பு ஏற்படப் போகிறது என்பதை வெளிப்படுத்தும் சில முக்கிய அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வியர்வை

வியர்வை

இதயத்திற்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவில் இடையூறு ஏற்படும் போது, மூளைக்கு சமிஞ்கை அனுப்பப்படும். அப்படி அனுப்பப்படும் சமிஞ்கை ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அதில் முதன்மையானது அளவுக்கு அதிகமாக வியர்வை வெளியேறும். ஒருவர் கடுமையான வியர்வையால் அவஸ்தைப்பட்டு அசௌகரியத்தை உணர்ந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும் என்று அர்த்தம்.

மார்பு மற்றும் கைகளில் வலி

மார்பு மற்றும் கைகளில் வலி

மற்றொரு பொதுவான அறிகுறி மார்பு மற்றும் கைகளில் கடுமையான வலியை சந்திக்கக்கூடும். அதுவும் தாங்க முடியாத அளவில் வலியை அனுபவிக்க நேரிடும். இம்மாதிரியான தருணத்திலும் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தலைச் சுற்றல்/மயக்க உணர்வு

தலைச் சுற்றல்/மயக்க உணர்வு

மூளைக்கு அனுப்பப்படும் ஆக்ஸிஜனின் அளவு குறையும் போது, தலைச்சுற்றல் அல்லது மயக்க உணர்வை அனுபவிக்கக்கூடும். ஏனெனில் இதய தசைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, இதயத்தால் உடலுக்கு இரத்தத்தை அனுப்ப முடியாமல், மயக்க நிலை ஏற்படும்.

அடிவயிற்று வலி

அடிவயிற்று வலி

வயிற்று வலிக்கும் மாரடைப்பிற்கும் எப்படி சம்பந்தம் இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். மேலும் அடிவயிற்று வலி அசிடிட்டியால் தான் ஏற்படுகிறது என்றும் நினைக்கலாம். ஆனால் குமட்டல் அல்லது வாந்தியுடன் அடிவயிற்றில் வலி இருந்தால், அது மாரடைப்பை சுட்டிக் காட்டுகிறது என்று அர்த்தம். குறிப்பாக அதிகாலையில் இம்மாதிரியான நிலை ஏற்பட்டால், அது மாரடைப்பு வர போகிறது என்று தான் அர்த்தம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Signs A Person Is Having A Heart Attack

How to know that a person is having a heart attack and not just uneasiness? Read on to know more...
Subscribe Newsletter