இதய இரத்த குழாய்களை சுத்தம் செய்யும் பழங்கால ஜெர்மன் வைத்தியம் பற்றி அறிவீர்களா?

Posted By:
Subscribe to Boldsky

தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏராளமான கொடிய நோய்கள் மிகவும் வேகமாக தாக்குகின்றன. குறிப்பாக அதில் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளைத் தான் சிந்திக்கின்றனர். இதற்கு உணவுகளில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் தான் முக்கிய காரணம்.

இக்கொழுப்புக்கள் உடலில் ஆங்காங்கு தங்குவதோடு, இதய இரத்தக் குழாய்களின் சுவர்களில் படிந்து, நாளடைவில் அடைப்பை உண்டாக்கி, பல இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றன. எனவே ஒவ்வொருவரும் சரியான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொள்வதோடு, அவ்வப்போது இதய இரத்த குழாய்களையும் சுத்தம் செய்ய வேண்டும்.

இதய இரத்த குழாய்களை சுத்தம் செய்ய ஓர் அற்புதமான பழங்கால ஜெர்மன் வைத்தியம் ஒன்று உள்ளது. அதைப் பின்பற்றினால் பல பிரச்சனைகளைத் தடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். இப்போது ஜெர்மன் வைத்தியத்தால் கிடைக்கும் நன்மைகளையும், அந்த ஜெர்மன் வைத்தியம் என்னவென்றும் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நன்மை #1

நன்மை #1

இந்த ஜெர்மன் வைத்தியத்தைப் பின்பற்றினால் உடல் சோர்வு, நோய்த்தொற்றுகளால் ஏற்படும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து விலகி இருக்கலாம்.

நன்மை #2

நன்மை #2

முக்கியமாக இந்த ஜெர்மன் வைத்தியம் உயர் கொலஸ்ட்ரால், பெருந்தமனி தடிப்பு போன்ற தற்போது பலரையும் அவஸ்தைப்பட வைத்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கும்.

நன்மை #3

நன்மை #3

ஜெர்மன் வைத்தியம் இரத்த நாளங்களில் ஏற்படும் நெருக்கடி மற்றும் சிறுநீரக கற்களில் இருந்து விடுபட பயனுள்ளதாக இருக்கும்.

நன்மை #4

நன்மை #4

இந்த ஜெர்மன் வைத்தியம் உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுமிக்க டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றுவதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய்களின் தாக்குதல்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

பூண்டு - 4 பெரிய பற்கள்
துருவிய இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை - 4
தண்ணீர் - 2 லிட்டர்
தேன் - சுவைக்கேற்ப

செய்முறை

செய்முறை

முதலில் எலுமிச்சையை நீரில் நன்கு கழுவி, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் பூண்டின் தோலை உரித்துவிட்டு, மிக்ஸியில் போட்டு, அத்துடன் எலுமிச்சை துண்டுகள் மற்றும் இஞ்சி சேர்த்து நன்கு ஒருப்படித்தான கலவையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

வேண்டுமானால், அத்துடன் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம். பின் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் இந்த அரைத்த கலவையை சேர்த்து கொதிக்கும் வரை கிளறி விட்டு, கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி குளிர வைத்து வடிகட், கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

தினமும் இந்த கலவையை ஒரு டம்ளர் குடிக்க வேண்டும். அதுவும் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் பருக வேண்டும்.

எத்தனை நாள் பின்பற்ற வேண்டும்?

எத்தனை நாள் பின்பற்ற வேண்டும்?

இந்த முறையை மூன்று வாரங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால், இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். மீண்டும் இம்முறையைப் பின்பற்ற நினைத்தால், ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் தொடரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தித்திக்கும் தேன் மிட்டாய் இப்போது ஆன்லைனில்..

English summary

Old German Remedy For Cleansing The Arteries

Today, we will reveal the recipe of an incredible old German recipe that will effectively cleanse your arteries, and will inhibit calcification.
Story first published: Wednesday, May 11, 2016, 10:19 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter