மிகச் சீக்கிரம் தூங்கச் செல்கிறீர்களா? ஆண்களே இந்த நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

சீக்கிரம் தூங்குவது உடலுக்கு நல்லது எனக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் விரைவில் தூங்குவது ஆண்களுக்கு பிரச்சனைகளின் அறிகுறி என கூறுகிறார்கள். ஹிரோஷிமா அடாமிக் பாம் கேசுவாலிட்டி என்ற ஆராய்ச்சி நிறுவனம் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஆண்களுக்கான ஆய்வு :

ஆண்களுக்கான ஆய்வு :

விரைவில் சோர்வு உண்டாகி சீக்கிரம் தூங்கச் செல்பவர்களுக்கு அதாவது (8 -9 மணிக்குள்) உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரவதற்கான அறிகுறி என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கிறார்கள். இந்த ஆய்வு ஆண்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டது.

 நோய்களின் அறிகுறி :

நோய்களின் அறிகுறி :

இந்த ஆராய்ச்சி நிறுவனம் சுமார் 2400 பேரிடம் நடத்தியது. இவர்களில் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் விரைவில் தூங்குபவர்கள் என தெரிய வந்துள்ளது.

 உடல் அசதி :

உடல் அசதி :

இதய மற்றும் அதிக ரத்தக் கொதிப்பின் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு உடலில் விரைவில் அசதி உண்டாகி படுக்கைக்கு செல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சரியான தூக்கம் வருவதில்லை.

இதய பாதிப்பு :

இதய பாதிப்பு :

உடலின் உள்ளுறுப்பு செயல் கடிகாரத்தை(Internal body clock ) பாதிப்பதால், இதய செயல்களும் (circadian rhythms)பாதிக்கின்றன. இதனால் விரைவில் களைத்து சீக்கிரம் தூங்கச் செல்கிறார்கள் என தலைமை ஆராய்ச்சியாளர் நோபு சசாகி என்பவர் கூறுகிறார்.

ஆழ்ந்த தூக்கம் :

ஆழ்ந்த தூக்கம் :

இவ்வாறு விரைவில் படுத்துக் கொள்பவர்களின் தூக்கமும் குறைவாகத்தான் இருக்கிறது . இதெல்லாம் ரத்தக் கொதிப்பின் அறிகுறி என்கிறார்கள்.

ஆனால் தாமதமாக தூங்கச் செல்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. அவர்கள் ஆரோக்கியமாக திகழ்கிறார்கள் எனவும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Early Bed Time may an Indication for heart Diseases

Early Bed time May be Sign and Symptom for Heart problem and Blood Pressure For Men
Please Wait while comments are loading...
Subscribe Newsletter