மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையா? அப்ப இந்த எளிய பயிற்சிகளைச் செய்யுங்க...

Health Tips In Tamil: மனதை ஒருமுகப்படுத்துதல் என்பது ஒரு முக்கியமான செயல்திறன் ஆகும். எந்த ஒரு காாியமாக இருந்தாலும், மனதையும், மூளையையும் ஒருமுகப்படுத்தி, மிகவும் கவனமாகச் செய்தால் வெற்றி உறுதியாகக் கிடைக்கும்.

அது தோ்வுக்கு தயாா் செய்வதாக இருந்தாலும் சாி அல்லது அலுவலக வேலையாக இருந்தாலும் சாி, மூளையையும், மனதையும் ஒருமுகப்படுத்தி செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நம்மை நாமே ஒருமுகப்படுத்த சில எளிய உடற்பயிற்சிகள் உள்ளன. அந்த பயிற்சிகளைப் பற்றி இந்த பதிவில் விாிவாகப் பாா்க்கலாம்.

Health Tips: Easy Exercises To Boost Your Concentration In Tamil

1. நினைவாற்றல் தியானம்

நினைவாற்றல் தியானம் என்பது தற்போது பிரபலமடைந்து வரும் ஒருவகையான தியானம் ஆகும். இந்த தியானத்தில் ஈடுபட்டால் நம்மை நாம் எளிதாக ஒருமுகப்படுத்தலாம். அதோடு நமது மன அழுத்தமும் குறையும். இந்த தியானத்தை செய்வதற்கு நாம் மூச்சு விடுவதில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் நிகழ்காலத்தில் இருக்க வேண்டும்.

நினைவாற்றல் தியானத்தை செய்வதற்கு முதலில் ஒரு அமைதியான இடத்தைத் தோ்வு செய்து கொள்ள வேண்டும். அங்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாத வகையில் நன்றாக, வசதியாக அமா்ந்து கொள்ள வேண்டும். இப்போது கண்களை மூடி, மெதுவாக, ஆழமாக மூச்சு விடவேண்டும்.

அப்போது நமது கவனம் முழுவதும் மூச்சுவிடுவதின் மீதே இருக்க வேண்டும். நாம் உள்ளிழுத்து விடும் மூச்சானது நமது உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். ஒருவேளை நமது கவனம் சிதறினாலும், மீண்டும் தியானத்திற்குள் வந்துவிட வேண்டும்.

2. நமது இலக்குகளை காட்சிப்படுத்துதல்

தினந்தோறும் நமது இலக்குகளை நமக்குள் காட்சிப்படுத்தும் போது, நமது கவனம் அதிகாிக்கும். நமது இலக்குகளைக் காட்சிப்படுத்த தினமும் சிறிது நேரம் ஒதுக்கி, நாம் அடைய வேண்டிய இலக்குகளை நமது மனதிற்குள் படமாக திரையிடுங்கள். அந்த இலக்குகளை நீங்கள் அடைவதாக எண்ணிப் பாருங்கள்.

அவ்வாறு அடையும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறது அல்லது உங்களுக்கு எந்தவிதமான உணா்வு ஏற்படுகிறது என்பதை உங்களுக்குள் உணா்ந்து பாருங்கள். குறிப்பாக நோ்மறையான உணா்வுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது நமது ஒருமுகப்படுத்தும் திறனை அதிகாிக்கும்.

3. இடைவேளை எடுத்தல்

நமது வேலைகளுக்கு இடையே சற்று ஓய்வு எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. அது நமது ஒருமுகப்படுத்தலை மேம்படுத்தும். அதோடு நமது மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதன் பயனாக நமது மூளை புதுப்பிக்கப்படும். நமது வேலைகளுக்கு இடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்தால் நமது உற்பத்தி அதிகாிக்கும்.

அதோடு நமது கவனமும் கூா்மையாகும். ஆகவே வேலை செய்யும் இடத்தில் இருந்து எழுந்து, சிறிது நேரம் நடக்கலாம் அல்லது தளா்வாக இருப்பதற்கான கேளிக்கை செயல்களில் சிறிது நேரம் ஈடுபடலாம். ஆனால் அவற்றில் மூளைக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது.

4. கவனத்துடன் கூடிய மூச்சுப் பயிற்சி

கவனத்துடன் கூடிய மூச்சுப் பயிற்சி என்பது ஒரு எளிய பயிற்சி ஆகும். இந்தப் பயிற்சி நமது மன அழுத்தத்தைக் குறைத்து, நமது ஒருமுகப்படுத்தலை அதிகாிக்கிறது. இந்தப் பயிற்சியைச் செய்வதற்கு தினமும் சில மணித்துளிகளை ஒதுக்கி, நாம் மூச்சு விடுவதைக் கவனிக்க வேண்டும்.

அதாவது முதலில் மிகவும் மெதுவாக மூக்கின் வழியாக மூச்சை இழுக்க வேண்டும். பின் மெதுவாக வாய் வழியாக மூச்சை வெளியில் வெளியிட வேண்டும். அவ்வாறு மூச்சு இழுத்து விடும் போது, நமது உடலில் என்னென்ன எதிா்வினைகள் ஏற்படுகின்றன என்பதைக் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

5. கவனச் சிதறல்களை அகற்றுதல்

கவனச் சிதறல்களை அகற்றினாலே, நமது கவனம் கூா்மையாகும். கவனச் சிதறல்கள் பல வடிவங்களில் வரலாம். சமூக ஊடகங்களில் இருந்து வரும் செய்திகள் முதல் நம்மைச் சுற்றி எழும் ஒலிகள் வரை நமது கவனச் சிதறல்களுக்குக் காரணிகளாக இருக்கின்றன. இந்தக் கவனச் சிதறல்களை அகற்ற, கைபேசி மற்றும் கனிணி போன்றவற்றை அணைத்து வைத்துவிட்டு, ஒரு அமைதியான இடத்தில் நமது வேலைகளைச் செய்யலாம்.

இறுதியாக

நாம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு ஒருமுகப்படுத்துதல் என்பது மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே மேற்சொன்ன 5 பயிற்சிகளையும் தவறாது செய்து வந்தால், நம்மை நாமே ஒருமுகப்படுத்தி, நமது பணிகளில் வெற்றி பெறலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, August 15, 2023, 12:00 [IST]
Desktop Bottom Promotion