For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராசிப்படி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகளை தெரிஞ்சுக்கணுமா? அப்ப இத படிங்க...

ஒருவரது ஜாதகத்தின் மூலம் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள முடியும். அதேப் போல் ஜோதிடத்தின் மூலம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் உணவுகளை அறிந்து கொள்ள முடியும்.

|

மனிதன் உயிர் வாழ்வதற்கு உணவு மிகவும் இன்றியமையாதது. அதுவும் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உட்கொண்டு வந்தால், நீண்ட நாட்கள் நோய்களின் தாக்குதல் இல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். தற்போது ஜோதிட நம்பிக்கை மக்களிடையே அதிகம் உள்ளது. எந்த ஒரு காரியத்தை மேற்கொள்ளும் முன்பும் ஜோதிடர்களை சந்தித்து கலந்தாலோசிக்கும் வழக்கம் பலருக்கும் உள்ளது.

What To Stock In Your Fridge According To Your Zodiac Sign

இதற்கு ஜோதிடத்தின் மீது இருக்கும் நம்பிக்கை தான் காரணம். ஏனெனில் பல நேரங்களில் ஜோதிடர்கள் கூறும் விஷயங்கள் அப்படியே நடக்கிறது. ஒருவரது ஜாதகத்தின் மூலம் பலம் மற்றும் பலவீனத்தை தெரிந்து கொள்ள முடியும். அதேப் போல் ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆரோக்கியம் குறித்தும் அறியலாம். ஜோதிடத்தின் மூலம் ஒவ்வொரு ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் உணவுகளை அறிந்து கொள்ள முடியும்.

இந்த கட்டுரையில் எந்த ராசிக்காரர்கள் எந்த உணவுப் பொருட்களை உண்ணலாம், எதை உட்கொள்ளக்கூடாது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து உங்கள் ராசிக்கேற்ற உணவை உட்கொண்டு, ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் நெஞ்செரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள் என்பதால் காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் உணவுப் பொருட்களான பீன்ஸ், கைக்குத்தல் அரிசி, பருப்பு வகைகள், ஆலிவ், லெட்யூஸ், வெள்ளரிக்காய், பசலைக் கீரை, அத்திப் பழம், ஆப்ரிகாட், பூசணிக்காய் மற்றும் வாழைப்பழம் போன்ற குளிர்ச்சித் தன்மையுள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு அதிகளவு கால்சியம் சத்து அவசியம் என்பதால் கேல் அல்லது பால் பொருட்களை அவசியம் சேர்க்க வேண்டும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

கார உணவுகள், உப்புள்ள உணவுகள் மற்றும் ஆல்கஹால்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் தைராய்டு சுரப்பிக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். இந்த ராசிக்காரர்கள் உணவுகளில் அயோடைஸ்டு உப்பை சேர்த்துக் கொள்வதே நல்லது. இவர்கள் உடல் பருமன் அடையாமல் இருக்கவும், சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கவும், கிரான் பெர்ரி, அஸ்பாரகஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், வெள்ளரிக்காய், பசலைக் கீரை, வெங்காயம், முள்ளங்கி, பூசணிக்காய், நட்ஸ், பீன்ஸ் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை அதிகம் உண்ணக்கூடாது.

மிதுனம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் நுரையீரல் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இந்த ராசிக்காரர்கள் கோலா பானங்கள் மற்றும் காபியை அதிகம் விரும்பி குடிப்பார்கள். ஆனால் இது மிகவும் மோசமான பழக்கம். இந்த ராசிக்காரர்கள் பச்சை பீன்ஸ், பீச், ப்ளம்ஸ், பசலைக் கீரை, மீன், கடல் சிப்பி, ஆரஞ்சு, உலர் திராட்சை, ஆப்பிள், கேரட், தக்காளி, பாதாம், இஞ்சி, பூண்டு போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

காபி, வேர் காய்கறிகள் (உருளைக்கிழங்கு, முள்ளங்கி), ஈஸ்ட் உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு செரிமான பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். ஆகவே இந்த ராசிக்காரர்கள் வாய்வு தொல்லையை உண்டாக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த ராசிக்காரர்களுக்கு முட்டையின் மஞ்சள் கரு, தயிர், கடல் சிப்பி, வாழைப்பழம், ஓட்ஸ், சாதம், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், தக்காளி, பூசணிக்காய், வெள்ளரிக்காய், நாட்டு சர்க்கரை போன்றவை சிறப்பான உணவுப் பொருட்களாகும். இந்த ராசிக்காரர்கள் ஆல்கஹால் மற்றும் இனிப்பை அதிகம் விரும்புவார்கள். இந்த மோசமான பழக்கத்தால் இவர்கள் எளிதில் உடல் பருமனடைந்து விடுவதோடு, பித்தக் கல் பிரச்சனையாலும் அவஸ்தைப்படக்கூடும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

எண்ணெயில் பொரித்த உணவுகள், உப்பு, இனிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிகளவு கார்போஹைட்ரேட் தேவை. இந்த ராசிக்காரர்கள் சுறுசுறுப்புடன் இருக்க ஆட்டுப் பாலை குடிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்களின் இதயம் மற்றும் நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்படுவதற்கு அத்திப்பழம், பீச், எலுமிச்சை, அஸ்பாரகஸ், முட்டையின் மஞ்சள் கரு, ஆப்பிள், முழு தானியங்கள், வேர் காய்கறிகளான உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கி மட்டுமின்றி, நட்ஸ், பாதாம், சூரியகாந்தி விதை, ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

கார உணவுகள் மற்றும் பால் பொருட்கள்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நரம்பு மண்டலம் மற்றும் சிறு குடலுக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இந்த ராசிக்காரர்கள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா கொழுப்புகள் நிறைந்த உணவுகளான அவகேடோ, முட்டை, மீன் மற்றும் இதர கடல் உணவுகளை உண்பதால் மூளை சிறப்பாக செயல்படும். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு முழு தானியங்கள், ஓட்ஸ், பழ சாலட், பழச்சாறுகள், எலுமிச்சை ஜூஸ், வாழைப்பழம், ஆரஞ்சி, பச்சை இலைக் காய்கறிகள், முளைக்கட்டிய பயிர்கள், பாதாம், டீ, சூப் போன்றவை சிறப்பான உணவுகளாகும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

இந்த ராசிக்காரர்கள் வயிறு முட்ட எப்போதும் சாப்பிடக்கூடாது மற்றும் சாக்லேட் சாப்பிடக்கூடாது.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் நரம்பு மண்டலத்திற்கு உறுதுணையாக இருக்கும் மற்றும் ஏற்ற இறக்க மனநிலையைத் தடுக்கும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம். இவர்கள் ஆல்கஹால் மற்றும் காபியைத் தவிர்க்க வேண்டும். மேலும் இந்த ராசிக்காரர்கள் இரத்த ஓட்டத்தை நிலையாக பராமரிக்க பட்டாணி, சோளம், உலர் திராட்சை, பாதாம், கைக்குத்தல் அரிசி மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை சாப்பிடடுவது நல்லது. இவர்கள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உண்ண வேண்டியது அவசியம்.

முழு தானியங்கள், ஓட்ஸ், ஆப்பிள், திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, வேக வைத்த காய்கறிகள், தக்காளி, கேரட், தயிர், நட்ஸ் போன்ற உணவுகளும் இந்த ராசிக்காரர்கள் சாப்பிட வேண்டியவைகளாகும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

ஆல்கஹால், கார்போனேட்டட் பானங்கள், ஈஸ்ட் உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் மற்றும் ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது 8 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இந்த ராசிக்காரர்கள் தங்களது மனநிலையைக் கட்டுப்படுத்துவதற்கு கருப்பு செர்ரி, காட்டேஜ் சீஸ், வெங்காயம், அஸ்பாரகஸ் போன்றவற்றை உணவுகளை உண்ண வேண்டும். அதுமட்டுமின்றி, வாழைப்பழம், காலிஃப்ளவர், முள்ளங்கி, தக்காளி, தேங்காய், வேக வைத்த காய்கறிகள், வெள்ளரிக்காய், பீட்ரூட், பீன்ஸ், பருப்பு வகைகள், பாதாம் போன்றவற்றையும் சாப்பிடுவது நல்லது.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

எண்ணெய் உணவுகள், ஈஸ்ட் உணவுகள், உப்பு, இனிப்பு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கல்லீரலுக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். இந்த ராசிக்காரர்கள் சாஸ், சாக்லேட், இனிப்பு போன்றவற்றை அதிகம் உண்பதைத் தவிர்க்க வேண்டும். இவர்கள் அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகளான பீட்ரூட், தக்காளி, ப்ளம்ஸ், சிக்கன் மற்றும் மீன் போன்றவற்றை உண்ண வேண்டும். மேலும் இவர்களுக்கு முழு தானியங்கள், பேரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, வேர் காய்கறிகள், வெங்காயம், அத்திப்பழம், பூண்டு போன்றவை சிறப்பான உணவுப் பொருட்களாகும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

கார உணவுகள், இனிப்புகள், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் ஆல்கஹால்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு இவர்கள் கால்சியம் நிறைந்த உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, கேல், பசலைக்கீரை, சோளம், பட்டாணி, முழு கோதுமை, ஓட்ஸ் மற்றும் கைக்குத்தல் அரிசி போன்றவற்றுடன், சாலட், நற்பதமான பழங்கள், காய்கறிகள், மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

இந்த ராசிக்காரர்கள் வயிறு முட்ட உண்ணக்கூடாது. மேலும் கார உணவுகள் மற்றும் சாக்லேட்டை சாப்பிடக்கூடாது.

கும்பம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிக்க கடல் மீன், நண்டு, டூனா மீன், பசலைக் கீரை, சோளம், பாதாம், வால்நட்ஸ், பேரிக்காய், ஆப்பிள், ஆரஞ்சு, முட்டைக்கோஸ், சோளம், கேரட், தக்காளி, ப்ராக்கோலி, சோயா தயிர், நட்ஸ், பேரிச்சம் பழம், அத்திப் பழம், பூண்டு, இஞ்சி போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

காபி, ஈஸ்ட் உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகள்.

மீனம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இரத்தம், கல்லீரல் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதில் கோதுமை, முழு தானிய செரில்கள், அரிசி, ஓட்ஸ், பழங்களான ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை, பீச் மற்றும் ப்ளம்ஸ், வேக வைத்த காய்கறிகள், பசலைக் கீரை, வெங்காயம், கடல் பாசி, பீன்ஸ், பேரிச்சம் பழம் மற்றும் இயற்கை சர்க்கரை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சாப்பிடக்கூடாத உணவுகள்:

காபி, எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், ஈஸ்ட் உணவுகள், அஸ்பாரகஸ், உப்பு, இனிப்புக்கள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What To Stock In Your Fridge According To Your Zodiac Sign

Here we listed some of the best foods for every astrological signs. Read on to know more...
Story first published: Tuesday, September 10, 2019, 16:54 [IST]
Desktop Bottom Promotion