For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கண்களில் பிரச்சனையே வரக்கூடாதா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்...

கண்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது என்பது முன்பை விட மிகவும் முக்கியமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். அதற்கு கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உணவுகளை உண்ண வேண்டும்.

|

கொரோனா தொற்று உலகெங்கிலும் பரவ ஆரம்பித்ததும், அந்த தொற்றுநோயின் பெருக்கத்தைத் தடுக்க பல மாதங்களாக நாடெங்கிலும் லாக்டவுன் போடப்பட்டது. இதனால் பலர் தங்களின் வீடுகளில் இருந்தே தங்களின் அலுவலக வேலைகளை செய்து வந்தனர். இன்னும் கொரோனா பெருந்தொற்று கட்டுப்படுத்தப் படாத நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாகியும் பலர் வீட்டில் இருந்தே லேப்டாப் மற்றும் கணினிகளில் அலுவலக வேலைகளை செய்து வருகின்றனர்.

Superfoods That Are Good For The Health Of Your Eyes

அலுவலகத்திற்கு சென்றால் கூட நாம், 8-9 மணிநேரம் மட்டும் தான் வேலை செய்திருப்போம். ஆனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது நேரம் காலமில்லாமல் பல மணிநேரங்கள் தொடர்ந்து லேப்டாப், மொபைல் போன்றவற்றை பார்த்தவாறு இருப்பதால், கண்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இம்மாதிரியான சூழ்நிலையில் கண்களின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது என்பது முன்பை விட மிகவும் முக்கியமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

MOST READ: மார்ச் மாதம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு அற்புதமாக இருக்கப் போகுது.. உங்க ராசியும் இதுல இருக்கா?

அதற்கு கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். ஒருவரது கண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்படுவதுடன், ஒழுங்கற்ற தூக்க முறைகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை அதிகம் உண்பது போன்றவை முக்கிய காரணங்களாகும். உங்கள் கண்களில் பிரச்சனைகள் ஏதும் வராமல், கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று நினைத்தால் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சற்று அதிகம் சேர்த்து வாருங்கள். இதனால் கண்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.

MOST READ: அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

இப்போது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள் எவையென்பதைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். கிட்னி பீன்ஸ், தட்டைப்பயறு மற்றும் பிற பருப்பு வகைகளில் பயோப்ளேவோனாய்டுகள் மற்றும் ஜிங்க் போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் ரெட்டினாவிற்கு நல்ல பாதுகாப்பு அளிக்கும் மற்றும் மாகுலர் சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.

நட்ஸ் மற்றும் சூரியகாந்தி விதைகள்

நட்ஸ் மற்றும் சூரியகாந்தி விதைகள்

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்களை உள்ளடக்கிய மற்றொரு உணவுப் பொருள் தான் நட்ஸ். பிஸ்தா முதல் வால்நட்ஸ், பாதாம் போன்ற நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் உள்ளன. ஆய்வுகளில், வைட்டமின் ஈ உடன் பிற ஊட்டச்சத்துக்களை சேர்த்து எடுக்கும் போது, அது முதுமை காலத்தில் ஏற்படும் மாகுலர் சிதைவு பிரச்சனை தீவிரமாவதைத் தடுக்க உதவுவது தெரிய வந்துள்ளது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

நம் அம்மாக்கள் நமக்கு கீரைகளை அடிக்கடி சமைத்துக் கொடுப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஏனெனில் கீரைகள் கண்களுக்கு மிகவும் நல்லது. அதுவும் கேல், பசலைக்கீரை, பாலக் மற்றும் கொலார்டு போன்ற கீரையில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. அதோடு இவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளதால், இது கண் நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்.

வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள்

வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகள்

நமது கண்கள் அடர் நிறங்களைப் பார்க்கும் போது, மூளைக்கு சரியான சிக்னல்களை அனுப்புகிறது. எனவே கேரட், தக்காளி, வண்ணமயமான குடைமிளகாய்கள், ஸ்ட்ராபெர்ரி, பூசணிக்காய், கார்ன் போன்ற வண்ணமிகு காய்கறி மற்றும் பழங்களை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்றவை வளமான அளவில் நிறைந்துள்ளன. அதோடு இந்த பழங்கள் மற்றும் காய்கறிகளின் நிறங்கள், பல்வேறு கண் நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பெர்ரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இவை கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தவை. ஆரஞ்சு, கிரேப் ஃபுரூட், எலுமிச்சை மற்றும் பெர்ரி பழங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இவை கண் புரை மற்றும் மாகுலர் சிதைவின் அபாயத்தைக் குறைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Superfoods That Are Good For The Health Of Your Eyes

Here are some superfoods that are good for the health of your eyes. Read on...
Desktop Bottom Promotion