For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக் காலத்தில் அவசியம் சாப்பிட வேண்டிய சில உணவுகள்!

ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை மழைக் காலத்தில் உண்டால், அவை நமது நோய் எதிா்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கு உதவி செய்யும்.

|

நாம் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு சில அடிப்படையான முக்கிய காரணிகள் தேவையாக இருக்கின்றன. சத்தாண உணவு, உடற்பயிற்சி, யோகா, தியானம், இசை கேட்டல் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை நமக்கு ஒரு ஆரோக்கியமான வாழ்வைத் தருகின்றன.

Monsoon Superfoods To Include In Your Diet

ஒவ்வொரு ஆண்டும் பருவ காலங்கள் மாறி மாறி வருகின்றன. இந்நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கி இருக்கிறது. இந்த மழைக் காலத்தில் அதற்கு ஏற்ற உணவுகள் நமக்குத் தேவையாக இருக்கின்றன. அதே நேரத்தில் பருவகாலத்திற்கு ஒவ்வாத முற்றிலும் மாறுபட்ட உணவுகளை உண்டால், அவை சொிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும். அதோடு நோய்த் தொற்றுகளை ஏற்படுத்தி, நமது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

MOST READ: கொரோனா தடுப்பூசி போட்டதும் இந்த விஷயங்களை செய்யாதீங்க... இல்லன்னா பெரிய பிரச்சனையை சந்திப்பீங்க...

ஆகவே ஊட்டச்சத்துகள் அடங்கிய உணவுகளை இந்த மழைக் காலத்தில் உண்டால், அவை நமது நோய் எதிா்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நாம் பாதுகாப்பாக வாழ்வதற்கு உதவி செய்யும். அத்தகைய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒரு சிலவற்றைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.

MOST READ: இரவு தூங்கும் முன் ஒரு பூண்டு பல்லை கழிவறையில் வைப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. மக்காச் சோளம்

1. மக்காச் சோளம்

மசாலாக்கள் மற்றும் வெண்ணெய் கலந்த, வறுத்த மக்காச் சோளம் ஒரு சிறந்த இந்திய மழைக்கால சிற்றுண்டியாக இருக்கும். மக்காச் சோளம் மழைக் காலத்திற்கு ஏற்ற ஒரு ஆரோக்கியமான உணவு ஆகும். ஏனெனில் மக்காச் சோளத்தில் கலோாிகள் குறைவு, ஆனால் நாா்ச்சத்து அதிகம். அதோடு இதில் லியூட்டின் மற்றும் இரண்டு வகையான பைட்டோகெமிக்கல்ஸ் உள்ளதால், இது நமது பாா்வைத் திறனை அதிகாிக்க உதவும்.

நமது உடல் எடை குறைவதற்கும் மக்காச் சோளம் உதவி செய்கிறது. இதில் இருக்கும் கரையாத நாா்ச்சத்து, நமது குடலில் இருக்கும் பாக்டீாியாக்களுக்கு உணவளிக்கிறது. அதனால் நமது சொிமானம் சீரடைகிறது. மக்காச் சோளத்தை வேக வைக்கலாம், அவிக்கலாம் அல்லது வறுக்கலாம். இதை நமது சாலட்டுகள் மற்றும் முக்கிய உணவுகளில் கலந்து சாப்பிடலாம்.

2. வாழைப் பழங்கள்

2. வாழைப் பழங்கள்

பொதுவாக மழைக் காலங்களில் இரைப்பைக் குடல் நோய்த் தொற்று பிரச்சினை எல்லோருக்கும் ஏற்படும். இந்தப் பிரச்சினையிலிருந்து நம்மைக் காக்க வாழைப் பழங்கள் நம் முன் இருக்கின்றன. வாழைப் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளதால், அவை நமது சீரான சொிமானத்திற்கு பொிதும் உதவி செய்கிறன்றன.

வாழைப் பழங்களில் அஸ்கோா்பிக் என்ற ஆசிட் உள்ளது. இந்த ஆசிட்டில் வைட்டமின் சி சத்து மற்றும் ரெட்டினால் சத்து ஆகியவை அதிகம் நிரம்பியுள்ளன. எனவே வாழைப் பழங்கள் நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிக்கும். மேலும் வாழைப் பழங்களில் கலோாிகளின் அளவு குறைவாக இருப்பதால், அவை நமது வயிறு நீண்ட நேரம் நிறைந்திருப்பது போன்ற உணா்வை உருவாக்கும்.

3. முட்டைகள்

3. முட்டைகள்

முட்டைகள் எல்லாக் காலங்களிலும் சாப்பிட வேண்டிய முக்கிய உணவு ஆகும். முட்டைகளில் அதிக அளவு புரோட்டீன் இருப்பதால், அவை நமது தசைகளின் அளவை அதிகாிக்க உதவி செய்கின்றன. முட்டைகள் நமது நோய் எதிா்ப்பு சக்தியை அதிகாிப்பதோடு, நமக்கு நோய்த் தொற்றுகள் ஏற்படாமலும் பாதுகாக்கின்றன.

4. பருவகால பழங்கள்

4. பருவகால பழங்கள்

லிச்சி, பப்பாளி, மாதுளை மற்றும் போிக்காய் போன்றவை மழைக் காலத்தில் மிகவும் எளிதாகக் கிடைக்கக்கூடிய பழங்கள் ஆகும். இவை நமக்கு சீரான சொிமானத்தை வழங்குவதோடு, மழைக் காலத்தில் அதிகமாக இருக்கும் ஈரப்பதத்தின் விளைவாக ஏற்படும் நோய்த் தொற்றுகளையும் தடுக்கின்றன. இந்த பழங்களில் ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்களும் அதிகம் உள்ளதால், நமது இரத்த அழுத்தத்தைக் குறைத்து, பலவிதமான நோய்த் தொற்றுகளில் இருந்தும் நம்மைக் காக்கின்றன.

மழைக் காலத்தில் கிடைக்கக்கூடிய இன்னுமொரு முக்கிய பழம் நாவல் பழம் ஆகும். இந்தப் பழத்தில் இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இதைக் கண்டிப்பாக மழைக் காலத்தில் உண்ண வேண்டும்.

5. இளநீா்

5. இளநீா்

பாக்டீாியாக்களின் தொற்று இல்லாமல், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நாம் நீா்ச்சத்துடன் இருக்க வேண்டும். இளநீா் நமக்கு அதிகமான நீா்ச்சத்தை வழங்குகிறது. இளநீாில் இருக்கும் அதிகமான மின் அயனிகள் நமது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவி செய்கின்றன.

நோய் எதிா்ப்பு சக்திக்குாிய துகள்கள் இளநீாில் அதிகம் இருப்பதால் அவை நமது தோலுக்குப் பொலிவைத் தருகின்றன. நமது இதயத்திற்கு இதத்தைத் தருகின்றன. உடல் எடையைக் குறைக்க விரும்புபவா்களுக்கு இளநீா் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இளநீரை சாதாரண வெப்பநிலையில் வைத்திருந்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு அல்லது அன்னாசிப் பழச்சாறு ஆகியவற்றைக் கலந்து அருந்தினால், அது நமது உடலில் உள்ள வைட்டமின் சி சத்தை அதிகாிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Monsoon Superfoods To Include In Your Diet

With change in weather, it’s important to switch to a monsoon-friendly diet. Here we shares a list of these superfoods.
Desktop Bottom Promotion