For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய உணவுகளில் ஒவ்வொருவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்!

இந்தியாவை மட்டுமே எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு உணவு பழக்கம் வேறுபடுகிறது. மண் வகை, பருவநிலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தொழில் இவற்றை மையமாக கொண்டு உணவு பழக்கமும் மாறுகிறது

|

அன்றாட வாழ்வில் முக்கிய இடத்தை பிடிப்பது உணவு. வயிற்றுக்கு சாப்பிட்ட காலம் போய், நாவிற்கு பிடித்த உணவுகளை தேடி தேடி சாப்பிடும் காலத்தில் இப்போது நாம் வாழ்ந்து வருகிறோம். உலகில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான உணவு பழக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்திய உணவு என்பது தனி இடத்தை பிடித்துள்ளது.

MOST READ: உங்களுக்கு பிபி, கொலஸ்ட்ரால் வராம இருக்கணுமா? அப்ப மறக்காம தினமும் இத கொஞ்சம் சாப்பிடுங்க...

இந்தியாவை மட்டுமே எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு உணவு பழக்கம் வேறுபடுகிறது. மண் வகை, பருவநிலை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் தொழில் இவற்றை மையமாக கொண்டு உணவு பழக்கமும் மாறுகிறது. இப்போது நாம், இந்திய உணவுகளில் ஆரோக்கிமான மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாப் 5 ஆரோக்கியமான இந்திய உணவுகள்

டாப் 5 ஆரோக்கியமான இந்திய உணவுகள்

இந்திய உணவை பொறுத்தவரை, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுவதே அதன் முக்கிய பங்காகும். ஏராளமான பாரம்பரிய உணவுகள் இந்தியாவில் பிரலமானவையாக உள்ளன. அவற்றில் ஆரோக்கியமானவற்றை இப்போது பார்க்கலாம்...

 பச்சைப்பயறு தோசை

பச்சைப்பயறு தோசை

சாதாரண தோசை என்பது உளுந்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆனால், அதை விட பச்சைப் பயறில் செய்யப்படும் தோசையானது மிகவும் ஆரோக்கியமானது. எளிதில் செரிப்பதோடு, புரதம், மக்னீசியம், காப்பர், பொட்டாசியம், ஜிங்க் மற்றும் வைட்டமின் பி என இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். அதுமட்டுமின்றி, ஒரு பச்சைப் பயறு தோசையில் வெறும் 59 கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது.

கீரை சேர்த்த தயிர் பச்சடி

கீரை சேர்த்த தயிர் பச்சடி

பெரும்பாலும் தயிரானது ஒரு கோடைகால உணவு. இதிலுள்ள குளிர்ச்சித்தன்மை தான் இதற்கு காரணம். அப்படிப்பட்ட தயிரில் கீரையை சேர்க்கும் போது அது மேலும் ஆரோக்கியத்தை கூடுதலாக வழங்குகிறது. சருமம் முதல் செரிமானம் வரை என பல்வேறு ஆரோக்கிய பலன்களை இது வாரி வழங்குகிறது. இவற்றில் முக்கியமானவை என்னவென்றால், ஒரு கப் தயிர் பச்சடி சாப்பிடுவதன் மூலம் வெறும் 66 கலோரிகள் மட்டுமே கிடைக்கும்.

வெஜிடபிள் கோதுமை உப்புமா

வெஜிடபிள் கோதுமை உப்புமா

பெரும்பாலானோர் வீட்டில் காலை உணவாக இடம் பெறுவது இந்த உப்புமா தான். வெள்ளை ரவை உப்புமாவை விட, கோதுமை உப்புமா சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இதில் மக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. சம்பா ரவை என்றழைக்கப்படும் இந்த ரவையுடன் காய்கறிகளை சேர்த்து சமைத்து சாப்பிடுவதன் மூலம் குறைந்த கலோரிகளே உடலுக்கு கிடைப்பதால், உடல் எடை குறைப்பதற்கும் இது உதவக்கூடும். ஒரு கப் வெஜிடபிள் கோதுமை உப்புமாவில் 94 கலோரிகள் கிடைக்கிறது.

வெண்பொங்கல்

வெண்பொங்கல்

பொங்கல் என்பது தமிழ்நாட்டில் மிகவும் முக்கியமான உணவாகும். எந்தவொரு விஷேசமாக இருந்தாலும் சரி, காலை உணவாக வெண்பொங்கல் தான் இடம்பெறும். அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து செய்யப்படும் இந்த பொங்கலானது உடலுக்கு தேவையான புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவை சமன்செய்கிறது. சுலபமாக ஜீரணமாகக்கூடிய இந்த பொங்கலில் குறைவாக கொழுப்புச் சத்தும், குறைந்த கலோரிகளும் மட்டுமே உள்ளன. கொஞ்சமாக நெய் சேர்த்து வீட்டிலேயே செய்யப்படும் பொங்கலானது, சிறந்த காலை உணவு என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

பருப்பு ரொட்டி

பருப்பு ரொட்டி

ரொட்டி என்பது இந்தியாவில் முக்கிய உணவாக உள்ளது. அதுவே, பருப்பு கொண்டு செய்யப்படும் ரொட்டியில் புரதச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதோடு, குறைவான கலோரியை மட்டுமே தருகிறது. ஒரு ரொட்டி சாப்பிட்டுவதன் மூலம், 97 கலோரி கிடைக்கும்.

டாப் 5 ஆரோக்கியமற்ற இந்திய உணவுகள்

டாப் 5 ஆரோக்கியமற்ற இந்திய உணவுகள்

நாவின் சுவையை அதிகரிக்க செய்ய உணவுகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதன் விளைவே ஆரோக்கியமற்ற உணவுகள். துரித உணவு முதல் எண்ணெய் பலகாரங்கள் வரை அனைத்துமே உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது தான். இவை அனைத்தும் தெரிந்தும் நாம் அவற்றை விரும்பி சாப்பிடுவது தான் கொடுமை. இங்கே, ஆரோக்கியமற்ற உணவுகளில் முக்கியமான 5 கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை சாப்பிடுவதை தவிர்ப்பது சிறந்தது.

சமோசா

சமோசா

இந்தியாவின் எல்ல மாநிலங்களிலும், எல்லா உணவு கடைகளிலும் சுலபமாக கிடைக்கக்கூடியது தான் சமோசா. இதிலுள்ள அதிகப்படியான கொழுப்பு, இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஒரே எண்ணெயை பலமுறை சுட வைத்து சுட வைத்து போடுவதால் இதில் அதிகமான ட்ரான்ஸ் கொழுப்பு உருவாகி உடலில் பாதிப்புகளை அதிகரித்துவிடும். அதுமட்டுமல்லாது, கலோரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஒரு சமோசாவில் சுமார் 268 கலோரிகள் உள்ளன.

பக்கோடா

பக்கோடா

நொறுக்கு தீனிகளில் பெரும்பாலானோரை கவர்வது பக்கோடா தான். எல்லா நேரங்களிலும் விரும்பி சாப்பிடப்படும் இந்த பக்கோடா உடலுக்கு நல்லதல்ல. ஏனென்றால், இதை சாப்பிட்டால் உடலில் கெட்ட கொழுப்பில் அளவு அதிகரித்து, நல்ல கொழுப்பின் அளவு குறைந்துவிடும். அதுமட்டுமல்லாது, 8 பக்கோடாவில் சுமார் 200 கலோரிகள் உள்ளன.

வடா பாவ்

வடா பாவ்

வடமாநிலங்கள் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும் வடா பாவை விரும்பி சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பிரட் உடன் சுத்திகரிக்கப்பட்ட மாவினால் செய்யப்பட்ட வடையை சேர்ப்பது தான் இதனை ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடுகிறது. ஒரு வடா பாவில் மட்டும் சுமார் 221 கலோரிகள் உள்ளன. எனில் பார்த்துக்கொள்ளுங்கள், இதை இனிமேலும் சாப்பிட வேண்டுமா என்று?

வடை

வடை

தென் இந்தியாவின் முக்கிய தீனி வகையில் வடையும் ஒன்று. ஒரே ஒரு வடையில் மட்டும் சுமார் 226 கலோரிகள் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அது தான் உண்மை. ஒரே எண்ணெயில் மீண்டும் மீண்டும் பொரித்தெடுக்கப்படும் வடையை சாப்பிட்டே ஆக வேண்டுமா என யோசியுங்கள்.

பூரி உருளைக்கிழங்கு

பூரி உருளைக்கிழங்கு

பூரி உருளைக்கிழங்கு செய்முறை ஒவ்வொரு இடங்களிலும் வேறுபடக்கூடும். இருப்பினும், பொதுவாக வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து மசாலா, காய்கறிகள் சேர்ப்பது பெரும்பாலான இடங்களில் செய்முறை. இதனை எப்படி சமைத்தாலும், நாம் சாப்பிடும் பூரி நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும். ஒரு தட்டு பூரி உருளைக்கிழங்கு சாப்பிடுவதன் மூலம் உடலில் 311 கலோரிகள் அதிகரித்துவிடும்.

இந்திய உணவுகளில் ஆரோக்கிய உணவுகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் என இரண்டுமே உள்ளது. உணவை தேர்ந்தெடுப்பது அனைத்தும் உங்கள் கைகளில் தான் உள்ளது. சரியானதை தேர்ந்தெடுத்து, நல்ல ஆரோக்கியத்தை பெறுவது உங்கள் விருப்பம். உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து, சரியான முடிவை எடுங்கள், ஆரோக்கியம் பேணுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian Foods: The Good, The Bad And The Ugly

The food in different parts of India varies accordingly. Here, we take a look at some healthy and unhealthy Indian foods.
Desktop Bottom Promotion