For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசுத்தமான கல்லீரலை சுத்தம் செய்யணுமா? இத காலையில தினமும் ஒரு டம்ளர் குடிங்க...

|

மனிதன் உயிர் வாழ உணவுகள் மிகவும் அவசியம். நாம் பிறந்ததில் இருந்து பழங்கள் உணவுகளின் இன்றியமையாத பாகங்களில் ஒன்றாகும். இவை நமக்கு ஏராளமான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் மற்ற அத்தியாவசிய சத்துக்களை நமக்கு வழங்குகின்றன. வயது அதிகரிக்கும் போது பெரும்பாலான மக்கள் பழங்களை சாப்பிட மறந்து விடுகின்றனர். ஆனால் பழங்கள் நம் உடலில் உள்ள பல உறுப்புக்களின் செயல்பாட்டிற்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான சத்துக்களைக் கொண்டுள்ளது.

MOST READ: ஜனவரி மாதத்தைப் பற்றி பலருக்கும் தெரியாத சில சுவாரஸ்யமான உண்மைகள்!

இந்த புத்தாண்டு தினத்தில் நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைத்தால், உங்களின் அன்றாட உணவுகளில் பழங்களை தவறாமல் சேர்த்து வருவதாக ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இப்படிப்பட்ட தீர்மானம் பல்வேறு நன்மைகளை ஒருவருக்கு வழங்கும்.

MOST READ: தப்பித்தவறியும் புத்தாண்டு அன்னிக்கு இதெல்லாம் செஞ்சுடாதீங்க.....

நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. இக்கட்டுரையில் ஒருவரது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கவும் உட்கொள்ள வேண்டிய முக்கியமான பழங்களும், அப்பழங்கள் எந்த உறுப்புகளுக்கு நன்மை அளிக்கக்கூடியது என்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கல்லீரலுக்கு பீட்ரூட்

கல்லீரலுக்கு பீட்ரூட்

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் மற்றும் பீட்டாலைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளது. இது கல்லீரலுக்கு நன்மை அளிக்கக்கூடியது. மேலும் இது உடலினுள் உள்ள அழற்சி அல்லது உட்காயங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கவும் உதவும். பீட்ரூட்டை ஜூஸ் வடிவில் ஒருவர் உட்கொண்டால், உடலை சுத்தம் செய்யும் நொதிகள் அதிகரிப்பதாக எலி கொண்டு மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

எனவே நீங்கள் இந்த வருடம் ஆரோக்கியம் குறித்து தீர்மானம் ஏதாவது எடுக்க நினைத்தால், ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை தினமும் காலை உணவின் போது குடியுங்கள். இதனால் கல்லீரல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

செரிமானத்திற்கு ராஸ்பெர்ரி

செரிமானத்திற்கு ராஸ்பெர்ரி

ராஸ்பெர்ரி பழத்தில் உள்ள 2 அத்தியாவசியமான உட்பொருள் என்றால் அது நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து. இவை இரண்டுமே மலச்சிக்கலைத் தடுக்க இன்றியமையாதவைகள். மேலும் இவை செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவும். அதோடு இந்த பழத்தை ஒருவர் அடிக்கடி உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் பராமரிக்கப்படும் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

இதயத்திற்கு ஸ்ட்ராபெர்ரி

இதயத்திற்கு ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இதய நோயைத் தடுக்க உதவும் பாலிஃபீனால்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு ஆய்வின் படி, ஸ்ட்ராபெர்ரியில் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும் அந்தோசயனின்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு இதில் பெருந்தமனி தடிப்பு அபாயத்தைக் குறைக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இப்பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்தும் உள்ளது.

கண்களுக்கு ஆரஞ்சு

கண்களுக்கு ஆரஞ்சு

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது கண் ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், கண் பார்வையை மேம்படுத்தவும் முக்கியமான சத்தாகும். இந்த வைட்டமின் கண்களில் ஆரோக்கியமான இரத்த நாளங்களை உருவாக்க உதவுகிறது. இதனால் இது கண்புரை வளர்ச்சியை எதிர்த்துப் போராடுவதோடு, வயதான காலத்தில் ஏற்படும் மாகுலர் திசு சிதைவிற்கு எதிரான ஒரு தீர்வாகவும் அமைகிறது.

எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். சமீபத்திய ஆய்வில், ஆரஞ்சு பழச்சாற்றைத் தவறாமல் குடிக்கும் பெரியவர்களுக்கு பத்து ஆண்டுகளில் கண்புரை வருவதற்கான வாய்ப்பு சுமார் 33 சதவீதம் குறைவாக இருப்பதாகக் காட்டுகிறது.

நுரையீரலுக்கு திராட்சை

நுரையீரலுக்கு திராட்சை

உணவில் திராட்சை மற்றும் பெர்ரி பழங்களை சேர்ப்பது உங்கள் நுரையீரலுக்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும். வயது அதிகரிக்கும் போது 'அந்தோசயனின்கள்' என்று அழைக்கப்படும் ப்ளேவோனாய்டை அதிக அளவில் சாப்பிட்டவர்களின் நுரையீரல் செயல்பாடுகள் சிறந்த முறையில் பராமரிக்கப்படுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த அந்தோசயனின்கள் திராட்சை, அவுரிநெல்லிகள் மற்றும் சிவப்பு திராட்சை போன்ற பழங்களில் காணப்படுகின்றன. திராட்சையில் ரெஸ்வெராட்ரோலும் உள்ளது. இது சுவாசக் குழாய்களில் உள்ள உயிரணுக்களில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் சேர்மங்களின் வெளியீட்டைத் தடுத்து நுரையீரலை சுத்தப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Fruits That You Should Include In Your Diet In 2020 For Its Health Benefits

Fruits are one of the richest sources of vitamins, which are essential for our body. One should eat a minimum of two portions of fruits in a day...
Story first published: Wednesday, January 1, 2020, 17:13 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more